இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி [TVS Motor Company (TVSM)], முற்றிலும் புத்தம் புதிய 2025 TVS Apache RTR 200 4V-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. டிவிஎஸ்-ன் 20 ஆண்டுகாலமாக பந்தயக்களத்தில் கொண்டிருக்கும் நீண்ட மரபு, பொறியியல் நிபுணத்துவம் மற்றும் உலகளவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களிடம் பெற்றிருக்கும் ஏகோபித்த நம்பிக்கையைக் கொண்டாடும் வகையில் புதிய மோட்டார் சைக்கிளை களமிறக்கி இருக்கிறது. விறுவிறுப்பான பந்தயக் களத்தின் குணாதிசயங்களுடன் உருவாக்கப்பட்டு, சாலைகளில் கம்பீரமாக வலம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் TVS Apache மோட்டார் சைக்கிள்கள் பந்தயக் களத்தின் செயல்திறனை அளிக்கின்றன. அபார சக்தி, எந்த சூழலிலும் எளிதில் கையாளுவதற்கான கட்டுப்பாடு மற்றும் மிகவும் மேம்பட்ட இயந்திரத்தின் செயல்பாடு ஆகிய அம்சங்களை எதிர்பார்க்கும் இருசக்கர ப்ரியர்களுக்காகவே மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட Apache வாகனங்கள், செயல்திறன் பிரிவில் ஈடுஇணையற்ற நம்பகத்தன்மை மற்றும் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிப்பதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
OBD2B தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில், பயணிக்கும் அனுபவத்தை இதுவரையில் இல்லாத அம்சங்களுடன் மேம்படுத்தியிருக்கும் தயாரிப்பாக TVS Apache RTR 200 4V வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலையில் செல்லும் போது எளிதில் கையாள்வதற்கு ஏற்ற வகையில் உயரிய கட்டுப்பாடு மற்றும் வளைவுகளில் துல்லியமாக திரும்பும் அம்சங்களுக்காகவே புதிய 37மிமீ அப்சைடு டவுன் (USD) முன்பக்க சஸ்பென்ஷனைக் [37mm Upside Down (USD) front suspension] கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோஃபோர்ம் செய்யப்பட்ட ஹேண்டில்பார் [hydroformed handlebar] பயணிக்கு எந்தவொரு சூழலிலும் லாவகமாக கையாள உதவுகிறது. அதேபோல் சாலையின் தன்மை மாறும் சூழலிலும் மோட்டார் சைக்கிளின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. TVS Apache -ன் பிரபலமான பந்தய குணாதிசயத்தை, அதாவது racing DNA-வை உள்ளடக்கிய இந்த மோட்டார் சைக்கிள், மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம், பந்தயக் களத்தில் கம்பீரமாக வலம் வரும் அதன் தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, அதை வெளிப்படுத்தும் வகையில் உருவான வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் துல்லியமான பொறியியல் நிபுணத்துவம் ஆகியவற்றை அசத்தலாக ஒருங்கிணைத்து இருக்கிறது.
அழகியலை கம்பீரத்துடன் இணைக்கும் வகையில் இந்த புதிய மோட்டார் சைக்கிள் சிவப்பு அலாய் வீல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸுடன் அசத்தலான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளாஸி ப்ளாக், மேட் ப்ளாக் மற்றும் கிரானைட் க்ரே [Glossy Black, Matte Black, Granite Grey.] ஆகிய மூன்று கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது.
அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தும் உயரிய செயல்திறனுக்கான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, TVS Apache RTR 200 4V, 9,000 rpm-ல் 20.8 PS உச்ச சக்தியையும் 7,250 rpm-ல் 17.25 Nm முறுக்குவிசையையும் வெளிப்படுத்துகிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டுயல்-சேனல் ஏபிஎஸ் [dual-channel ABS] மிகவும் மேம்பட்ட பிரேக்கிங் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மூன்று சவாரி முறைகள் (நகர்ப்புறம், ஸ்போர்ட் மற்றும் மழை) [Urban, Sport, and Rain], ஸ்லிப்பர் க்ளட்ச் [slipper clutch], அட்ஜஸ்ட்டபிள் க்ளட்ச் [adjustable clutch] மற்றும் பிரேக் லீவர்கள் [brake levers], ப்ளூடூத் மற்றும் வாய்ஸ்-அசிஸ்டுடன் கூடிய TVS SmartXonnect™ மற்றும் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் DRL-களுடன் கூடிய முழுமையான டிஜிட்டல் க்ளஸ்டர் என உற்சாகத்தை வரவழைக்கும் அம்சங்கள் இந்த புதிய மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றுள்ளன.
2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட TVS Apache RTR 200 4V, அப்பாச்சி வாகனங்களின் வரிசையில், அனைத்து தரப்பு இரு சக்கர வாகனப்ரியர்களிடையே பெரும் பாய்ச்சலுடன் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்பு வெளியான அப்பாச்சி வாகனங்களை விட கம்பீரமாக, நேர்த்தியாக மற்றும் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதால், ஒரு புதிய வடிவமைப்பு மொழியை அறிமுகப்படுத்தியது.
அடுத்தடுத்த தருணங்களில், இவ்வாகன பிரிவிலேயே முதல் முறையாக 3 விதமான சவாரி முறைகளை [(Sport, Urban, Rain)], அறிமுகப்படுத்தியது. இதேபோல் ப்ரேக் பிடிக்கும் போது பின்புற சக்கரம் தூக்காமல் இருக்க உதவும் ரியர் லிஃப்ட்-ஆஃப் பாதுகாப்புடன் [Rear Lift-off Protection] கூடிய டுயல் சேனல் ஏபிஎஸ் [Dual Channel ABS] மற்றும் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் க்ளட்ச் [race-tuned slipper clutch] போன்ற அம்சங்களை இவ்வாகனப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இது தனது பிரிவில் ஸ்போர்ட், அர்பன், ரெயின் என மூன்று விதமான பயண முறைகளை அறிமுகப்படுத்தியது வாகனம் ஓட்டுபவர்களுக்கு வெவ்வேறு சாலை நிலைமைகளுக்கு ஏற்ப செயல்திறனை மாற்றியமைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. பின்புற லிஃப்ட்-ஆஃப் பாதுகாப்புடன் கூடிய டுயல் சேனல் ஏபிஎஸ்-ன் அறிமுகம் மிக வேகமாக செல்லும் போது மேற்கொள்ளும் அதிவேக பிரேக்கிங்கின் போது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்தது. மோட்டார் சைக்கிளின் அசத்தலான வடிவமைப்பு மற்றும் லைட்டிங் ஆகிய இரண்டும் சிக்னேச்சர் DRL களைக் கொண்ட LED ஹெட்லேம்பை கூடுதலாக இணைத்ததன் மூலம் அடுத்தகட்டத்தை எட்டின. இதனால் அப்பாச்சிக்கென ஒரு தனித்துவமான, நவீன தோற்ற அடையாளம் உருவாகி இருக்கிறது.
புதிய அப்பாச்சி அறிமுகம் குறித்துப் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் திரு. விமல் சம்ப்லி [Mr. Vimal Sumbly, Head Business - Premium, TVS Motor Company] பேசுகையில், "TVS Apache பிராண்ட் என்பது ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமல்ல... இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் 6 மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களைக் கொண்டிருக்கும் வேகமும் விவேகமுள்ள சமூகத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகும். எங்கள் ரேசிங் டிஎன்ஏ-வினால் களமிறக்கப்படும் TVS Apache மோட்டார் சைக்கிள்கள் அபார செயல்திறன், துல்லியம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் சக்திவாய்ந்த கலவையை தொடர்ந்து வழங்கிவருவதால் உலகளவில் இளைஞர்கள் மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்களின் கற்பனையை கவரும் வாகனமாகி இருக்கிறது.. மேம்படுத்தப்பட்ட 2025 TVS Apache RTR 200 4V வாகனமும் இதே கம்பீரமான மரபைத் தொடர்கிறது. அடுத்த தலைமுறை இருசக்கர வாகன ப்ரியர்களுக்கு ஒவ்வொரு சவாரியிலும் சிலிர்ப்பூட்டும், பந்தயக் களத்தின் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆகிய இரு அம்சஙகளிலும் புதிய வரம்புகளை உருவாக்கி இருக்கிறோம்’’ என்றார்.
TVS Apache ஒரு மகத்தான மைல்கல்லைக் கடந்து, உலகளவில் 6 மில்லியன் விசுவாசமிக்க ஆர்வலர்களைக் கொண்ட வலுவான சமூகமாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் இதைச் சாதிக்க பல ஆண்டுகள் ஆனாலும், இப்போது அசுர வேகமெடுத்துள்ளது. கடந்த 1 மில்லியன் ரைடர்களை ஒரு சாதனை நேரத்தில் மிக துரிதமாக எட்டியுள்ளது. இந்த விரைவான வளர்ச்சி, Apache பிராண்டின் அதிகரித்து வரும் பிரபலத்தையும், ஆற்றல், துல்லியம் மற்றும் ஆர்வத்துடன் பயணிப்பதையே வாழ்நாள் விருப்பமாக கொண்டிருக்கும் பந்தய வீரர்களின் பெருகிவரும் நட்புறவையும் பிரதிபலிக்கிறது.
தரம் மேம்படுத்தும் ஒவ்வொரு தருணத்திலும், Apache RTR 200 4V தனது பிரிவில் புதிய அளவுகோலை வரையறைப்படுத்துவதில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ரேசிங் குணாதிசயமுள்ள பொறியியல் நுட்பத்தை, நவீன யுக வாகனப்ரியர்களுக்காக அன்றாட பயன்பாட்டு அம்சங்களுடன் இரண்டறக் கலந்து புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. 2025 TVS Apache RTR 200 4V இந்தியா முழுவதும் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவன டீலர்ஷிப்களில் கிடைக்கும், விலை ரூபாய் 1,53,990 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)-ல் தொடங்குகிறது.
0 கருத்துகள்