உடல்மொழி அறிவோம் - பகுதி 1

இவ்வுலகின் தலைசிறந்த மருத்துவர் நம் உடல்தான் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு மருத்துவம் தேவைப்படாது என்ற உண்மையான கருத்தை உலகுக்குப் புரிய வைக்கும் முயற்சியாக இந்த தொடரை அக்குஹீலர் செள.ஜெயவள்ளி எழுதுகிறார்.

உடல்மொழி அறிவோம் - பகுதி 1

சமீபத்தில் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கப் பெண் என்னருகே வந்து அமர்ந்தார். எங்கோ இதற்கு முன்பு பரீட்சியமானவர் போல் இருக்கவும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். கொஞ்ச நேரம் நின்னாலே காலெல்லாம் நம நமங்குது மா. 

எங்க... முன்னாடி மாதிரியெல்லாம் ஒரு இடத்துக்கு போயிட்டு வரமுடியுது... என்று சலித்தபடி பேசிக்கொண்டிருந்தார். 

பேசிக்கொண்டே தன் கையோடு வைத்திருந்த பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொண்டார். அதை பார்த்த என்னிடம், நான் கேட்க்காமலே, சுகர் இருக்கும்மா... எட்டு வருஷமா. இந்த மாத்திரை இல்லைனா நம்ம பொழப்பு என்னாகுறது என்றபடி மெதுவாக அவருடைய பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டார்.

அதே நேரத்தில் எதிர் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் யாரோடோ போனில் பேசிக்கொண்டிருந்தார். போய் காட்டிட்டு இப்பதான் வீட்டுக்கு போயிட்ருக்கோம். ஊசி போட்டாங்க. மாத்திரை எழுதிக் குடுத்திருக்காங்க. ஒன்னுமில்லையாம்... ரெண்டு நாள் மாத்திரை சாப்பிட்டா சரியாயிடுமாம்... என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் இதயம் தன்னை உலுக்கிக் கொண்டு மீண்டும் துடிக்கத் துவங்கியது.

எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என் மனித குலம். மாத்திரைகளின் பிடியில் இருந்து கொண்டா அது தன் சுதந்திர சுவாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது? இந்த வேளையில் நிச்சயம் நினைவுகூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள் நம் பாட்டிமார்களும், தாத்தாமார்களும். நூறைக் கடந்தும் வாழ்ந்தவர்கள் அந்த காலத்து தாத்தா & பாட்டிகள். என்னுடைய தாத்தா தென்னூற்று இரண்டை கடந்தும், இறுதிவரை இன்னொருவருடைய துணையில் எந்த வகையிலும் வாழாதவர். இன்னொருவருடைய பிடியைக்கூட எந்த நேரத்திலும் அனுமதிக்காதவர்.

அவர் எந்த மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. அதுபோல் தாத்தாவோடு பிறந்தவர்கள் மொத்தம் ஒண்பது பேர். அத்தனை பேரும் வீட்டில் நடந்த சுகப்பிரசவத்தால் உலகினை ரசிக்க வந்தவர்கள். அப்போதெல்லாம் தாய்மார்கள், பிரசவம் முடிந்த ஓரிரண்டு மணி நேரத்தில் தன்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கத் தயாராகி விடுவார்களாம். ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து தனக்கான சில அத்தியாவசியத் தேவைகளைக் கூடத் தனக்கு செய்துகொள்ள முடியாத நிலையில் தான் இன்றைய தாய்மார்கள் இருக்கிறார்கள். காரணம் சீரற்ற உணவுப்பழக்கம், பயம், தான் வாழ்ந்து வரும். தன்னை எப்போதும் பாதுகாத்து வரும் இந்த இயற்கையின் மீதான நம்பிக்கை இல்லாததுதான்.

இயற்கையை மிஞ்சியது மனித ஆற்றல் என்றால் பலரும் மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைமுகமாக அப்படிப்பட்ட ஓர் எண்ணத்துடன்தான் உங்கள் வாழ் நாள் முழுவதையும் கழிக்கிறீர்கள். இயற்கையிடம் தன்னை முழுதாய் ஒப்படைத்துவிட்ட எந்த உயிரினங்களுக்கும் சுகப்பிரசவத்தைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை. 

மனித உயிரினம் மட்டும் இயற்கையில் இருந்து விதிவிலக்காகி விட்டது வேதனையான உண்மை. நம்முடைய இந்த நிலைக்குக் காரணம் இயற்கையிடம் நம்மை முழுதாய் ஒப்படைக்க பயம். நம்முடைய இந்த பயத்திற்கும், நம்பிக்கையின்மைக்கும், மருத்துவமனைகளின் வாசலில் நிற்கும் கூட்டத்திற்கும் காரணம் நம்மை நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமை தான்.

இதை நினைக்கையில் ஒரு கதை கூட எனக்கு ஞாபகம் வருகிறது. வெகு நாட்களாய் கையில் ஒரு பையுடன் ஒருவன் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானாம். சிலர் அவனிடம் அது பற்றி கேட்டபோது, என் தந்தை இறக்கும் தருவாயில் இந்தப் பையை என்னிடம் கொடுத்து, எந்தச் சூழ்நிலையிலும் இதை விட்டுவிடாதே. பத்திரமாக வைத்துக்கொள் என்று கூறிவிட்டு இறந்தாராம். அதிலிருந்து அவன் தன்னை விட அந்தப் பையை அதிகம் பாதுகாத்து வந்தான். பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்த பின்னும் அந்தப் பையை வெகு பாதுகாப்பாய்க் காப்பாற்றி வந்தான்.

ஒரு நாள் அந்த பிச்சைக்காரன் இறந்துவிட, அவனுடன் சேர்த்து அந்த பையையும் புதைக்கலாம் என்று ஊர் மக்கள் முடிவு செய்தனர். புதைப்பதற்கு முன்பு பையில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம் என திறந்து பார்த்தார்களாம். அதில் ஏராளமான இரத்தினங்களும், வைரங்களும் இருந்தனவாம். இவ்வளவு விலை மதிப்புள்ள பொருட்களை கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவனை என்னவென்று சொல்வது?

இப்போது அந்தப் பிச்சைக்காரனைப் போலவேதான் நாமும் நம்முள் இருப்பவற்றை அறியாமல் நம்மைக் குணப்படுத்திக்கொள்ள இன்னொருவரை நாடிக் கொண்டிருக்கிறோம்.

எதிர் வீட்டில் இருப்பவர் வைத்திருக்கும் காரின் விலையை நாம் தெரிந்து வைத்திருப்போம். பைக்கிற்கு எவ்வளவு பெட்ரோல் போட்டால் எத்தனை கிலோ மீட்டர் ஓடும் என்ற கணக்கெல்லாம் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்போம். ஏன்... ஒபாமாவின் ஷூ சைஸைக் கூடப் பொது அறிவு என்ற பெயரில் தெரிந்து வைத்திருப்போம். நமக்குத் தெரியாததெல்லாம் நம்மைப் பற்றித்தான். நம் உடலைப் பற்றி ஒன்றும் தெரியாது நமக்கு.

ஆல்பர்ட் ஸ்க்விட்சர் என்ற இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஒரு மருத்துவர் இதைத்தான் கூறுகிறார். "It is supposed to be a proffessional secret. But I'll tell u anyway. We doctors do nothing. we only help and encourage the doctors within". அதாவது, மருத்துவர்களான நாங்கள் உண்மையில் எதுவும் செய்வதில்லை. நாங்கள் செய்வதெல்லாம் உங்களுக்குள் இருக்கும் மருத்துவரை ஊக்கப்படுத்தும் வேலையை மட்டும்தான், என்கிறார் டாக்டர் ஆல்பர்ட் ஸ்க்விட்சர்.

அதுபோல் ஆங்கில மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரட்ஸ் "உங்களுக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்தான் உண்மையாகவே உங்களை குணப்படுத்துகிறது" என்கிறார்.

இதைப் புரிந்துகொள்வதற்கு முதலில் நமக்கே தெரியாமல் நமக்குள்ளே எப்போதும் மறைமுகமாக செயல் பட்டுவரும், காலந்தோறும் நமக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும், நமக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் மருத்துவரை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொண்டு நீங்களே உங்களுடைய மருத்துவராக வேண்டுமென்பதே இந்த "உடல்மொழி அறிவோம்" என்ற இந்தப் பகுதி உருவாவதற்கான காரணம்.

உடல்மொழி அறிந்தால் உனக்குள் இருக்கும் மருந்தைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

பயணம் தொடரும்..!

உடல் மொழி அறிவோம் பகுதி 2 - வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu