IET இந்தியா கல்வி உதவித் திட்டம் 2025 விண்ணப்ப தேதி நீட்டிப்பு

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப இன்ஜினியரிங் அமைப்புகளில் ஒன்றான தி இன்ஸ்டிடியூசன் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (The Institution of Engineering and Technology (IET), இளங்கலை பொறியாளர்களுக்கான இந்தியாவின் மிகப் பிரபலமான விருதுகளுள் ஒன்றாக விளங்கும் IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது - ஒன்பதாவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் 2025 ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பின் மூலம் மாணவர்களுக்கு மேலும் 3 வாரங்கள் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது, கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உண்மையான உலக சிக்கல்களுக்கு தீர்வுகள் காணும் முனைப்பும் கொண்ட பொறியியல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த பதிப்பில் மட்டும் 65,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட இந்த விருது, தொழில்நுட்பத்தின் மூலம் சமுதாயத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த விரும்பும் இளம் பொறியாளர்களுக்கான ஒரு விரும்பத்தகுந்த மேடையாக திகழ்கிறது.

2025 ஆம் ஆண்டுக்கான பதிப்பில், மொத்தமாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், தேசிய அளவிலான முதன்மை வெற்றியாளருக்கு ரூ3,00,000 வழங்கப்படும். அதற்கேற்ப, முக்கியமான தொழில்துறை நிகழ்வுகளில் பங்கேற்பு வாய்ப்பு, வழிகாட்டல் (mentorship) உதவிகள் மற்றும் தேசிய அளவிலான அங்கீகாரமும் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க எந்தவொரு கட்டணமும் இல்லை, எனவே இந்தியாவிலுள்ள இளநிலை பொறியியல் மாணவர்களுக்காக மிக எளிதில் அணுகக்கூடியதும், மதிப்புமிக்கவுமான உதவித் திட்டங்களில் இது ஒன்றாகும்.

இந்த உதவித்தொகை திட்டத்தில், இந்தியா முழுவதும் AICTE / UGC அங்கீகரித்துள்ள கல்வி நிறுவனங்களில், முழுநேர இளநிலை பொறியியல் படிப்பில் (எந்த வருடமாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும்) தற்போது பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 60% மொத்த மதிப்பெண்கள் அல்லது 10 மதிப்பெண் அளவுகோலில் குறைந்தது 6.0 CGPA பெறப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகைக்கான நான்கு நிலைத் தேர்வுச் செயல்முறை, முற்றிலும் புத்தக அறிவைப் பரிசோதிப்பதற்காக அல்லாமல், உண்மையான உலகப் பயன்பாடு மற்றும் புதுமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பின்வரும் நிலைகள் அடங்கும்:

  • நிலை 1: முக்கிய பொறியியல் அறிவு  மற்றும் தர்க்கத் திறன்களை மதிப்பீடு செய்யும் ஆன்லைன் தேர்வு
  • நிலை 2: தற்போதைய பொறியியல் சவால்களை அடிப்படையாகக் கொண்ட, பிராந்திய அளவிலான கேஸ் ஸ்டடி போட்டி (Solution-thon)
  • நிலை 3: தொழில்துறை மற்றும் கல்வி நிபுணர்கள் முன்னிலையில் பிராந்திய அளவிலான பிரசன்டேசன்
  • நிலை 4: தேசிய இறுதிச்சுற்று, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் தீர்வுகள் மற்றும் பொறியியல் வழியே சமூகத்துக்கான தாக்கத்தைப் பற்றிய யோசனைகளை முன்னிலைப்படுத்துவர்.
  • இந்த ஒவ்வொரு நிலையும், ஒரு பொறியாளராக வளர விரும்பும் மாணவரின் திறமை, யோசனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிக்கொணரும் விதமாக இருக்கும்.

விண்ணப்ப முடிவுத் தேதி நீட்டிக்கப்பட்டதைக் குறித்து IET இந்தியா விருதுகள் மற்றும் உதவித்தொகைகள் மேலாளர் அஜய் சலாரியா கூறுகையில், “இந்த நீட்டிப்பின் மூலம், மேலும் பல பொறியியல் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கவும், அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும் நாம் ஊக்குவிக்க விரும்புகிறோம். பரிசுத் தொகையைத் தவிர, தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம், தங்களது பணியை முக்கிய தொழில்துறை நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் வாய்ப்பு மற்றும் IET உறுப்பினர் அங்கீகாரம் மூலம் உலகளாவிய பொறியாளர்கள் வலையமைப்பை அணுகும் வாய்ப்பு போன்ற பல நன்மைகளை பெறுவார்கள். 2024-ல், நாட்டின் 2,000க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் 2,260 கல்லூரிகளிலிருந்து 65,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதே உற்சாகம் இந்த ஆண்டிலும் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

விருப்பமுள்ள மாணவர்கள், 2025 ஜூன் 22ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், ஏனெனில் இந்தத் தேர்வில் பல நிலைகள் மற்றும் பட்டியல் சுற்றுகள் அடங்கியிருப்பதால் நேரம் முக்கியமானது.

இந்த ஆண்டுக்கான பதிப்பிற்கு ஏற்கனவே 30,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில், இப்போது மீதமுள்ள இரண்டு வாரங்கள், இந்திய அளவில் மிகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெற்ற இளம் பொறியாளர்களுக்கான மேடையில் பங்கேற்கும் இறுதி வாய்ப்பு ஆகும்.

விருதுத் திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த முழு விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைப் பயன்படுத்தவும்: <https://bit.ly/4dOSjaj> 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu