மீண்டும் இந்தியாவை மிரட்டும் கொரோனா! கெடுபிடிகள் ஸ்டார்ட்ஸ்!!

மத்திய அரசும், மாநில அரசுகளும் மீண்டும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற ஆயத்தமாகி விட்டன. இதன் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் இருப்பது ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.

சீனாவில் வரலாறு காணாத அளவு உருமாறிய கொரோனாவின் ஆட்டம் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டு முடியவுள்ள நிலையில் அங்கு தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டுல் சீன மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப் படுவார்கள் என்றும், அவர்களில் 10 சதவீதம் பேர் நோய்த்தொற்றில் மரணமடைவார்கள் என்றும் அங்குள்ள வல்லுனர்களும், அரசும் எச்சரித்துள்ளது.

2019ம் ஆண்டில் தொடங்கி, 2022ம் ஆண்டு இறுதி வரை சீனாவில் பெரும்பாலான நகர்களில் ஊரடங்கு தொடர்ந்து வந்தது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் அங்கு லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கினர். இந்நிலையில்தான் சீனாவில் மீண்டும் கொரோனாவின் ஆட்டம் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. சீனாவில் தற்போது தினமும் 5 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான் மரணங்களும் நிகழ்ந்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சீனாவின் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று நெருக்கடி இந்தியாவையும் நெருங்க வாய்ப்புள்ளாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து மத்த்திய அரசும், மாநில அரசும் மீண்டும் கொரோனா பற்றி பேசத் தொடங்கியுள்ளன. அதோடு பாதுகாப்பு வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளியும் பின்பற்றும்படி அறிவுறுத்தத் தொடங்கி விட்டனர்.

பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணத்தை ஒத்தி வைக்கும்படி  ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடித எழுதியுள்ளார். அதில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  நடைபயணத்தில் பங்கேற்கும் அனைவரும் முக கவசம் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இல்லையென்றால் நாட்டு நலன் கருதி பாதயாத்திரை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரிசோதனையில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும். புதிதாக கொரோனா தொற்று  பாதித்தித்தவர்களின் ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு தினமும் அனுப்ப வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை தேவை. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும், என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், ஜப்பான், அமெரிக்கா,சீனா, பிரேசில், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையும் மத்திய அரசு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எது, எப்படியோ 2020ம் ஆண்டு வந்த முதல் அலை கொரோனாவை விட 2021ல் அசுர வேகம் எடுத்தது. இந்தியாவில் பலி எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது 3வது அலை ரொம்பவே கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைவரும் இப்போதே பாதுகாப்பாக இருப்பதும், 2023ல் ஊரடங்கு போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டால் அதனை சமாளிக்க தேவையான பணத்தை இப்போதே சேர்க்கத் தொடங்குவதும் நல்லது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu