இந்திய மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சகாப்தத்தை தொடங்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

சென்னையில் உள்ள MIC-யில் ஜூன் 6-8 தேதிகளில் நடைபெறும் 2025 இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (2025 Indian National Motorcycle Racing Championship (INMRC)) தேசிய சாம்பியன்ஷிப் ப்ரோ ஸ்டாக் 200 பிரிவிற்கான [National Championship Pro Stock 200 class] அதிகாரப்பூர்வ ரேஸ் இயந்திரங்களை வழங்கும் நிறுவனமாக [official race machine provider] டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் முதல் முறையாக, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரேஸில் கலந்து கொள்ளும் சுயாதீன அணிகள் மற்றும் பந்தய வீரர்களுக்கு  ரேஸ் ட்யூன் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை [race-tuned motorcycles] வடிவமைத்து, அவற்றை உருவாக்கி, வழங்கும்  ஒரு ப்ராண்ட்டாக புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.  இது டிவிஎஸ் மோட்டார் நிறூவனம் மோட்டார் பந்தய களத்தில் பெற்றிருக்கும் தலைமைத்துவத்தையும், மோட்டார் பந்தய நிபுணத்துவத்தில் காட்டிவரும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரம், இரு சக்கர வாகன பந்தயத்தை தனிப்பட்ட மோட்டார் பந்தய வீரர்களும் கொள்ளும் வகையில் ஜனநாயகப்படுத்த  வழி வகுத்திருக்கிறது.  மேலும் சுயாதீன பந்தய வீரர்கள் எளிதில் பங்கேற்கவும்,  அவர்களுக்கு பெரும் பொருட்செலவில்லாமல் திறன் பெற்ற மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தவும் இது உதவும்.  FMSCI மற்றும் MMSC- ஆகியவற்றின் முக்கிய நோக்கமான, மோட்டார் பந்தயத்தில் எல்லோருக்குமான பந்தயமாக விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்கு இது  வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

INMRC 2025-ல் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் ப்ரோ ஸ்டாக் 200 [The National Championship Pro Stock 200] பிரிவு என்பது பந்தய வீரர்களிடையே போட்டியை விறுவிறுப்பாக தரம் உயர்த்தவும், நிறுவனம் சாராத தனிச்சையாக போட்டியிடும் பந்தய அணிகளை ஆதரிக்கவும் MIC-யினால் அறிமுகப்படுத்தப்பட்ட முற்றிலும் புதிய மற்றும் அட்டகாசமான பந்தய வடிவமாகும். மோட்டார் பந்தயத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வடிவத்தின் ஒரு பகுதியாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட TVS Apache GP200R மோட்டார் சைக்கிள்களை தன்னிச்சையாக போட்டியிடும் அணிகளுக்கு வழங்கும். அந்த அணிகள் இந்த சாம்பியன்ஷிப் வகுப்பில் போட்டியிட தங்களது பந்தய வீரர்களை களத்தில் இறக்குவார்கள். மேலும், PETRONAS TVS ரேசிங் குழு இந்த சீசன் முழுவதும் உச்சப்பட்ச செயல்திறனை உறுதி செய்யும் வகையில், முழுமையான தொழில்நுட்ப ஆதரவையும், இயந்திர சேவை மற்றும் பராமரிப்பையும் இந்த அணிகளுக்கு வழங்கும். TVS Apache-ன் 20 ஆண்டுகால பந்தய பாரம்பரியத்துடன், இந்த மைல்கல்லானது இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸில் அடுத்தக்கட்டத்தைக் குறிக்கிறது. பங்கேற்கும் அணிகள் மற்றும் பந்தய வீரர்களுக்கான தேர்வு செயல்முறை சமீபத்தில் மே 28, 2025 அன்று மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் [Madras International Circuit]-ல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த விறுவிறுப்பான பந்தயப் பிரிவிற்கு ஏழு அணிகள் மற்றும் பன்னிரண்டு பந்தய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிஸினெஸ் பிரிவின் தலைவர் விமல் சம்ப்லி [Vimal Sumbly, Head - Premium Business, TVS Motor Company] கூறுகையில், "டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், எங்களுடைய பந்தய குணாதிசயமான ரேஸிங் டிஎன்ஏ, புதுமைகளைப் புகுத்தவும், பந்தய களத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் தூண்டுகோலாக இருக்கிறது.  இந்திய மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் தேசிய சாம்பியன்ஷிப்பிற்காக ரேஸ்-டியூன் செய்யப்பட்ட இயந்திரங்களை நிறுவனம் சாராத தன்னிச்சையாக கலந்து கொள்ளும் அணிகளூஊ வழங்கும் முதல் இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டின் தொலைநோக்குப் பார்வையால் ஊக்குவிக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் முன்னேற்றமானது, சுயாதீன அணிகள் மிக உயர்ந்த பிரிவுகளில் இனி எளிதில் பங்கேற்கவும், சாகசத்தை வெளிப்படுத்தும் வகையில் பந்தயத்தில் இறங்கவும், பெரிய பொருட்செலவில்லாமல்  பங்குகொள்ளவும் உதவும்.   எங்களது 'ட்ராக் டு ரோடு' தத்துவத்தின் [‘Track to Road’ philosophy] உண்மையான வெளிப்பாடாக இருக்கும் அபாரமான செயல்திறன் மிக்க பிராண்டான டிவிஎஸ் அப்பாச்சி [TVS Apache]-ன் இருபது ஆண்டு கால ரேஸிங் குணாதிசாயத்தை இந்த ஆண்டு இன்னும் அதிக முக்கியத்துவம் பெற செய்யும். புதிய சீசனில் நாங்கள் களமிறங்கும்போது, ​​பந்தயத்தில் மட்டும் கலந்து கொள்ளாமல், இந்தியாவில் மோட்டார் விளையாட்டுகளுக்கான வரையறைப் புள்ளியை மீண்டும் உயர்த்துவதையும் இலக்காக கொண்டு செயல்பட இருக்கிறோம்’’ என்றார்.

ரேஸ்-டியூன் செய்யப்பட்ட TVS Apache GP200R-ன் விவரக்குறிப்புகள்

ரேஸ்-டியூன் செய்யப்பட்ட TVS Apache GP200R  அபார செயல்திறன் மற்றும் விறுவிறுப்பான வேகத்திற்காகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மிகவும் மேம்பட்ட பந்தய வேகம் மற்றும் கையாளுவதில் செளகரியம் ஆகியவற்றை இது உறுதி செய்கிறது.

 இதன் அம்சங்கள்:

  • க்யூபிக் திறன்: 200 cc [Cubic Capacity: 200 cc]
  • பைக் எடை: 105 கிலோ [Bike Weight: 105 kg]
  • அதிகபட்ச சக்தி: ஸ்டாக் எஞ்சினை விட 40% அதிகரிப்பு [Maximum Power: 40% increase over stock engine]
  • அதிகபட்ச வேகம்: 155+ kph [Top Speed: 155+ kph]

ரேஸ்-டியூன் செய்யப்பட்ட TVS Apache GP200R-ன் முக்கிய சிறப்பம்சங்களும் அதில் இடம்பெற்றிருக்கும் இதர அம்சங்கள்:

மிகவும்  மேம்பட்ட்ட வால்யூமெட்ரிக் செயல்திறனுக்கான மாற்றியமைக்கப்பட்ட சிலிண்டர் ஹெட் [Modified cylinder head for higher volumetric efficiency, high lift camshaft, high compression ratio, advanced ECU with closed-loop control, quickshifter], ஹை லிஃப்ட் கேம்ஷாஃப்ட் [high lift camshaft], ஹை கம்ப்ரஷன் ரேஷ்யூ [high compression ratio], க்ளோஸ்ட் -லூப் கட்டுப்பாட்டுடன் கூடிய மேம்பட்ட ECU, [advanced ECU with closed-loop control] மற்றும் விரைவு ஷிஃப்டர்  [quickshifter] டேட்டா லாக்கிங் திறன்கள் [data logging capabilities], நன்றாக-டியூன் செய்யப்பட்ட இண்டக்‌ஷன் மற்றும் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் [fine-tuned induction  & exhaust system.] 

எளிதில் மாற்றியமைக்க கூடிய முன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் [adjustable front and rear suspension], ஏரோடைனமிக் பாடிவொர்க் [aerodynamic bodywork], இலகுவான பந்தய சக்கரங்கள் [lighter racing wheels], அலுமினிய சப்ஃப்ரேம் [aluminum subframe] மற்றும் அதிக பிரேக்கிங் பவர் [higher braking power].

INMRC 2025 PRO STOCK 300-400CC பிரிவிற்கான பெட்ரோனாஸ் டிவிஎஸ் பந்தய அணி [PETRONAS TVS RACING TEAM FOR INMRC 2025 PRO STOCK 300-400CC CLASS]

11 முறை தேசிய சாம்பியனான ஜெகன் குமார் போட்டி பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் பெட்ரோனாஸ் டிவிஎஸ் பந்தய அணி [PETRONAS TVS Racing team]-ன் ரைடர் கோச் [rider coach] ஆக தொடர்ந்து பணியாற்றுவார். இந்த ஆண்டு, இளம் மற்றும் திறமையான பந்தய வீரர்களான ரக்ஷித் டேவ் [Rakshith Dave] மற்றும் ஆல்வின் சுந்தர் [Alwin Sundar] ஆகிய இருவரும் அணியில் இணைகிறார்கள். அவர்களுடன் ARRC ஏஸ் ரைடர் சர்தக் சவான், டாப் பெர்ஃபார்மரான சிராந்த்.வி. மற்றும் உலக மோட்டோ3 [world Moto3,]- ல் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக பங்கேற்ற முதல் இந்திய ரைடர் கே.ஒய். அகமது [KY Ahamed] ஆகியோரும் இணைய இருக்கிறார்கள். இந்த போட்டி பிரிவில் உச்சகட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதிலும் டிவிஎஸ் ரேசிங்கின் சிறந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் இந்த அணி கவனம் செலுத்தும்.

300-400CC பிரிவிற்கான பைக்கில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றங்கள் [BIKE MODIFICATIONS FOR THE 300-400CC CLASS]

2025 சீசனுக்கு, ப்ரோ ஸ்டாக் 300-400cc ரேஸ் பைக்குகள் புதிதாக மேற்கொள்ளப்படவிருக்கும் பல மேம்பாடுகளால் பெரும் பலன்களைப் பெறவிருக்கின்றன. கடந்த 2024 சீசனின்  போது பந்தயக் களத்தில் கற்றப் பாடங்களின் அடிப்படையில் என்ஜின் ரிஃபைன்மெண்ட் [engine refinement] சீசனின் மத்திய காலக்கட்டத்தில் இருந்து திட்டமிடப்பட்ட புதிய ஏரோடைனமிக் பாடிவொர்க் [new aerodynamic bodywork] மற்றும் கையாளுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த பின்புற சஸ்பென்ஷனில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் போன்றவை இதில் அடங்கும்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான ரேசிங் டிஎன்ஏ [OVER FOUR DECADES OF RACING DNA]

43 ஆண்டுகளுக்கும் மேலாக, டிவிஎஸ் ரேசிங் [TVS Racing] இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸில் முன்னணியில் இருந்து வருகிறது. இதன் மூலம் மோட்டார் பந்தயத்தின் நிபுணத்துவத்தில் பல புதிய எல்லைகளை உருவாக்கி வருகிறது. அட்டகாசமான புதுமை மற்றும் அபாரமான செயல்திறன் ஆகியவற்றின் மீது டிவிஎஸ் ரேசிங் காட்டி வரும் அர்ப்பணிப்பு,  பந்தய களத்தைத் தாண்டி டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை மோட்டார் சைக்கிள் பிராண்டான டிவிஎஸ் அப்பாச்சியிலும் தொடர்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி, இந்த ஆண்டு அதன் 20 ஆண்டுகால பொறியியல் நிபுணத்துவத்தை கொண்டாடுகிறது. டிவிஎஸ் அப்பாச்சி தொடர் டிவிஎஸ் ரேசிங்கின் 'ட்ராக் டு ரோடு' தத்துவத்தை கொண்டிருப்பதால், பந்தயத்திலிருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தை உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் ஒருங்கிணைக்கிறது. 160 சிசி, 180 சிசி, 200 சிசி மற்றும் 310 சிசி மாடல்களின் வரிசையில், ரைடு-பை-வயர் தொழில்நுட்பம் [ride-by-wire technology] முதல் ரேஸ்-டியூன்ட் ஃப்யூயல் என்ஜின் [race-tuned fuel injection] வரை இவ்வாகன பிரிவில் முதல் முறையாக இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் உள்ளன.

அப்பாச்சி உரிமையாளர்கள் குழுவில் (Apache Owners Group (AOG)) 400,000-க்கும் மேற்பட்ட ரைடர்களுடன், டிவிஎஸ் அப்பாச்சி ஒரு துடிப்பான, இளமைத் துள்ளலுடன் கூடிய உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளது. பயணிப்பது தெருக்களானாலும், பந்தய ட்ராக்குகளாக இருந்தாலும் பந்தய ஆர்வலர்களுக்கு பந்தயத்தின் சிலிர்ப்பைக் கொடுக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி.

தனது அடுத்தகட்ட களத்தில் நுழையும் போது, ​​டிவிஎஸ் அப்பாச்சி அதிநவீன செயல்திறனை வழங்குவதற்கும், சக்தி மற்றும் துல்லியத்துடன் சவாரி செய்வதன் அர்த்தம் என்ன என்பதை மறுவரையறை செய்யும்  வகையில் கம்பீரமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu