விவசாய பொதிப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் IFL Enterprises Limited (பிஎஸ்இ – 540377), ரூ. 49.14 கோடியை திரட்ட உரிமை வெளியீட்டுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. இவ்வுரிமை வெளியீடு ஜூன் 19, 2025 முதல் ஜூன் 30, 2025 வரை சந்தாவிற்காக திறக்கப்படும். ஒரு பங்கிற்கு ரூ.1 என்ற ஈர்க்கும் விலையில் வெளியிடப்படும் இந்த வெளியீடு, தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்களுடைய பங்குகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பாகும்.
2024 டிசம்பர் 30 அன்று நிர்வாக குழு உரிமை வெளியீட்டுக்கான முடிவை எடுத்து, மார்ச் 7, 2025 அன்று வரைவு கடிதத்தை பிஎஸ்இக்கு சமர்ப்பித்தது. பிஎஸ்இ இதனை மே 19, 2025 அன்று ‘In Principle’ அங்கீகாரம் வழங்கியது. உரிமை பங்குகளுக்கான பதிவு தேதியாக ஜூன் 13, 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. 91 முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளுக்கு எதிராக 60 உரிமை பங்குகள் வழங்கப்படும். உரிமை பங்குகளை மார்க்கெட்டில் மாற்ற (renunciation) ஜூன் 24, 2025 கடைசி தேதியாகும்.
49.14 கோடியைத் தொகுத்தளிக்கும் இந்த உரிமை வெளியீடு, நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும், பொது நிறுவனச் செலவுகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்படும். 2025 மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.120.60 கோடி வருமானம் ஈட்டியது, இது 2023-24ம் ஆண்டின் ரூ. 8.24 கோடியை விட 13 மடங்கு அதிகம். நிகர இலாபம் ரூ.2.99 கோடியாக பதிவாகி, கடந்த ஆண்டுடன் (ரூ. 84.5 லட்சம்) ஒப்பிடுகையில் 254% வளர்ச்சியைக் காட்டியது. Q4 FY25-இல் மட்டும் ரூ. 72.13 கோடி வருமானமும், ரூ. 3.04 கோடி நிகர இலாபமும் ஈட்டப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்தில், நிறுவனம் 1:150 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்க தீர்மானித்தது. 2009-ல் நிறுவப்பட்ட IFL Enterprises, தற்போது விவசாயப் பொருட்கள், உயிரியல் மற்றும் ஹெர்பல் பொருட்கள், ஒப்பந்த விவசாயம் மற்றும் கையிருப்பு சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இது தவிர, பங்கு, பத்திரம், பண்டங்கள் உள்ளிட்ட நிதி உபகரண வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
0 கருத்துகள்