வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ள்யில் 2000 - 2002 கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு கணிதம், அறிவியல், வரலாறு, கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில் படித்த மாணவ, மாணவிகள் தற்போது பல்வேறு ஊர்களில், பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குகிறார்கள். இம்மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சிக்கு மே 18ம்தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது பள்ளியின் கணினி ஆய்வகத்திற்கு 25 நாற்காலிகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் பணியாற்றி மறைந்த ஆசிரியர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னனதாக முன்னாள் மாணவர் ந.சீனிவாசக் கண்ணன் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் மாடசாமி தலைமை தாங்கி நிகழ்ச்சியை வழி நடத்தினார். இரா.கற்பகவல்லி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
0 கருத்துகள்