தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவி ஆர்.ராஜகாருண்யா 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மாணவி எஸ்.கிறிஸ்டினா பியூலா 475 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி எஸ்.பாரதி 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
முதலிடம் பிடித்த மாணவிகளுக்கும், தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்சிராணி, உதவி தலைமை ஆசிரியை ஜெகதா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
0 கருத்துகள்