பியூச்சர் ஜெனரலி அறிமுகப்படுத்தும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்

இந்தியாவில் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளுக்கு மத்தியில் அதை எதிர்கொள்ள காப்பீடுதாரர்களுக்கு எந்தவித கவலையும் இல்லாத வகையில் போதுமான மருத்துவ காப்பீடு தொகையுடன் பல்வேறு சலுகைகளை வழங்கும் ‘ஹெல்த் அன்லிமிடெட்’என்னும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பியூச்சர் ஜெனரலி அறிமுகம் செய்துள்ளது.

அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளுக்கு மத்தியில், மருத்துவ காப்பீடு செய்த பத்து பேரில் எட்டுக்கும் மேற்பட்டோர் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பு மிகுந்த கவலை அளிப்பதாக பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் - #ஹெல்த் அன்லிமிடெட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட 800 காப்பீடுதாரர்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தற்போதைய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் போதுமான சலுகைகள் இல்லை என்பது குறித்து அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மிக உயர்ந்த மருத்துவ பணவீக்க விகிதங்களைக் கொண்டுள்ளது - தோராயமாக 14 சதவீதம். அதாவது இது சீனா (12 சதவீதம்), இந்தோனேசியா (10 சதவீதம்), வியட்நாம் (10 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (9 சதவீதம்) ஆகியவற்றைவிட அதிகம் ஆகும்.

ஹெல்த் அன்லிமிடெட் காப்பீடு திட்டம் அறிமுகம் குறித்து பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அனுப் ராவ் கூறுகையில், இந்தியாவில் மருத்துவக் காப்பீடு உள்ளபோதிலும், மருத்துவ சிகிச்சைக்கான செலவு அதிகரித்து வருவது பெரும்பான்மையான மக்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், இந்திய காப்பீடுதாரர்களுக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதோடு, இந்த சவால்களை எதிர்கொள்ள நாங்கள் மேற்கொண்ட முயற்சியே இந்த புதிய காப்பீடு திட்டம் ஆகும். எங்கள் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான 'ஹெல்த் அன்லிமிடெட்', அதிக மருத்துவமனை பில்களின் போது, காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டாலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு தொகை இல்லை என்ற நிலை வராமல் இருப்பதை உறுதி செய்கிறது என்று தெரிவித்தார்.

இந்தத் திட்டம், பணம் இல்லை என்ற கவலை இல்லாமல் முழுமையான நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. அடிப்படை காப்பீட்டிற்கு கூடுதலாக, அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்கும் இந்தத் திட்டம் பாதுகாப்பை வழங்குகிறது. இது உள்நோயாளி மருத்துவமனையில் அனுமதித்தல், பகல்நேர பராமரிப்பு சிகிச்சைகள், ஆயுஷ் சிகிச்சைகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளுக்கான காப்பீட்டை சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், உறுப்பு தான செலவுகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

ஹெல்த் அன்லிமிடெட் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
  • வரம்பற்ற பாதுகாப்பு: காப்பீட்டுத் தொகையைப் பொருட்படுத்தாமல், பாலிசியின் வாழ்நாளில் ஒரு முறை மற்றும் எந்தவொரு கோரிக்கைக்கும், முழு கோரிக்கைச் செலவையும் வழங்கும்.
  • பணவீக்க பாதுகாப்பு: அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்க காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் அதிகரித்தல்.
  • பிரீமியம் திரும்ப பெறுதல்: முந்தைய 4 பாலிசி ஆண்டுகளில் எந்த கோரிக்கையும் இல்லை என்றால், 5வது ஆண்டில் புதுப்பித்தல் பிரீமியத்தில் முதல் ஆண்டு அடிப்படை பிரீமியத்திற்கு சமமான தொகை தள்ளுபடி செய்யப்படும்,
  • வரம்பற்ற மறு காப்பீடுகள்: இரண்டாவது கோரிக்கையிலிருந்து, அடிப்படை காப்பீட்டுத் தொகை வரம்பற்ற முறையில் மீண்டும் முழுமையாக்கப்படும்.

மேற்கூறியவற்றைத் தவிர, ஹெல்த் அன்லிமிடெட், உரிமைகோரல் இல்லாத ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒட்டுமொத்த போனஸ், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கூடுதல் காப்பீட்டுத் தொகை, கண்புரை அறுவை சிகிச்சை, சாலை ஆம்புலன்ஸ் மற்றும் லேசிக் நடைமுறை போன்ற சேவைகளுக்கும் பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu