தென்காசியில் "டிஜிட்-ஆல் தென்காசி" : ஜோஹோ ஶ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார்

இந்தியாவின் 2வது பெரிய வர்த்தக சங்கமான, நூறு ஆண்டு பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஓர் அங்கமான டிஜிட்ஆல் அமைப்பின் தென்காசி கிளை துவக்க விழா தென்காசியில் நடந்தது. ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு டிஜிட் ஆல் தென்காசியைத் தொடங்கி வைத்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் அனைவருக்கு டிஜிட்டல் அறிவாற்றலைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 9 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கி வைக்கப்ட்ட அமைப்பு டிஜிட்ஆல். இந்த அமைப்பின் தென்காசி கிளை துவக்க விழா தென்காசியில் நேற்று (20-10-2024) நடைபெற்றது. விழாவுக்கு வந்த அனைவரையும் டிஜிட்ஆல் தென்காசி தலைமை ஒருங்கிணைப்பாளர் சமுத்ரா செந்தில் வரவேற்றுப் பேசினார். டிஜிட்ஆல் அமைப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் டிஜிட்ஆல் தலைவர் ஜே.கே.முத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு டிஜிட் ஆல் தென்காசி கிளையை முறைப்படி துவக்கி வைத்து, வாழ்த்திப் பேசினார். அப்போது தென்காசியின் வளச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் டிஜிட்டல் அத்தியாவசியம், டிஜிட்ஆல் தென்காசியை வாழ்த்தி வரவேற்கிறேன், என்றார்.

வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுன்டேசன் நிறுவனர் ஆன்ந்தன் அய்யாசாமி, ப்ளாக்‌ஷிப் டிவி தலைமை நிர்வாக அதிகாரி பாலா, போரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன், டிஜிட்ஆல் துணைத்தலைவர் சரவணன், அமேசான் வெப் சர்வீசஸ் ராஜேஷ், நடிகர், சமூக ஆர்வலர் விவி எண்டர்டெய்ன்மெண்ட் விஜய் விஷ்வா, தென்காசி லைஃப் நிறுவனர் ஜஸ்டின் துரை, டிஜிட்ஆல் தென்காசி துணை ஒருங்கிணைப்பாளர் பெரியார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியினை தென்காசி லைஃப் வாசு தொகுத்து வழங்கினார். முடிவில் டிஜிட்ஆல் தென்காசி இணை ஒருங்கிணைப்பாளர் சாதனா ரமேஷ் நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu