இயக்குனர், ஒளிப்பதிவாளர் குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள "சுப்பன்" திரைப்படம்


மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் SPS குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் "சுப்பன்" என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. "தீய எண்ணங்கள் கொண்ட அரக்கனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்" நிகழ்வின் நியாய தர்மத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தை குகநேசன் சோனைமுத்து செய்துள்ளார். ரொட்டேரியன் ஆர்.ஆனந்தமுருகனின்   ஶ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜோஸ் ஃப்ராக்ங்ளின் இசையமைத்துள்ளார். எடிட்டிங் ஜெயகிருஷ்ணா, கலை தாமோதரன் ராம், நடனம் நிஷார் கான், ஒப்பனை இதயா ஜேம்ஸ், தயாரிப்பு நிர்வாகம் சிவகாசி பாலா மற்றும் சமுத்ரா செந்தில், மக்கள் தொடர்பு என்.விஜயமுரளி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பாடல்களை மோகன்ராஜன், கருமாத்தூர் மணிமாறன் எழுதி, முகேஷ், ஷிவானி பாடியுள்ளனர்.

இந்த படம், சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பேசுகிறது மற்றும் ரோட்டரி சங்கங்களின் சமூக சேவை, செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது

"சுப்பன்" திரைப்படத்தில் நடிகர்கள் ஆனந்த முருகன் (அறிமுகம்), பாலஹாசன், யாசர்,  நடிகைகள் காயத்ரி ரேமா,  ஷார்மிஷா, ஸ்வாதி எஸ் பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் டாக்டர் சரவணன், ரொட்டேரியன் விஸ்வ நாராயண், ஸ்ரீதேவா, மிதுன் சக்ரவர்த்தி, கஜராஜ், சரவண சக்தி, ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்றைய சூழலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் இப்படம் பேசுகிறது. நாடு முழுவதும் ரோட்டரி சங்கங்கள் செய்து வரும் சமூக செயல்பாடுகளைக் குறிக்கும் வகையிலான காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. வெளியீட்டுக்கான இறுதிகட்டப் பணிகளும் நிறைவு பெற்று விட்டன. "சுப்பன்" திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. 

இயக்குனர் பற்றி:  

இயக்குனர் குகநேசன் சோனைமுத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய படை (Indian National Army (INA)) வீரர் தியாகி திரு.சோனைமுத்து - திருமதி. ஜானகி தம்பதியரின் மகன் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்  விமல்  அவர்களுடன்  இணைந்து   "மதுரை  டூ  தேனி வழி ஆண்டிப்பட்டி"  என்ற படத்தினை எடுத்தார். அந்த படத்தில் இணை தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட், ஒளிப்பதிவாளர் ஆகிய பொறுப்புகளை      கவனித்தார்.   பஸ்    பயணத்தில்  உருவாகும்  காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து, 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' என்ற திரைப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றினார். இப்படம், DSLR ஸ்டில் கேமராவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையுடன், "லிம்கா புக் ஆஃப் ரொக்கார்ட்" சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. இதற்காக அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் பயோகிராபிகல் இன்ஸ்டிடியூட்டில் SPS குகன் அவர்களது பெயர் இன்றும் இடம்பெற்றுள்ளது. 

அதன் பிறகு, தமிழ் சினிமா தயாரிப்பில் புதுமை படைக்கும் எண்ணத்துடன், போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்களின் ஆதரவோடு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டார். "முயல்" என்ற பெயரில் உருவான அந்த படத்தை குகநேசன் சோனைமுத்து இயக்கியிருந்தார். தொடர்ந்து, தனது நண்பர் சிவகாசி பாலாவுடன் இணைந்து மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். அதில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். அத்திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஆன்லைனில் வெளியிடப்பட்டது. பள்ளிப் பருவத்தில் இருந்தே கேமரா துறையில் அனுபவம் கொண்ட இவர், பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

இதுவரை தனது பெயரை SPS குகன் என்று பயன்படுத்தி வந்த இயக்குனர், தற்போது  குகநேசன் சோனைமுத்து என்று மாற்றியிருப்பதுடன், மதுரையைச் சேர்ந்த ரொட்டேரியன் ஆர்,ஆனந்த முருகன் அவர்களின் தயாரிப்பில் "சுப்பன்" என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Suppan Movie Cast & Crew Anandha Murugan - Bala Hasan -Dr.Saravanan Sri Deva - Gayatri Rema - Sharumiisha yasar - Methun Shakaravarthy Production House : Sri Bhagavan's Pictures Producer: Rtn.R.Anandha Murugan Story - Screenplay - Dialogue - Cinematography - Direction: Guhanesan Sonaimuthu Music: Jose Franklin Editing: Jeya Krishna Art Director: Dhamothararam Choreographer: Nizar Khan Makeup: Idhaya James Lyrics: Mohan Rajan - Karumathoor Manimaran Singer: Mukesh - Shivani Executive Producer: Sivakasi Bala - Samuthra Senthil #SuppanMovie #Suppan #Tamilcinema #DirectorGuhan #Maduraitotheni #Newfilm #Kolluwood #Trending

கருத்துரையிடுக

5 கருத்துகள்

  1. அருமை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சோணைமுத்தையா10 நவம்பர், 2025 அன்று 8:08 PM

    இதில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைக்காதது வருத்தமாக உள்ளது. காரணம் வினோத் எடுத்த குறும்படத்தில் என் பங்களிப்பை பாராட்டிய நீங்கள் அடுத்த பத்திற்கு என்னை அழைப்பீர்கள் முக்கிய கேரக்ட்டர் கிடைக்கும் என எதிர் பார்த்தேன் கடைசியில் வினோத் பேச்சை கேட்டு என்னை புறக்கணித்து விட்டதில் எனக்கு வருத்தமில்லை நன்றி வெற்றி பெற வாழ்த்துக்கள் சோணைமுத்தையா

    பதிலளிநீக்கு
  4. தங்களது கலைப்பயணத்தின் சாதனைகள் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் உழைப்புக்கு வெற்றி நிச்சயம் 💫💫

    பதிலளிநீக்கு
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu