மதுரையில் சுப்பன் திரைப்பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு



மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ்.குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் "சுப்பன்" என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. "தீய எண்ணங்கள் கொண்ட அரக்கனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்" நிகழ்வின் நியாய தர்மத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தை குகநேசன் சோனைமுத்து செய்துள்ளார். ரோட்டேரியன் ஆர்.ஆனந்தமுருகனின் ஶ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

சுப்பன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரை கோச்சடை சாந்தி சதன் வளாகத்தில் நடந்தது.  படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஆர்.ஆனந்தமுருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.சிறப்பு விருந்தினராக வேளாண் உணவு வர்த்தக மையத்தின் நிறுவனர் எஸ்.ரத்தினவேலு கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவான பாடலும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் இயக்குனர் குகநேசன் சோனைமுத்து பேசுகையில், வழக்கமாக இதுபோன்ற டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை சென்னையில்தான் நடத்துவோம். நாங்கள் மதுரையில் வெளியிட்டிருக்கிறோம். எங்களது மதுரை டூ தேனி படம் பெரிய வெற்றிக்கு இந்த மதுரை மக்கள் முக்கிய காரணமாக இருந்தனர். அதனாலேயே மதுரை மக்கள் மத்தியில் இந்த விழாவை நடத்தியுள்ளோம். சுப்பன் படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். டிசம்பரில் திரைக்கு வரவிருக்கிறது. எப்போதும்போல் எங்களது புதிய படைப்புக்கும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம், என்றார்.

விழாவில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்கள் சிவகாசி பாலா, சமுத்ரா செந்தில், மேலாளர் வேணுகோபால், அறிமுகப் பாடகி ஷிவானி, நடிகைகள் காயத்ரி ரேமா, தாரா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கஜராஜ் மற்றும் நடிகர்கள் குற்றாலம் வேல் பாண்டியன், குஸ்தி வாத்தியார் ஷாஜகான், நரசிம்மன், தங்கப்பாண்டி, விபிஆர், மலர்விழி, துணை இயக்குனர்கள் முத்து ரஞ்சித், சிவ பாலன், எஸ்கே, கேமரா பிரிவில் பணியாற்றிய மணீஷ், செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சினி வினோத் தலைமையில் ஏராளமான துணை நடிகர், நடிகைகளும் விழாவில் பங்கேற்றனர்.

மதுரையின் சிறப்பு வாய்ந்த மாமதுரையர் அமைப்பு சார்பில் அகில உலக தலைவர் டாக்டர் ஜி.திருமுருகன், நிறுவனர் ஜே.கே.முத்து, பொருளாளர் சுப்பிரமணியன், பொது செயலாளர் சம்பத் குமார், இணை செயலாளர் விஜயராகவன், கோவை பொறுப்பாளர் ரமேஷ், ஏகேசிசிஎஸ் இந்தோ ஜப்பான் நிறுவன தலைவர் கருணாநிதி காசிநாதன் ஆகியோர் நேரில் வந்து படக்குழுவை பாராட்டினர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஹலோ எப்.எம். ஜெயராம், ஆலங்குளம் கார்த்திக், திருமலையான் பைனான்ஸ் செல்வன், பி.ஜி. பைனான்ஸ் குணசேகரன், அவனியாபுரம் ஆட்டோ சங்க தலைவர் கருப்பையா, சிம்மக்கல் அருணகிரி, மதிச்சியம் ஹக்கின் பாய், ஐயப்பன், ஜெயராஜ், கற்பவல்லி, சித்திக், பால மணிகண்டன், ஆனையூர் அருண், வில்லாபுரம் மணிமாறன். ஏ.டி. மணிகண்டன், ஏ.டி.முருகன், பவளம் லட்சுமணன், ஷியாம் சுந்தர், பரமக்குடி சங்கர், நாகமலைபுதுக்கோட்டை தவம் அனிதா, ராஜா ஹுசேன், மும்தாஜ், அலங்காநல்லூர் ரஞ்சித் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சுப்பன் திரைப்படத்திற்கு ஜோஸ் ஃப்ராக்ங்ளின் இசையமைத்துள்ளார். எடிட்டிங் ஜெயகிருஷ்ணா, கலை தாமோதரன் ராம், நடனம் நிஷார் கான், ஒப்பனை இதயா ஜேம்ஸ், டிசைனர் செந்தில்குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பாடல்களை மோகன்ராஜன், கருமாத்தூர் மணிமாறன் எழுதி, முகேஷ், ஷிவானி பாடியுள்ளனர்.

டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள இந்தப் படம், சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பேசுகிறது மற்றும் ரோட்டரி சங்கங்களின் சமூக சேவை, செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்று தயாரிப்பாளர் ரோட்டேரியன் ஆனந்த முருகன் தெரிவித்தார்.



 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu