சங்கரன்கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நடத்தும் இந்த முகாமில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் விண்வெளி அறிவியல் முகாம் குறித்து வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

விண்வெளியைப் பற்றிய கேள்விகளும், வியப்புகளும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் விடை கண்டுபிடிக்கும் வகையில் விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மாறி வரும் தொழில்நுட்ப உலகில் இளம் தலைமுறையினர் விண்வெளி குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே நமது தென்காசி மாவட்ட மாணவர்கள் பயனடையும் வகையில் விண்வெளி அறிவியல் முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விண்வெளி அறிவியல் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், விண்வெளி பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது.

சங்கரன்கோயில் ஏவிகே இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் வருகிற செப்டம்பர் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் இந்த முகாம் நடைபெறும். இதில் 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். www.voiceoftenkasi.org/events என்ற இணைய முகவரிக்குச் சென்று முன்பதிவு செய்யலாம். மேலும் மாணவர்கள் விண்வெளி அறிவியல் பற்றிய ஒரு நிமிட வீடியோ ஒன்றியை பதிவு செய்து 8778200402 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். முதலில் பதிவு செய்யும் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இளம் விண்வெளி ஆர்வர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவிருக்கிறார்கள். குறிப்பாக டெலஸ்கோப் மூலம் இரவு நேரத்தில் கோள்களை காணும் நிகழ்வை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் முத்துக்குமார் மற்றும் லெனின் ஆகியோரும், வானியற்பியல் குறித்து டாக்டர் சுப்பையா பாண்டியன், ஐஸ் ப்ரேக் நிகழ்வை வின்னரசு, பறவைகள் கண்காணிப்பு நிகழ்வை டாக்டர் முத்துசாமி ஆகியோர் நடத்துகிறார்கள். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, விண்வெளி குறித்து அறிந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu