புதிய கார்ப்பரேட் அடையாளத்தை செயல்படுத்தும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா

ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது அனைத்து புதிய காம்பேக்ட் எஸ்யூவியையும் அறிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தொடர்ச்சியான பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதன் புதிய சகாப்தத்தின் ஒரு பகுதியாக ஸ்கோடா நிறுவனம் தனது நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் டிஜிட்டல் மயமாக்கல் மூலோபாயத்தை மேம்படுத்திய பிறகு, இப்போது அதன் புதிய கார்ப்பரேட் அடையாளத்தை,  டீலர்ஷிப்கள், சேவை மையங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் டச் பாயிண்ட்களில் அமல்படுத்துவதாக பிராண்ட் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பெட்ர் ஜானேபா கூறுகையில், "உலகத் தரம் வாய்ந்த கார்களை தயாரிப்பதோடு, எங்கள் முயற்சிகள் எப்போதும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், எங்கள் குடும்பங்களுக்கும், எங்கள் ரசிகர்களுக்கும் ஆரோக்கியமான, அனைத்தையும் உள்ளடக்கிய, வளமான அனுபவத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்துகின்றன. வாடிக்கையாளர்களைச் சென்றடையும் பல வழிகளில் டிஜிட்டல் மயமாக்கலும் ஒன்றாகும். எங்கள் செய்தி வெளியீடு, எங்கள் வடிவமைப்பு மொழியும் எங்கள் அடையாளமும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும், நாங்கள் முன்னிறுத்தும் முகத்தைப் போலவே, எங்கள் நிலைத்தன்மையும் முக்கியமானது. 2023ஆம் ஆண்டு முழுவதும் எங்கள் தகவல் தொடர்புகள் மற்றும் சந்தைப்படுத்துதலில், எங்கள் பிராண்டின் புதிய கார்ப்பரேட் அடையாளத்தை சீராகவும் உணர்வுபூர்வமாகவும் செயல்படுத்தி வருகிறோம். இப்போது, அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம், இதில் எங்கள் டீலர்ஷிப்கள் மற்றும் பல்வேறு வாடிக்கையாளர் டச் பாயிண்ட்கள் அடங்கும்‘ என்றார்.

அனைத்தும் சமச்சீரில்

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய ஸ்டைலிங் மற்றும் டைப்ஃபேஸ் என்பது, சமச்சீர் அடிப்படையிலான முற்றிலும் புதிய அச்சுக்கலனைப் பயன்படுத்துகிறது, இது திடத்தன்மையை வட்ட வடிவங்கள் மற்றும் எல்லைகளுடன் இணைந்துத் திரவத்தை வெளிப்படுத்துகிறது. புதிய கார்ப்பரேட் அடையாளம் என்பது 2022 முதல் பிராண்டின் வடிவமைப்புகளையும், அழகியலையும், வெளிப்படுத்தும் நவீன திடமான கோட்பாட்டின் விரிவாக்கமாகும். மேலும், ஸ்கோடா ஆட்டோவின் இலச்சினையான இறக்கை கொண்ட அம்பு படம், ஸ்கோடா வேர்ட்மார்க் சின்னத்துக்கு வழிவகுக்கும், இது நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர் டச் பாயிண்ட்களிலும், தகவல் தொடர்பு மற்றும் படங்களில் ஒற்றுமையை உறுதி செய்யும்.

வண்ணங்கள் மற்றும் விளக்குகளுடன்

 புதிய கார்ப்பரேட் அடையாளம், டீலர்ஷிப் வளாகத்தில் உள்ள விளம்பர அடையாளத்தின், வெளிச்ச ஒளிர்வை மாற்றப், பகல் அல்லது இரவு நேரத்தைப் பயன்படுத்தும் சுதந்திரத்தை அனுமதிக்கிறது. சமச்சீர் மற்றும் திடமான எழுத்துக்கள், பகலில் எமரால்டு கிரீன் மற்றும் இரவில் துடிப்பான எலக்ட்ரிக் கிரீன் ஆகியவற்றை ஒளிரச் செய்கின்றன. அதே தருணம், ஸ்கோடா சிக்னேசர் வண்ணங்களுடன், மாறுபட்ட ஆனால் சீரான தன்மையும் பராமரிக்கிறது. பைலோன், டீலர் பிராண்டிங், நுழைவாயில் போர்டல், உள்ளிட்ட வாடிக்கையாளர் இடைமுக நுணுக்கமான விவரங்களையும் அழகியல் விரிவுபடுத்துகிறது.

உண்மையாகவும், டிஜிட்டலாகவும்

இந்த மாற்றங்கள், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, தனது வரம்பை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும், மேற்கொண்ட தொடர்ச்சியான தயாரிப்பு அல்லாத பரிணாமங்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு ஏற்ப உள்ளன. அதன் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை 2025 முதல் அரையாண்டில், இந்தியாவில், உலக அளவில் அறிமுகப்படுத்தும் அறிவிப்புடன், புதிய சகாப்தத்தில் பிராண்ட் நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உத்திகளையும் செயல்படுத்தியது, இது வாடிக்கையாளர் ஈடுபாட்டின் அடிப்படையில் புரட்சிக்கு வழிவகுத்தது.

இது முற்றிலும் டிஜிட்டல் பெயர்

உங்கள் ஸ்கோடா பிரச்சாரம் மூலம் அதன் வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூ, 2,00,000 க்கும் மேற்பட்ட பெயர்களைப் பெற்றது, இவற்றுள், இன்றைய தேதி வரை 24,000க்கும் மேற்பட்டவை, தனித்துவமான பெயர்களைக் கொண்டுள்ளன. நிறுவனத்தின் ஸ்கோடாவர்ஸ் இந்தியா தளம், அறிமுகமான 128 நிமிடங்களில், 128 நான்-ஃபங்கிபிள் டோக்கன்கள் (என்எஃப்டிகள்) எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்கோடா கியர்ஹெட்ஸ் உறுப்பினர் திட்டத்தை செயல்படுத்தியது, இதன் மூலம் வாடிக்கையாளர்களும், ரசிகர்களும், பிரீமியம் பொருட்கள், விஐபி மரியாதை உள்ளிட்ட பிற பிரத்யேக நன்மைகளைப் பெற உதவுகிறது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் தடம் பதித்து 24 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில்,  24 மார்ச் 2024 அன்று 24 மணி நேர விற்பனையை அறிமுகப்டுத்தியது. டிஜிட்டல் தளங்கள் மூலம் மட்டுமே, பிரத்தியேகமாக 709 முன்பதிவுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்புகளுக்கு அப்பால் உள்ளூர்மயமாக்கல்

புதிய கார்ப்பரேட் அடையாளத்துடன், அதன் அனைத்து வசதிகளையும் மறுபிராண்டிங்க் செய்வதற்கான மிக வேகமான சந்தையாக இந்தியா மாறும். அமலாக்கம் தொடங்கிய சூழலில், விளம்பர அடையாளங்கள் ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய தரநிலைகளின்படி உள்ளன, இது உலகத் தரம் வாய்ந்த விளம்பர அடையாளக் கூறுகளை தயாரிப்பதில் உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு அனைத்து வாடிக்கையாளர் டச் பாயிண்ட்களும், புதிய கார்ப்பரேட் அடையாளத்துடன் சரியான நேரத்தில் தயாராக இருக்கும். இது ஒரு நிலையான வாடிக்கையாளர் பயணத்தை உறுதி செய்யும். புதிய கார்ப்பரேட் அடையாளத்தை விரைவாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த, அனைத்து டீலர் கூட்டாளிகளும் மறு பிராண்டிங்கில் தீவிரமாக பங்கேற்க உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu