குழந்தைகளுக்கான நம்ம ஊரு வைப்ஸ்: மதுரையில் மே 8ம் தேதி நடக்கிறது

மாமதுரையர் அமைப்பு.மற்றும் விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான சிறப்பு சித்திரைத் திருவிழாவாக  "நம்ம ஊரு வைப்ஸ்" நிகழ்ச்சி வருகிற 8ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. 

இதுபற்றி மாமதுரையர் அகில உலக தலைவர் டாக்டர்.திருமுருகன், விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனரும், மதுரையைச் சேர்ந்த நடிகருமான விஜய் விஷ்வா ஆகியோர் கூறியதாவது:

விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் நம்ம ஊரு வைப்ஸ் என்கிற நிகழ்ச்சி மதுரையில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. மதுரை மக்களின் வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் நடத்தப் பட்டது. இளைஞர்களுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, குழந்தைகளுக்கான "நம்ம ஊரு வைப்ஸ்" நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கோலகலமான பக்தி மாறுவேடப் போட்டி நடத்தப்படுகிறது. மாமதுரையர் அமைப்பு மற்றும் எம்.ஆர். புரோமோட்டர், சமூக ஆர்வலர் ஸ்டார் குரு ஆகியோர் இணைந்து நடத்தப்படவுள்ள இந்த நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் மே 8ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. மாறுவேடப்.போட்டியில் பங்கேற்கவுள்ள குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.199 ஆகும். 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  இந்த சித்திரை கோலாகல போட்டி கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக நடைபெற உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

மேலும் விபரங்களுக்கு 99446 22464, 9384272666 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu