பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி 99.2 சதவீதம் தேர்ச்சி

 பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி 99.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 361 மாணவ, மாணவிகளில் 358 பேர் தேர்ச்சி பெற்று, 99.2 சதவீத வெற்றி பெற்றனர். இப்பள்ளி மாணவி ரித்சியா  574 மதிப்பெண் பெற்று முதலிடமும், கிருஷ்ண பிரியா 573 மதிப்பெண் பெற்று 2வது இடமும்,   ஜெய ஸ்வேதா 572 மதிப்பெண் பெற்று 3வது இடமும், தங்க கிருத்திகா 571 மதிப்பெண் பெற்று 4ம் இடமும் பெற்றனர். மேலும் கணினி அறிவியலில் மாணவர்கள் முத்து சரவணன், கொடியரசன், ஜேபட்ஷ்யான் விக்டர் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனர். 550க்கு மேல்  8 பேரும், 500க்கு மேல் 61 பேரும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

இம் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி அருட்திரு மோயீசன் அடிகளார், தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப், நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஹெலன் கெவின், சாந்தி, கணினி ஆசிரியர்கள் சிவகாமி, முத்துக்கனி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu