தென்காசியில் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாள்:09.12.2023
இடம்: ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- தென்காசி. (புதிய பேருந்து நிலையம் அருகில்)
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலை தேடும் தென்காசி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். அனுமதி இலவலசம்.
www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார் வேலை இணையத்தில் இளைஞர்கள் பதிவு செய்தால் பிற மாவட்டங்களில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான செய்திகளையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். கீழ்காணும் கூகுள் படிவத்தில் தங்களது சுய விபரங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://forms.gle/xjFXUTsGsXdhaogY6
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய கீழ் குறிப்பிட்டுள்ள whatsapp குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/JMPd40EkrwgCpks0Gip5T0
மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பற்றிய அறிந்து கொள்ளவும், வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் விவரங்களை அறிந்து கொள்ளவும் TENKASI EMPLOYMENT OFFICE டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Telegram Channel Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://t.me/Tenkasiemployment
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்,
தென்காசி மாவட்டம்.
0 கருத்துகள்