தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் அமைந்துள்ள புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் 2500 மாணவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் சளி, காய்ச்சல் என தொடர் விடுப்பு எடுத்து வரும் காரணத்தால், மாணவர்கள் நலன் பேண நிர்வாகி அருட்திரு மோயீசன் அடிகளார் ஆலோசனையின்படி பள்ளியின் 2500 மாணவர்களுக்கும் கபசுரக் கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் சே அந்தோணி அருள் பிரதீப் தலைமையில், பள்ளியின் தேசிய பசுமைப் படை மற்றும் நாட்டுநலப் பணி மாணவர்களை ஒருங்கிணைத்து உதவித் தலைமை ஆசிரியர் ஹெலன் கெவின், ஆசிரியர்கள் ஜெசி, ஜேம்ஸ், அந்தோணி, என்.எஸ்.எஸ் ஆசிரியர் தங்கதுரை கபசுரக் குடிநீர் வழங்க ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
ஆவுடையானூர் பகுதி சுகாதார நல பொறுப்பாளர்கள் லீனா தேவி, சாராள், கற்பக வல்லி, மீனா ராணி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 2500 மாணவர்கள் கபசுரக் கசாயம் குடித்து பயன்பெற்றனர்.
0 கருத்துகள்