பிளஸ் 2 தேர்வில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது
ஆலங்குளம், ஜீவா மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் - உயிரியல் பாடப்பிரிவு மாணவன் ஜெயச்சந்திரன் 581 மதிப்பெண் பெற்று முதலிடமும், கணிதம் - கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி ரக்ஷாஸ்ரீ 580 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், கணக்குப்பதிவியல் - கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு மாணவி தர்ஷினி 573 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியல் பாடத்தில் மாணவன் நித்திஷ் சரவணன், மாணவி ரக்ஷாஸ்ரீ ஆகியோரும், உயிரியல் பாடத்தில் மாணவன் ஜெயச்சந்திரன். பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய இரு பாடத்திலும் மாணவி தர்ஷினி ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் மாணவி ரக்ஷாஸ்ரீ, வேதியியல் பாடத்தில் மாணவர்கள் ஜெயச்சந்திரன், நித்திஷ் சரவணன், கணினி பயன்பாடுகள் பாடத்தில் மாணவிகள் தர்ஷினி, ஞான பிருந்தா, மாணவன் தயாநிதி ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளார்கள்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 16 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சௌ. இராதா, முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ் துணை முதல்வர் சவிதா ஷெனாய், உதவி துணை முதல்வர் மயிலம்மாள் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களும் பாராட்டினர்.
1 கருத்துகள்
வாழ்த்துக்கள். தங்கள் கல்வி பணி தொடர்ந்து வெற்றிகரமாக நடக்க இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
பதிலளிநீக்கு