செங்கோட்டை-தாம்பரம் ரயில் கடையத்தில் நின்று செல்ல தோரணமலை பக்தர்கள் குழு கோரிக்கை

 

செங்கோட்டை-தாம்பரம் ரயில் கடையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானதிரவியம் எம்.பி.யிடம்,தோரணமலை பக்தர்கள் குழு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்னக ரெயில்வே தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குகிறது. இந்த ரெயில் போக்குவரத்தை சென்னையில் கடந்த 8ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த ரெயில் தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்பட்டாலும், வரும் ஜூன் மாதம் முதல் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, இந்த ரெயிலுக்கு கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அளிக்கப்படவில்லை. கடையம் அருகில் புகழ்பெற்ற தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்தக் கோவிலுக்கு மாநிலம் முழுவதிலும் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலானது, பல ஊர்கள் வழியாக வருவதால் தோரணமலைக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்கு வசதியாக  இந்த ரெயிலுக்கு கீழக்கடையத்தில் நிறுத்தம் வேண்டும்.

மேலும் கீழக்கடையம் ரெயில் நிலையத்தில்தான் மகாகவி பாரதியார் பாரத மாதாவுக்கு முத்தமிட்டார். மேலும் கடையத்தில் பாரதியார் நினைவாலயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே  தாங்கள் ஆவன செய்து செங்கோட்டை-தாம்பரம் புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலானது, கீழக்கடையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. மிகச் சிறப்பான முன்னெடுப்பு.... மகாகவி பாரதியார் வழிபட்ட முருகன் தோரணமலை முருகன்...மேலும் மகாகவி பாரதியார் இரண்டு வருடங்கள் வாழ்ந்த ஊர் கடையம். மேலும் பாரதியார் சிறையிலிருந்து விடுதலை அடைந்து நேரே கடையம் வந்திறங்கி உடனே தாய் மண்ணை விழுந்து வணங்கி முத்தமிட்ட ஊர் கடையம்....ஆதலால் தொடர்வண்டி கடையத்தில் நிறுத்தம் கொண்டு வர அரசு ஆவண செய்ய வேண்டும் என்று மகாகவி பாரதியார் தங்கையின் கொள்ளுப்பேத்தி என்ற முறையில் நானும் கோரிக்கை விடுக்கிறேன்

    டாக்டர் கவிஞர் இரா உமா பாரதி
    சென்னை

    பதிலளிநீக்கு
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu