வாசு. தொகுதியில் ஆனந்தன் அய்யாசாமிக்கு ஆதரவாக இளைஞர்கள் சைக்கிள் பேரணி

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிடுகிறார். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து முன்னேறி அமெரிக்க பெருநிறுவனத்தில் பணியாற்றியவர் ஆனந்தன் அய்யாசாமி.  தன்னைப் போலவே தனது சொந்த ஊர் மக்களும் முன்னேற வேண்டும், அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்க பணியைத் துறந்து தாய் மண்ணுக்கு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட சேவைகளை செய்து வரும் ஆனந்தன் அய்யாசாமி, இளைஞர்கள் மத்தியில் எழுச்சி நாயகனாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது ஆனந்தன் அய்யாசாமி வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட படித்த இளைஞர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர்.  இதன் ஒரு கட்டமாக நேற்று வாசுதேவநல்லூர் தொகுதி வடக்கு புதூரில் இருந்து அரியூர் வரை சைக்கிள் பேரணி நடத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள், வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம், "ஏன் ஆனந்தன் அய்யாசாமிக்கு வாக்களிக்க வேண்டும்?" என்பதை விளக்கும் வகையிலான நோட்டீசை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

மேலும், ஆனந்தன் அய்யாசாமி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருவதாகவும், அவரை வெற்றி பெறச் செய்வது தொகுதியின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்த சைக்கிள் பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தேர்தல் பிரச்சாரத்திற்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu