டிபிஎஸ் வங்கி இந்தியா புதுச்சேரியில் தனது வங்கி செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது

 தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றான புதுச்சேரியில், தனது மேம்படுத்தப்பட்ட புதிய கிளையை ரங்கப்பிள்ளை வீதியில் தொடங்குவதன் மூலம் டிபிஎஸ் வங்கி இந்தியா தனது வங்கி செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது இப்பகுதி வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.புதுச்சேரியின் முதலமைச்சர் என். ரங்கசாமி இந்த கிளையை திறந்து வைத்தார். 

டிபிஎஸ் வங்கி இந்தியா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு கிளைகள் உட்பட தமிழ்நாட்டில் ஏறத்தாழ  260 கிளைகளுடன் இயங்கி வருகிறது. புதுச்சேரியின் பாரம்பரிய மற்றும் வணிக மையப்பகுதியில், 3,200 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது முந்தைய புதுச்சேரி கிளையானது தற்போது இந்த புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒயிட் டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கும் இக்கிளை, சில்லறை வர்த்தகம், செல்வ மேலாண்மை,  சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் வணிக வங்கிச் சேவைகளின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.

அதிநவீன வசதிகளுடன், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வங்கி வளாகம், டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களையும், தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் உறவு நிர்வாகத்தையும் ஒன்றாக இணைக்கிறது. இது தனிநபர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், சிறு வணிகர்கள் மற்றும் செல்வமிகுந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் நடைமுறைகளை மிகவும் எளிதாகப் பெறமுடிந்தாகதவும், சுலபமாக பயன்படுத்தக் கூடியதாகவும் மாற்றும் டிபிஎஸ் வங்கியின் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

உற்பத்தி, வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம் மற்றும் கல்வி எனப் பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  கட்டமைப்பைக் கொண்டுள்ள புதுச்சேரி, டிபிஎஸ் வங்கி இந்தியாவின் மிக முக்கியமானதொரு சந்தையாகும். இப்பகுதி மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் பொருளாதார இலக்குகளை அடைய மிகவும் மேம்பட்ட நிதிச்  சேவைகளை நாடுவதால், இங்கு சில்லறை வர்த்தகம், செல்வ மேலாண்மை மற்றும் சிறு வணிக வங்கிச் சேவைகளுக்கான தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நேஷனல் டிஸ்ட்ரிபியூஷன் பிரிவின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் தலைவர், சுதர்சன் சாரி  பேசுகையில், "சம்பளம் பெறும் பணியாளர்கள், தொழில்முனைவோர், சிறு வணிகங்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள், வசதி படைத்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரை பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிறந்த தளமாகப் புதுச்சேரி விளங்குகிறது. வாடிக்கையாளர்களின் அன்றாட வங்கிச் செயல்பாடுகள், செல்வ உருவாக்கம் வணிக விரிவாக்கம் மற்றும் சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய  தேவைகள் என அவர்களின் தனிப்பட்ட மற்றும் வணிகப் பயணங்களுக்குத் துணைபுரியும் ஒருங்கிணைந்த நிதிச் சேவைகளுக்கான தேவை இங்கு அதிகரிப்பதைக் காண்கிறோம்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மாநகரின் முக்கிய வணிகப் பகுதியான ரங்கப்பிள்ளை வீதியில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, இச்சந்தையில் எங்களது வாடிக்கையாளர்களுடனான உறவை மேலும் ஆழப்படுத்த உதவும். எங்களது அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் இணைந்து, சில்லறை வர்த்தகம், சொத்து மேலாண்மை மற்றும் வணிக வங்கிச் சேவைகளில் டிபிஎஸ் வங்கியின் முழுமையான பலன்களையும் வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி வழங்க இக்கிளை உதவும்," என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu