டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மிகவும் மேம்பட்ட TVS RAIDER-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது!

 

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய நிறுவனமாக முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company (TVSM)), இதுவரையில் இல்லாத அதிநவீன அம்சங்களுடன் மிகவும் மேம்பட்ட தனது TVS Raider வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய TVS Raider, இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக பல்வேறு நவீன அம்சங்களை அறிமுகப்படுத்தி இருப்பதன் மூலம் இந்திய இருசக்கர வாகனத் துறையில் புதிய வரையறைகளை உருவாக்கியுள்ளது.

புதிய TVS Raider இருசக்கர வாகனமானது, அசத்தலான வேகம் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனம் ’பூஸ்ட் மோட்’ [boost mode]-என்னும் புதிய அம்சத்தை கொண்டுள்ளது.  இது iGO அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன் [iGO Assist technology] இவ்வாகனப் பிரிவிலேயே முதல்  முறையாக அறிமுகப்படுத்தப்படும் அம்சமாகும். இந்த அம்சத்தின் மூலம் 11.75Nm @ 6000rpmஎன இதுவரையில் இல்லாத டார்க் திறனை வழங்குகிறது. அடுத்து இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக டூயல் டிஸ்க் பிரேக்குகள் [Dual Disc Brakes] மற்றும் ஏபிஎஸ் [ABS] ஆகிய அம்சங்களுடன், சாலைகளில் பயணிக்கும் போது வாகனம் ஓட்டுபவர்களுக்கு நம்பிக்கையையும், சாலைகளில் தடுமாறாமல் பயணிப்பதற்கான மேம்பட்ட நிலைத்தன்மையையும் அளிக்கிறது.. மேலும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் க்ளைட் த்ரூ தொழில்நுட்பமானது [GTT (Glide Through Technology)], மிக குறைவான வேகத்தில் பயணிக்கும் போது கூட வாகனத்தை எளிதில் கையாள உதவுவதோடு, மேம்பட்ட எரிபொருள் செயல்திறனையும் அளிக்கிறது. பல்வேறு அருமையான அம்சங்களுடன் கூடுதலாக, இவ்வாகனத்தின் டயர் இதுவரையில்லாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.   புதிய டயரின் அளவு,  முன்பக்கம் 90/90-17 ஆகவும் பின்பக்கம் 110/80-17 ஆகவும் இருக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த அம்சமானது பள்ளங்கள் இல்லாத சாலைகளிலும், மேடுபள்ளங்கள் உள்ள சாலைகளிலும் கூட வாகனம் தடுமாறாமல், எளிதில் கையாளும் வகையில் செல்வதற்கு உதவுகிறது.  இதன் மூலம், வாகனம் ஓட்டுபவர்களுக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் அம்சமாக இது இருக்கும்.  இவையனைத்தும் TVS Raider-ன் அட்டகாசமான செயல்திறன் குணாதியசத்தை [performance DNA]-ஐ வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. இவ்வாகனப் பிரிவில் இதுவரையில்லாத மேம்பட்ட தொழில்நுட்பம், இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் கண்களைக் கவரும் வகையிலான மெட்டாலிக் சில்வர் பூச்சுடன், சிவப்பு வண்ண அலாய் சக்கரங்கள் என TVS Raider வடிவமைப்பில் உண்மையிலேயே அட்டகாசமான ஒன்றாக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. 

TVS Raider வாகனத்தின் அறிமுகம் குறித்து கருத்து தெருவித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர்,  வாடிக்கையாளர் மற்றும் மின்சார வாகன வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாகி, கார்பொரேட் ப்ராண்ட் மற்றும் ஊடகப் பிரிவின் தலைமை நிர்வாகி திரு  அனிருத்தா ஹால்தார், [Mr. Aniruddha Haldar, Senior Vice President - Head Commuter & EV Business and Head Corporate Brand & Media, TVS Motor Company] கூறுகையில், "இளம் இருசக்கர வாகனப் பிரியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை TVS Raider மறுவரையறை செய்திருக்கிறது. 4 ஆண்டுகளில் இவ்வாகனம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஜென் ஸீ ரைடர்களின் வரவேற்பையும், அன்பையும் பெற்றிருக்கிறது. இன்று, புதிய TVS RAIDER வாகனமானது, iGO அசிஸ்ட் தொழில்நுட்பத்தால் இயங்கும் "பூஸ்ட் மோட்" உடன் பந்தய உணர்வை அளிக்கும் செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக ஏபிஎஸ் மற்றும் டூயல் டிஸ்க் ப்ரேக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிக்கும்.  இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக மற்றுமொரு அம்சமாக க்ளைட் த்ரூ தொழில்நுட்பம் (Glide Through Technology (GTT)) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சமானது கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் போது மெதுவாக சென்றாலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிதில் வாகனத்தை கையாளும் வசதியை அளிக்கிறது. ஆடம்பரமான தோற்றத்திற்கான அம்சங்கள் எதுவுமில்லாமல், ஆனால் ஒரு அசத்தலான வாகன அனுபவத்தை அளிக்கும் ‘விக்ட்’ ஹேண்ட்டில் பார், அருமையான செயல்திறன், மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், அலாதியான உணர்வளிக்கும் செளகரியம் என TVS Raider-ஐ ஓட்டுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு. தங்களுடைய வாகனம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைக் கொள்ளும் ஒரு மோட்டார் சைக்கிளாக இதை உருவாக்கி இருக்கிறோம்’’ என்றார்.

TVS Raider மிகவும் தரம் மேம்படுத்தப்பட்ட refined 3-valve 125 cc என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் 6,000 RPM-ல் மிகச்சிறந்த 11.75 Nm முறுக்குவிசையை அளிக்கிறது. இந்த ஆற்றலானது பந்தய களத்தில் வாகனம் ஓட்டும் உணர்வை அளிக்கும். உடனடியாக செயல்திறனை வெளிப்படுத்தும். இதனால் சிலிர்ப்பூட்டும் உணர்வையும் அளிக்கும்.  iGO Assist தொழில்நுட்பத்துடனான Boost Mode போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பம் உடனடியாக வேகத்துடனான செயல்திறனை வழங்குகிறது, அதே நேரத்தில் இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Glide Through Technology (GTT) வேகம் குறைவாக ஓட்டும் போதும் கூட வாகனத்தை எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் எளிதில் கையாள உதவுகிறது. அத்துடன் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தையும் அளிக்கிறது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு அம்சம், ஃபாலோ மீ ஹெட்லேம்ப் [Follow Me Headlamp], இந்த அம்சம் இவ்வாகனப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் வாகனத்தை நிறுத்திய பின்பு, இயந்திரம் அணைக்கப்பட்ட பிறகு,  ஹெட்லேம்பை சிறிது நேரம் ஒளிரச் செய்கிறது. இதன் மூலம் இருண்ட பார்க்கிங் பகுதிகளில் வாகன உரிமையாளர்கள் பாதுகாப்பாக செல்ல உதவும் வகையில் ஃபாலோ மீ ஹெட்லேம்ப்பை ஒளிரச் செய்ய உதவுகிறது.

TVS Raider வாகன உரிமையாளர்களுக்கு, இணைப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இரண்டு டிஸ்ப்ளே விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது. 99+ அம்சங்களுடன் கூடிய வண்ணமயமான TFT டிஸ்ப்ளே அல்லது 85+ அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான LCD டிஸ்ப்ளே ஆகிய இரண்டிலிருந்து தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இவை ஒவ்வொரு சவாரியையும் உண்மையிலேயே ஒரு நவீன அனுபவமாக தரம் உயர்த்தும் வகையில் புதுமையான அம்சங்கள் மற்றும் இணைப்புத் தொழில்நுட்பத்தை கலந்திருக்கும் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய TVS Raider விலை TFT DD மாடலின் விலை ₹95,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) மற்றும் SXC DD மாடலின் விலை ₹93,800 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).  இந்த மாதம் முதல் அனைத்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu