தனிஷ்கின் பிரத்யேக திருமண துணை பிராண்டான ரிவா, நவீன வடிவமைப்பைத் தழுவி பாரம்பரிய கைவினைத்திறனின் செழுமையைக் கொண்டாடும் திருமண மற்றும் பண்டிகை நகைகளின் அற்புதமான தொகுப்பை பெருமையுடன் வெளியிடுகிறது. தீபாவளி மற்றும் வரவிருக்கும் திருமண முகூர்த்தங்கள் என சரியான நேரத்தில், ரிவா, திருமணத்திற்கு முந்தைய நெருக்கமான சடங்குகள் முதல் பிரமாண்டமான திருமண கொண்டாட்டங்கள் வரை ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற நகைகளை வழங்குகிறது. திருமணம் என்பதைத் தாண்டி ஒவ்வொரு திருமண நிகழ்விற்கும் அழகு சேர்க்கும் பாரம்பரியத்தை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு திருமண அலங்காரத்தின் இன்றியமையாத பகுதியாக ஆக்குகிறது.
இந்த சீசனின் அறிமுகத்தின் முக்கிய நகை மறுவடிவமைக்கப்பட்ட காசுமாலை மற்றும் ஒவ்வொரு திருமண சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற கோயில் நகைகள் தொகுப்பு ஆகும். இதில் அடுக்கு ஹராம்கள், பழங்கால சோக்கர்கள், திருமண வளையல்கள், ஒட்டியானம் மற்றும் ஜிமிக்கிகள் உள்ளன. ஒவ்வொரு நகையும் பழங்கால கைவினைத்திறன் மற்றும் அமைப்புள்ள தங்கத்தில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்கால நகாஷி மற்றும் கல் வேலைப்பாடு நுட்பங்கள் மூலம் பாரம்பரிய மையக்கருக்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, இன்றைய நவீன மணப்பெண்ணுக்கு காலத்தால் அழியாததாக உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை தருணங்களுக்காக, நேர்த்தியான வெல்லக்கு-ஈர்க்கப்பட்ட நெக்ல்ஸ், பழங்கால சோக்கர்கள், அடுக்கு நெக்லஸ்கள், தோடுகள் மற்றும் தங்க வளையல்கள், வைரங்கள், வெட்டப்படாத கல் நகைகள் மற்றும் வண்ண கற்கள் கொண்ட நகைகள் என பட்டு புடவைகள் மற்றும் சமகால ஆடைகளுடன் அழகாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கலாச்சாரத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்துகின்றன. இந்த பிராண்ட் மறுவடிவமைக்கப்பட்ட தங்க மற்றும் வைர வடிவியல் காதணிகள், இலகுரக பெண்டெண்டுகள், மோதிரங்கள், நேர்த்தியான வளையல்கள் மற்றும் தங்கத்தில் வளையல்கள் என அலுவலக மற்றும் சாதாரண பயணத்திற்கு ஏற்ற பல்துறை தினசரி வரிசையையும் வழங்குகிறது.
இந்த சிறப்பு அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், தனிஷ்க் நிறுவனம் பல்வேறு பிரத்யேக சலுகைகளை அறிமுகப்படுத்துகிறது. இது தனிஷ்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தங்கம் மாற்றம் முதல் தொடங்குகிறது. வாடிக்கையாளர்களின் பழைய தங்கம் எந்த காரட் தங்கமாக இருந்தாலும், எந்த நகைக்கடைக்காரரிடமிருந்து வாங்கி இருந்தாலும் 100% மதிப்பில் 0% விலக்குடன்* மாற்றிக் கொள்ளலாம். மேலும் தங்கத்தின் மதிப்பை இழக்காமல் புதிய நகைகளை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம். கூடுதலாக, தனிஷ்க் தங்க நகைகளுக்கு ஒரு கிராமுக்கு ₹450 வரை தள்ளுபடியும், வைர மதிப்பில் 20% வரை தள்ளுபடியும் வழங்குகிறது, இது காலத்தால் அழியாத நகைகளை மேம்படுத்தவும் முதலீடு செய்யவும் சரியான நேரமாக அமைகிறது.
இந்தச் சலுகைகள் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 21, 2025 வரை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் செல்லுபடியாகும், மேலும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 21, 2025 வரை கேரளாவில் செல்லுபடியாகும். இந்த திருமண சீசனில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி உடைக்கு ஏற்ற நகை , பண்டிகை மற்றும் மணப்பெண் நகைகளை வாங்க வாய்ப்பளிக்கிறது.
சலுகைகளைப் பற்றிப் பேசிய தலைமை வடிவமைப்பு அதிகாரி திருமதி ரேவதி காந்த், “திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்களின் இந்த பருவத்தில் நாம் நுழையும் வேளையில், ரிவா பை தனிஷ்க் தென்னிந்திய மணமகளின் நவீன உணர்வைத் தழுவி காலத்தால் அழியாத அழகைக் கொண்டாடுகிறது. எங்களின் வடிவமைப்பு அனுகுமுறையானது அனைவராலும் என்றும் காசுமாலை மற்றும் கோயில் நகைகள் மறுவடிவைப்பு செய்வதே ஆகும். சிக்கலான நகாஷி மற்றும் அமைப்புள்ள தங்க கைவினைத்திறனைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளோம். இது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியதாக உணரும் வகையிலும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாரும் இருக்கும். திருமண நகைகளைத் தாண்டி தங்கம், வைரங்கள், போல்கி மற்றும் வண்ணக் கற்களில் என பல்துறை பண்டிகை மற்றும் தினசரி அணியும் நகைகளையும் நாங்கள் வடிவமைத்துள்ளோம். இது பெண்களுக்கு திருமணத்திற்கு முந்தைய சடங்குகள், பண்டிகைக் நேரங்களில் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற எளிதாக பொருந்தும் நகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒரு நேசத்துக்குரியதாக கருதப்படுகிறது, இன்றைய மணமகளின் தனித்துவத்தைப் பற்றி பேசும் அதே நேரம் பாரம்பரியத்தின் மரபை முன்னெடுத்துச் செல்கிறது” என்றார்.
0 கருத்துகள்