இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத்திட்ட மேம்பாட்டு நிறுவனமும், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடித்துவமிக்க நிறுவனமுமான ஜி ஸ்கொயர், திருநெல்வேலியின் ரெட்டியார்பட்டி மலையில் ’ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க்’ வில்லா மனைத் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ’ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க்’ வில்லா மனைத் திட்டத்தின் முதல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட 72 மணி நேரத்தில் 184 வீட்டுமனைகள் விற்பனையானதை அடுத்து கிடைத்திருக்கும் அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இப்போது இரண்டாம் தொகுப்பை ஜி ஸ்கொயர் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம், திருநெல்வேலியில் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு பகுதியாக வரவேற்பைப் பெற்று வரும் ரெட்டியார்பட்டி மலையில், ப்ரீமியம் வில்லா மனைகளை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பை வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வழங்குகிறது.
6.57 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க் வில்லா மனைத் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பில், 135 ப்ரீமியம் வில்லா மனைகள் உள்ளன. இவையனைத்தும், பாதுகாப்பான, மாசு இல்லாத மற்றும் நன்கு இணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் மன நிம்மதியளிக்கும் வாழ்க்கைச் சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தொகுப்பில் இருக்கும் ஃப்ரீமியம் வில்லா மனைகள் 1.39 சென்ட் முதல் 4.38 சென்ட் வரை தங்களது கனவு இல்லத்தைக் கட்ட விரும்புபவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. இந்த திட்டம் சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், நன்கு இணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகளையும் பெற்றிருக்கிறது.
திருநெல்வேலியில் ப்ரீமியம் வில்லா மனைகளுக்கான சந்தை மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. இந்நிலையில் ’ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க்’ இரண்டாம் தொகுப்பில் உள்ள வில்லா மனைகளின் முன்பதிவுகளில், முதலில் மேற்கொள்ளும் 30 முன்பதிவுகளுக்கு மட்டும், ’ஒரு சென்ட்டிற்கு ₹3.95 லட்சம்’ முதல் என்ற கவர்ச்சிகரமான விலையில் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும் வகையில், மனை மற்றும் 2 பிஎச்கே வில்லா ரூ.28 லட்சத்தில் தொடங்குகிறது. அதேபோல், மனை மற்றும் 3 பிஎச்கே வில்லா ரூ.47 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இவற்றுடன், மனை மற்றும் 4 பிஎச்கே வில்லா ரூ.65 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இது வீடு வாங்குபவர்களின் தேவைக்கேற்ப, முதலீடு செய்யவும், தங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைமுறை விருப்ப தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.
ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க் வில்லா மனைத் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பு அறிமுகம் குறித்து பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பால ராமஜெயம் "ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க்’ இரண்டாம் தொகுப்பின் மூலம், நன்கு திட்டமிடப்பட்ட, மாசற்ற குடியிருப்பு சமூகங்களை உருவாக்கும் எங்களது தொலைநோக்குப் பார்வையை மேலும் விரிவுபடுத்துகிறோம். இது குடும்பங்களுக்கு சீரான மற்றும் நிலையான வாழ்க்கை முறையை அனுபவிக்க வழிவகுக்கும். திருநெல்வேலி எப்போதும் அமைதியான இயற்கைச் சூழலுக்கு பெயர் பெற்றது. மேலும் இந்த திட்டம், வில்லாக்களை கட்டுவதற்குத் தயாராக உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பல நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான பலன்களை உறுதிப்படுத்துகிறது. அனைத்திலும் முழுமையான வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நீண்டகால முதலீட்டுக்கான மதிப்பு உயர்வு ஆகியவற்றுடன், தங்கள் கனவு இல்லத்திற்கான மனையை சொந்தமாக்கிக் கொள்ளும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க் இரண்டாம் தொகுப்பை வடிவமைத்துள்ளோம்" என்றார்.
இந்த மனைகள் அனைத்தும் உடனடியாக கட்டுமானம் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு 'பட்டா' முதல் 'கிரஹப்பிரவேசம்' வரை கனவு இல்லத்தை கட்டி முடிக்கும் வரை முழுமையான வழிகாட்டுதலை வழங்கும் 'ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்' என்ற தனித்துவமான திட்டத்தின் பயனையும் இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது எந்தவித தங்குதடைகளும் இல்லாமல், மன நிம்மதியுடன் வீடு கட்டும் அனுபவத்தை உறுதி செய்கிறது.
இந்த திட்டம் எல்.இ.டி. தெருவிளக்குகள், நன்கு அமைக்கப்பட்ட பிளாக்டாப் சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் இணைப்புகள் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட மேம்பட்ட உள்கட்டமைப்புகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது மேலும் இங்கு வசிப்பவர்கள், 24x7 சிசிடிவி கண்காணிப்பு, ஒளிவு மறைவில்லாத ஆவணங்கள், RERA ஒப்புதல் மற்றும் ஒரு வருட இலவச பராமரிப்பு போன்ற பலன்களைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு செளகரியத்தையும், மன அமைதியையும் உறுதி செய்கிறது.
ஜி ஸ்கொயர் பற்றி:
ஜி ஸ்கொயர், இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிறுவனம், வீட்டுமனைகள் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் பலனாக, இந்தியாவில் 18,000-க்கும் மேற்பட்ட மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பராக திகழ்கிறது. இதுவரையில் இந்தியா முழுவதிலும் 4,000-க்கும் அதிக பரப்பளவு இடங்களை ஒருங்கிணைத்து வீட்டுமனைத் திட்டங்களாக செயல்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்பான குடியிருப்பு சமூகங்கள், முற்றிலும் வெளிப்படையான செயல்முறைகள் மற்றும் தொந்தரவு இல்லாத பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, பொள்ளாச்சி, ஓசூர், மைசூர், மற்றும் பல இடங்களில் தனது பரவலான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள உள்கட்டமைப்புடன் உலகத் தரம் வாய்ந்த முதலீட்டு நிலங்களை ஜி ஸ்கொயர் தொடர்ந்து வழங்கி வருகிறது.
0 கருத்துகள்