OPPO India தனது பிரிவில் மிகவும் வலுவான5G ஸ்மார்ட்போன் ஆனOPPO K13x 5G-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது - குறிப்பாக நீடித்து உழைக்கும் தன்மை, சமரசம் இல்லாமல் அனைத்து வகையான செயல்பாடுகளையும் கோரும் இளம் மாணவர்கள், ஆரம்பகால நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீள்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட K13x 5G, SGS கோல்ட் டிராப் சான்றிதழ் மற்றும் MIL-STD 810H இராணுவத்-தர தரங்களுடன் வருகிறது, இது அதன் வகையில் மிகவும் வலுவான சாதனமாக அமைகிறது. அதன் 360°Damage-Proof Armour Body, aerospace-grade AM04 aluminum alloyபயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது, Crystal Shield glass-ஆல் வலுவூட்டப்பட்டுள்ளது, அத்துடன் ஆழ்கடல் ஸ்பாஞ்ச்களால் ஈர்க்கப்பட்ட biomimetic Sponge Shock Absorption System-ஆல் மேம்படுத்தப்பட்டுள்ளது. OPPO K13x 5G, நீடித்து உழைக்கும் தன்மைக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது, ஸ்டைல் அல்லது பயன்பாட்டில் சமரசம் செய்யாமல் ஒப்பிடமுடியாத கடினத்தன்மையை வழங்குகிறது.
4GB+128GBவகைக்கு ரூ.11,999விலையிலும், 6GB+128GB வகைக்கு ரூ.12,999விலையிலும், 8GB+128GB வகைக்கு ரூ.14,999விலையிலும் OPPO K13x 5G,2025 ஜூன் 27 முதல் OPPO e-store மற்றும் Flipkart-இல் நண்பகல்12 மணி முதல் இரண்டு வண்ண விருப்பங்களில்கிடைக்கும் - Midnight Violet மற்றும் Sunset Peachஆகிய நிறங்களில் வாங்கக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நுகர்வோர், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகளுடன் அல்லது ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கூடுதலாக3 மாதவிலையில்லாஈஎம்ஐ விருப்பத்துடன், விற்பனை நாளில் மட்டும்4GB & 6GB வகைகளில்ரூ.1,000 உடனடி தள்ளுபடியையும், 8GB வகைகளில்ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் பெறலாம், இதன் நடைமுறை விலை முறையே ரூ.10,999 ரூ.11,999, ரூ.12,999ஆகும்.
OPPO India-வின் தயாரிப்பு தொடர்புத் தலைவர் சவியோ டி'சோசா அவர்கள் இவ்வாறு கூறினார், "OPPO K13x மூலம், Gen Z-இன் நிஜ உலகத் தேவைகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்: தனிச்சிறப்புமிக்க நீடித்துழைப்பு, புளுயிட் செயல்திறன் மற்றும் அறிவார்ந்த சக்தி திறன் - இவை அனைத்தும் சிறந்த மதிப்பில். K13x ஒரு அதிநவீன பயோமிமெடிக் அதிர்ச்சி உறிஞ்சுதல் அமைப்பு, இவ்வகையில்-முன்னணி பேட்டரி ஆப்டிமேஷன், 5G தயார்நிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது; இந்த ஸ்மார்ட்போன் OPPO-வின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது - சமரசம் இல்லாமல் ஒரு தொடக்க நிலை ஸ்மார்ட்போனில் என்ன சாத்தியம் என்பதை மறுவரையறை செய்கிறது."
ஃபிளிப்கார்ட் மொபைல்ஸ் துணைத் தலைவர் ஸ்மிருதி ரவிச்சந்திரன்அவர்கள் இவ்வாறு கூறினார், "Flipkartல், வலுவான செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் தாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். OPPO K13x 5G-இன் அறிமுகம், நீடித்து உழைக்கும் தன்மைக்கான வளர்ந்து வரும் நுகர்வோர் தேவையை சமரசம் இல்லாமல் நிவர்த்தி செய்கிறது. அதன் இராணுவத் தர கடினத்தன்மை, புதுமையான அதிர்ச்சி உறிஞ்சுதல் அமைப்பு, நன்கு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், K13x மதிப்பு, ஸ்டைல் மற்றும் மீள்தன்மையைத் தேடும் இளம் பயனர்களுக்கு ஒரு கட்டாயத் தேர்வாகும். இந்த சக்திவாய்ந்த, நீடித்துழைக்கும் சாதனத்தை இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வர OPPO உடன் மீண்டும் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
0 கருத்துகள்