கோவை பிராந்தியத்தில் நீர் பாதுகாப்பைப் பெருக்கும் நோக்கத்தில் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனம், மச ஒரம்பு நீரோடை மறுசீரமைப்புத் திட்டத்தை கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் மண்டலத்தில் தொடங்கியிருந்தது. ’சிறுதுளி’ அமைப்புடன் சேர்ந்து இந்த முக்கியமான பணியை டைட்டன் ஒருங்கிணைக்கிறது. நீர்நிலைகளை முழுமையாக மறுசீரமைப்பு செய்திருப்பதன் மூலம் 10 கோடி லிட்டர் நீராதாரம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பணிகளின் மூலம் வேளாண்மை மற்றும் கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் வற்றாத நீராதாரத்தை அளித்து குன்றுப்பகுதிகளில் மழைத்தண்ணீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீரின் அளவை மலை கிராமப்புறப் பகுதிகளில் உயர்த்துவதே நோக்கமாகும். தொடர்ச்சியான மேல்நிலை தடுப்பணைகளை அமைப்பதன் மூலமும், வண்டல் மண் அள்ளுதல் மற்றும் கால்வாய் வடிவமைத்தல் பணிகளை மேற்கொள்வதன் மூலமும், இந்த திட்டம் மண் அரிப்பைத் தடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அணைகளிலிருந்து முறையாகத் தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் வெள்ளத்தடுப்பையும், மனிதர்களுக்கும் விலங்களுக்குமான மோதலையும் குறைக்கமுடியும். இதனால் வேளாண்மை சமூகத்துக்கான நீர்த்தேவைகளையும் வேளாண்மைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.
டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே.வெங்கடராமன், சீஃப் சஸ்டெயினபிலிட்டி அதிகாரி என்.இ.ஸ்ரீதர், சுற்றுலாத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் [சுற்றுலா, பண்பாடு மற்றும். சமய அறநிலையத்துறை] கே.மணிவாசன், ஐ.ஏ.எஸ்., நீர் ஆதாரத் துறையின் கூடுதல் செயலர் எஸ். மலர்விழி. ஐ.ஏ.எஸ்., கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவார். ஐ.ஏ.எஸ், கோவை முனிசிபல் கார்போரேஷன் ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன். ஐ.ஏ.எஸ் ஆகியோர் மாபெரும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இத்திட்டத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் இத்திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் அங்கமாக நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்கான கருத்துருவாக்கத்தையும், செயல்படுத்துதலையும் ‘சிறுதுளி’ வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது.
“நீர் பாதுகாப்பு என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. கிராமப்புற சமூகங்களுக்கான சமூகப் பொருளாதார பிரச்சனை தொடர்புடையதாகும்” என்று டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி கே வெங்கடராமன் கூறியுள்ளார். “தொடர்ந்து திட்டமிட்ட தலையீடுகள் மூலம் நிலத்தடி நீர் அளவைக் குறையாமல் பாதுகாப்பதன் மூலம் 1200 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேரை தன்னிறைவாக்கியுள்ளோம். அவர்கள் அத்தனை பேரும் இந்த நீராதாரத்தைத்தான் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கின்றனர். இத்திட்டம் சமூக மட்டத்தில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அறிவிக்கிறது. கோவைப் பிராந்தியத்தில் வேளாண்மை நிலங்களைப் பண்படுத்துவதற்கும், அதன் வாயிலாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், நிலத்தைத் தோண்டி நீரெடுக்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் இத்திட்டம் உதவுகிறது” என்று திரு. வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்