முன்னணி உலக அழகு பிராண்டான கார்னியர், தனது நிலைத்தன்மை உறுதிமொழிகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் சுவாச் பாரத் மிஷன் - அர்பன் இயக்கத்தில் இணைந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு இத்தொடர் முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கான மைய சேகரிப்பு புள்ளிகளாகச் செயல்படும் மிஷனின் "குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி" (RRR - Reduce, Reuse, Recycle) மையங்களை ஆதரிக்கும்.
இந்த கூட்டாண்மை, புதுச்சேரி பகுதியில் உள்ள மூன்று இடங்களில் ராக் கடற்கரை, குருசுக்குப்பம் கடற்கரை மற்றும் கடலூர் கடற்கரை ஆகியவற்றில் தூய்மை இயக்கத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள 22 கடற்கரைகளிலும் இந்த இயக்கம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், புரி, கோவா, மங்களூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தூய்மை பணியில் சிறப்பாக பங்கேற்றனர்.
இது கார்னியரின் பசுமை அழகு பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியை ‘Plastics for Change’ என்ற நிறுவனத்துடன் இணைந்து கார்னியர் மேற்கொண்டு வருகிறது. 'Green Beauty' திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலைத்தன்மையுள்ள தீர்வுகளை உருவாக்கவும், பசுமையான எதிர்காலத்திற்காக நுகர்வோர் “One Green Step” எடுக்க ஊக்குவிக்கவும் கார்னியர் உறுதியாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஒத்துழைப்பு குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MOHUA) ஸ்வாச் பாரத் மிஷன்-நகர்ப்புறத்தின் இணைச் செயலாளரும் தேசிய மிஷன் இயக்குநருமான திருமதி ரூபா மிஸ்ரா கூறுகையில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கும் சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் எங்கள் கூட்டு முயற்சியில் கார்னியருடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அரசின் முயற்சிகள் மற்றும் தனியார் துறைக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை இந்தக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது, என்றார்.
2020ஆம் ஆண்டில் இருந்து, கார்னியர் நிறுவனம், Plastics for Change என்ற நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சி, அரவணைக்கப்படாத கழிவு சேகரிப்பாளர்கள், கழிவு மேலாண்மை தொழில்முனைவோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. 2022 நவம்பரில், கார்னியர் தனது முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையத்தை இந்தியாவின் சென்னையில் தொடங்கியது. பிளாஸ்டிக் சேகரிப்பு சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்யும் நோக்கில், மும்பை, சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் 20 முக்கிய இடங்களில் கார்னியர் பிளாஸ்டிக் சேகரிப்பு கியாஸ்க் மையங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்களின் #OneGreenStep எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இதுவரை இந்த கூட்டணியின் மூலம் கார்னியர் சுமார் 900 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் கார்னியர் 1000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
Plastics for Change பிளாஸ்டிக் சேகரிப்பு மாதிரியின் மூலம், இந்த சேகரிப்பு மையங்கள் கழிவு சேகரிப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணிக்கும் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன. இன்று, நிதி சேமிப்பு வாய்ப்பு, வீடு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் போன்ற ஆதரவுகளின் மூலம், சுமார் 15,000 சமூக உறுப்பினர்களின் வாழ்க்கை நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கார்னியர் இந்தியாவின் பொது மேலாளர் திரு.அஜய் சிமா கூறுகையில், "கார்னியரில், நிலைத்தன்மை என்பது எங்கள் அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருக்கிறது. எங்கள் 'Green Beauty' முன்முயற்சி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் 'சுவாச் பாரத் மிஷன் - அர்பன்' இயக்கத்துடன் எங்களது ஒத்துழைப்பு, இந்த உறுதிப்பாட்டின் முக்கியமான ஒரு பகுதியாகும். நுகர்வோரை நிலைத்த எதிர்காலத்திற்காக 'One Green Step' எடுக்க ஊக்குவிப்பதன் மூலம், கடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து, சுற்றுச்சூழலின் மீது நேர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறோம். Plastics for Change மற்றும் இப்போது Swachh Bharat Mission-Urban ஆகியவற்றுடன் எங்களது கூட்டாண்மையின் மூலம், கார்னியர் ஒரு நிலைத்தன்மையுள்ள அழகு பிராண்டாக தன்னை நிலைநிறுத்துவதுடன், பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான போரில் சமூகங்களையும் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்தச் சாத்தியமான வகையில் செயல்பட வலுப்படுத்துகிறோம்" என்றார்.
மார்ச் 2021 முதல், கார்னியரின் அனைத்து தயாரிப்புகளும் விலங்குகள் மீது சோதனை செய்யப்படுவதை முற்றிலும் நிறுத்தும் நோக்கில், Cruelty-Free International அமைப்பின் Leaping Bunny Programme கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கார்னியர் கிரீன் பியூட்டி என்பது நிலைத்தன்மைக்கான முழுமையான அணுகுமுறையாகும். முக்கிய பகுதிகளில் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பது அல்லது ஒழிப்பது, கார்னியரின் மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்தையும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். மேலும் அறிய, www.garnier.in ஐப் பார்வையிடவும், எங்கள் 2023 நிலைத்தன்மை முன்னேற்ற அறிக்கையைப் பதிவிறக்கவும். https://www.garnierarabia.com/-/media/project/loreal/brand-sites/garnier/apac/mena-hub/green-beauty/2023-garnier-sustainability-progress-report.pdf?rev=a2196b543a81403fab04053dd3ad8601.
இந்த அறிக்கை, 41 வெவ்வேறு முக்கிய செயல்பாட்டு குறியீடுகள் (KPIs) அடிப்படையில் ஒரு சுயாதீன அமைப்பால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகும்.
0 கருத்துகள்