புதிய டிரெண்ட்களை ஏற்படுத்தும் இளம் தலைமுறையினருக்காக நடுத்தர-விலைப் பிரிவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தினை வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்தி வரும் போக்கோ புது தில்லியில் நடைபெற்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வின்போது - இந்தியாவில் எஃப்6 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் எஃப் சீரிஸ் ரகத்தை விரிவாக்கியுள்ளது. இது இந்திய மார்கெட்டில் 29 மே 2024 மதியம் 12 மணி முதல் டைட்டானியம் மற்றும் பிளாக் ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும். 8+256ஜிபி ரகம் ரூ.25,999க்கும், 12+256ஜிபி ரகம் ரூ.27,999 மற்றும் 12+512 ஜிபி ரகம் ரூ.29,999 ஆகிய அட்டகாசமான விலைகளில் விற்பனைக்கு வருகின்றன. இந்த சிறப்பு விலையானது விற்பனையின் முதல் நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இதில் ரூ.2,000 வங்கி சலுகைகள் மற்றும் ரூ.2,000 சாதன எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ஆகியவை உள்ளடங்கும். மேலும், வாடிக்கையாளர்கள் விற்பனையின் முதல் நாளில் 1 + 1 அடிப்படையில் 2 ஆண்டு வாரண்ட்டியைப் பெற்று பயனடையலாம். ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள், இஎம்ஐ பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் ரூ .2,000/- உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
போக்கோ எஃப்6 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் சக்திவாய்ந்த ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென்3 புராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன 4என்எம் புராசஸ் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாகும். இந்த புராசஸரின் உள்ளமைப்பில் 3.0 கிகா ஹர்ட்ஸ்-இல் இயங்கும் 1 கார்டக்ஸ் எக்ஸ்4 கோர், 2.8கிகா ஹர்ட்ஸ்-இல் இயங்கும் 4 கார்டக்ஸ் ஏ720 கோர்ஸ், 2.0 கிகா ஹர்ட்ஸ்-இல் இயங்கும் 3 கார்டக்ஸ் ஏ520 கோர்ஸ் ஆகியவை உள்ளன. சிறந்த கேமிங்கிற்காக அட்ரெனோ 735 ஜிபியு வசதி உள்ளது. இதன் புதுமையான ஐஸ் லூப் கூலிங் தொழில்நுட்பமானது அதிக பயன்பாட்டின் போது கூட சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். 4800எம்எம் வெப்ப வெளியேற்றப் பகுதியுடன் வரும் குளிரூட்டும் தொழில்நுட்பம் அதிக வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ், மற்றும் 12ஜிபி ரேம் உடன் 512ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஃபிளாக்ஷிப் எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் இந்த சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் - இதன் செயல்திறன் மற்றும் டேட்டா பரிமாற்ற வேகம் மேலும் மேம்படுகிறது. வைல்ட்பூஸ்ட் 3.0 தொழில்நுட்பத்துடன் வருவதால் கேமிங் செயல்திறன் மற்றும் ஆற்றல் மின்னாற்றல் சேமிப்பு மேம்படுகிறது.இந்த சாதனம் 7.8எம்எம் தடிமன் மற்றும் 179கிராம் எடையுடன் வருகிறது. போக்கோ எஃப்6 5ஜி ஸ்மார்ட்ஃபோன் 1.5கே ரிசொல்யூஷன் மற்றும் 68 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களை ஆதரிக்கும் 6.67-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.120ஹர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், கேமிங்கிற்கான 240ஹர்ட்ஸ் மற்றும் 480ஹர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் 2160 ஹர்ட்ஸ் இன்ஸ்டன்ட்டேனியஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவற்றை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மென்மையான மற்றும் ஃப்ளூயிட் ஸ்க்ரோலிங், கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் மூலம் கீறல்களிலிருந்து டிஸ்பிளே பாதுகாப்பு, டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10+, டியுவ் ரெய்ன்லேண்ட் டிரிபிள் சான்றிதழ், 50 எம்பி சோனி ஓஐஎஸ் + இஐஎஸ் கேமரா, ஐஎம்எக்ஸ்882 சென்சார், சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் கொண்ட 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா, 2 மடங்கு இன் - சென்சாட் லாஸ்லெஸ் ஜூம் வசதி, நைட் மோட், மோஷன் டிராக்கிங் ஃபோக்கஸ், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஏஐ கேமரா, ஏஐ இமேஜ் எக்ஸ்பேன்ஷன், மேஜிக் எரேசர் ப்ரோ, ஏஐ பொக்கோ, மேஜிக் கட்அவுட், 20எம்பி செல்ஃபி கேமரா, ஸ்கிரீனைத் தொடாமல் அதில் உள்ளவற்றை ஏர் கெஸ்ச்சர் மூலம் கன்ட்ரோல் செய்யும் ஏஓஎன், சக்திவாய்ந்த 90வாட் டர்போ சார்ஜிங், 120வாட்ஸ் இன்பாக்ஸ் சார்ஜர், 5000 எம்ஏஎச் லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரிஅம்சங்களுடன் வருகிறது.
மேலும், இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையிலான ஜியோமி ஹைப்பர் ஓஎஸ் இல் இயங்குகிறது. இது பயனர்களுக்கு சமீபத்திய அம்சங்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குகிறது. மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் ஆகியவற்றுடன் நீண்ட கால ஆதரவு மற்றும் செயல்பாட்டிற்கான வாக்குறுதியை வழங்குகின்றது. இந்த சாதனம் 2.4கிகா ஹர்ட்ஸ் வைஃபை மற்றும் 5கிகாஹர்ட்ஸ் வைஃபை Fi ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. புளூடூத் 5.4 மற்றும் வைஃபை 6 ஆகியவை உள்ளதால், பொருத்தமான சாதனங்களுடன் தடையற்ற கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்த சாதனத்தில் டிஎஸ்டிஏ, ஸ்மார்ட் சிம் ஸ்விட்ச் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட்ஃபோனின் அறிமுகம் குறித்து உற்சாகமாகப் பேசிய போக்கோ இந்தியா நிறுவனத்தின், கன்ட்ரி ஹெட், ஹிமான்ஷு டாண்டன் "ஒரு
ஸ்மார்ட்ஃபோனுக்கும் மேலான சாதனமாக இருக்கக்கூடிய போக்கோ எஃப்6 5ஜி-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.இதன் மூலம் நடுத்தர விலையிலான ஸ்மார்ட்ஃபோன் பிரிவில் மீண்டும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த வெளியீடு எங்களது அடுத்தகட்ட முன்னேற்றத்தின் எல்லைகளை மேலும் விரிவாக்கும்; இது எங்கள் பயணத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவும் இருக்கும்” என்றார்.
0 கருத்துகள்