இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, முற்றிலும் புத்தம் புதிய 2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ஐ அறிமுகம் செய்திருக்கிறது.. இந்தப் புதிய பதிப்பு டிவிஎஸ் அப்பாச்சி வரிசை வாகனத்தில் மிகவும் வலிமையானதாக, டுயல் சேனல் ஏபிஎஸ் [dual channel ABS] அளிக்கும் மிகவும் மேம்பட்ட அசத்தலான பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 இருசக்கர வாகனமானது ஓபிடி2ஒஒபிக்கு ஏற்ற ஒன்றாகவும், டுயல் சேனல் ஏபிஎஸ் அம்சத்துடனும் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இவ்வாகன பிரிவிலேயே மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு, மிகச்சிறப்பான வாகன கட்டுப்பாடு இரண்டையும் உறுதி செய்கிறது.. மேலும்அபார சக்தி, எந்த சூழலிலும் எளிதில் கையாளுவதற்கான கட்டுப்பாட்டையும் வழங்குவதால், இவ்வாகனப் பிரிவில் மிகச் சிறந்த தேர்வாக தனித்து நிற்கிறது.இன்றைய இரு சக்கர வாகன ப்ரியர்களிடையே அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் பொருத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ன்அதிநவீன தொழில்நுட்பம், மிகவும் துல்லியமான வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன்களை ஒருங்கிணைக்கும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஓபிடி2பி க்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பு, டுயல் சேனல் ஏபிஎஸ், சிவப்பு அலாய் வீல்கள் ஆகியவை 2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ன் புதிய அம்சங்கள் ஆகும்.
2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ன் புதிய அம்சங்கள், 8,750 ஆர்பிஎம்மில் மிகச் சிறந்த உச்சமாக 16.04 பிஎஸ் செயல்திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் 7,000 ஆர்பிஎம்மில் 13.85 என்எம் அபாரமான முறுக்குவிசையையும் வழங்குகிறது. டிவிஎஸ் அப்பாச்சியின் முத்திரைப் பதிக்கும் ரேசிங் டிஎன்ஏ உடன், இவ்வாகனப் பிரிவில் அதிக சக்தியை அளிக்கும் வகையில் மிகச் சரியான வாகன எடையுடனான பவர் டு வெயிட் விகிதத்துடன் சிலிர்க்க வைக்கும் சவாரி அனுபவத்தை வழங்குகிறது.
இந்த மோட்டார் சைக்கிள் டிவிஎஸ் அப்பாச்சி வரிசையில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த ஸ்போர்ட், அர்பன், ரெயின் ஆகிய மூன்று தனித்துவமான சவாரி முறைகளையும் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் அம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் இணைப்பு தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் ஆகிய இரு கவர்ச்சிகரமான வண்ணங்களில் சிவப்பு அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. இவைTகம்பீரமான தோற்றம் மற்றும் ரேசிங் செயல்திறனுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 அறிமுகம் குறித்துப் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் விமல் சம்ப்லி கூறுகையில், “டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 தனது வாகனப் பிரிவில் தொடர்ந்து புதிய வரையறைகளை நிர்ணயித்து வருகிறது, டிவிஎஸ் அப்பாச்சியின் பந்தயக் கள குணாதிசியமான ரேசிங் டிஎன்ஏ-வைமேலும் மேலும் அபாரமானதாக தக்க வைத்து கொண்டு, ஒவ்வொரு தலைமுறையிலும் தனது ஆதிக்கத்தை உருவாக்கி வருகிறது. சவாரியை தங்களுக்கு தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கும் ரைட் மோட், வாய்ஸ் அசிஸ்ட் வசதியுடன் கூடிய SmartXonnect மற்றும் இப்போது டூயல் சேனல் ஏபிஎஸ் [Dual Channel ABS] போன்ற இவ்வாகனப் பிரிவில் இருக்கும் முன்னணி அம்சங்களுடன், ஒரு செயல்திறன் மோட்டார் சைக்கிளில் இருந்து வாகன ப்ரியர்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதை தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது.TVS Apacheஎன்பது அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தும்ஒரு இயந்திரம் விட,6 மில்லியனுக்கும் மேற்பட்ட சாகசத்தை விரும்பும் இரு சக்கர வாகன ப்ரியர்களைக் கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய சமூகமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.2025 TVS Apache RTR 160கூர்மையான வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உண்மையிலேயே சிலிர்ப்பூட்டும் சவாரிக்கான வரலாற்றை கொண்டிருக்கும் பொறியியல் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மரபை தொடர்ந்துதக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
2025 TVS Apache RTR 160 இந்தியா முழுவதும் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவன விநியோகஸ்தர்களிடம் கிடைக்கிறது.இதன் விலை 1,34,320 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)- ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
0 கருத்துகள்