ஆகாஷ் பைஜூஸ் நெல்லை மாணவன் ஸ்ரீராம் சாதனை

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (ஏஇஎஸ்எல்), கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) மெயின்ஸ் 2024 இரண்டாம் அமர்வில் நெல்லையைச் சேர்ந்த மாணவனின் சிறப்பான சாதனையை பெருமையுடன் அறிவிக்கிறது.

ஏஇஎஸ்எல்-இன் மாணவன் ஸ்ரீராம் ஏ, அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 65வது இடத்தைப் பெற்றுள்ளார். முக்கிய பாடமான இயற்பியல் மற்றும் வேதியியலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவனின் சிறப்பான செயல்திறன் அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமின்றி, இந்தியாவின் மிகவும் சவாலான தேர்வில் ஒன்றான ஜேஇஇ-ல் கடினமான பாடங்களில் அவர்களின் ஆழமான பிடியை முன்னுக்குக் கொண்டுவருகிறது. தேசிய தேர்வு முகமை 24.04.2024 அன்று அசாதாரண சாதனைகளை வெளியிட்டு சிறப்பான ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

ஆகாஷின் புகழ்பெற்ற வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்த மாணவன், உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட IIT JEE ஐ வெல்வதற்கான கடுமையான பயணத்தை மேற்கொண்டார். அடிப்படைக் கருத்துகளைப் பயின்று தேர்ச்சி பெற்று, ஒழுக்கமான ஆய்வு முறையைக் கடைப்பிடித்தது மாணவனின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மாணவன், “எனது வெற்றிக்கு நான் என்றும் ஆகாஷிற்கு கடமைப்பட்டுள்ளேன். ஆகாஷின் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் பயிற்சி எங்களின் இந்த பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அவர்களின் அசைக்க முடியாத வழிகாட்டுதல் இல்லாமல், சுருக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏராளமான பாடங்களில் தேர்ச்சி பெறுவது ஒரு தீர்க்கமுடியாத சவாலாக இருந்திருக்கும்” எனக் கூறினார்.

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் திரு. தீரஜ் மிஸ்ரா, மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில் “மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனானது, விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளை மாணவர்களுக்கு வழங்கி போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க அவர்களை தயார்படுத்துவதில் AESL இன் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்” என்றார்.

JEE (மெயின்ஸ்) தேர்வானது மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்புகளை வழங்க இரண்டு அமர்வுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. JEE அட்வான்ஸ்டு தேர்வு பிரத்தியேகமாக மதிப்புமிக்க இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IITs) சேர்க்கையை எளிதாக்குகிறது. JEE மெயின்ஸ் இந்தியா முழுவதும் உள்ள பல தேசிய தொழில்நுட்ப PRESS RELEASE நிறுவனங்கள் (NITகள்) மற்றும் பிற மத்திய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் பயில நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. JEE அட்வான்ஸ்டு தேர்விற்கு முன்பு JEE Main-ல் பங்கேற்பது கட்டாயமாகும்.

ஆகாஷ் பைஜூஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாட வடிவங்கள் மூலம் விரிவான IIT-JEE பயிற்சியை வழங்குகிறது. சமீபத்தில், ஆகாஷ் கணினி அடிப்படையிலான பயிற்சியை வளர்ப்பதில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் புதுமையான iTutor இயங்கு தளமானது பதிவுசெய்யப்பட்ட வீடியோ விரிவுரைகளை வழங்குகிறது. இது மாணவர்கள் சுய-வேக கற்றலில் ஈடுபடவும், தவறவிட்ட அமர்வுகளைக் பார்க்கவும் உதவுகிறது. மேலும், மாதிரி தேர்வுகள் உண்மையான தேர்வு நிலைமைகளை உருவகப்படுத்துகின்றன. இது மாணவர்கள் தேர்வை திறம்பட சமாளிக்க தேவையான பரிட்சயம் மற்றும் தன்னம்பிக்கையை அளிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu