மோட்டோரோலாவின் மோட்டோ ஜி64 5ஜி அறிமுகம்

இந்தியாவின் தலைசிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா,  5ஜி பிரிவிலேயே  முன்னணி வகிக்கும் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட் ஃபோன் அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது. மோட்டோ ஜி64 5ஜி பேர்ல் ப்ளூ, மின்ட் க்ரீன், மற்றும் ஐஸ் லீலாக் ஆகிய 3 அற்புதமான மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களில்  கிடைக்கிறது. இது 192 கிராம் எடையுடன்  மிக மெலிதான 8.89 மிமீ சூப்பர் ஸ்லிம் அளவில் கைக்கு அடக்கமாக ஒரு உன்னதமான உணர்வைத் தருகிறது. 8ஜிபி + 128ஜிபி வகையின் அறிமுக விலை ரூ . 14,999 ஆகும். வங்கி அல்லது பழையதை மாற்றுவதற்கான சலுகைகள் உட்பட இறுதி விலை ரூ.13,999 ஆகும். 12ஜிபி + 256ஜிபி வகையின் அறிமுக விலை ரூ. 16,999 ஆகும். வங்கி அல்லது பழையதை மாற்றுவதற்கான சலுகைகள் உட்பட இறுதி விலை ரூ . 15,999 ஆகும்.

2.5கிகா ஹர்ட்ஸ் வரையிலான ஃப்ரீக்வென்சியை வழங்கும் சக்திவாய்ந்த ஆக்டா-கோர் பிராசசரான உலகின் தலைசிறந்த முதல் மீடியா டெக் டைமன்சிட்டி 7025 பிராசசரை மோட்டோ ஜி64 5ஜி தன்னகத்தே கொண்டுள்ளதை பறைசாற்றுகிறது. புத்தம் புதிய இமேஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் கண்ணுக்கு இதமான வீடியோக்கள் மற்றும் மிகச்சிறந்த புகைப்படக் கலை அனுபவத்தையும் பெற்று மகிழலாம். மேலும், இந்தப் பிரிவில் மிக உயர்ந்த விஓஎன்ஆர் மற்றும் 4க்கு4 எம்ஐஎம்ஒ மற்றும் 3 கேரியர் அக்ரிகேஷனுடன்  கூடிய 14 5ஜி பாண்டுகளின் இயக்க ஆற்றலுடனான அதிவேக 5ஜி மூலம், பயனர்கள்  பேட்டரி மின்சக்தி இருப்பு பற்றி எந்த ஒரு கவலையுமில்லாமல் மின்னல் வேகத்தில் கேம்களையும் திரைப்படங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.  

மோட்டோ ஜி64 5ஜி அதன் மிகப்பெரிய பிரமாண்டமான இந்தப் பிரிவிலேயே சிறந்த 6000எம்ஏஎச் பேட்டரி மூலம் நம்பமுடியாத நீண்ட கால பேட்டரி சக்தியை வழங்கி ஸ்மார்ட்ஃபோனை பல மணிநேரம் தொடர்ந்து தீவிரமாக உபயோகிப்பதற்கு உதவுகிறது. கூடுதலாக, டர்போபவர் 33வாட் சார்ஜர் மூலம் அதி விரைவாக  சார்ஜ் செய்யலாம். மோட்டோ ஜி64 5ஜி இந்தப் பிரிவின் மிகச் சிறந்த 12ஜிபி + 256ஜிபி உள்ளக  ரேம் மற்றும் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இது 24ஜிபி வரையிலான கூடுதல் ரேம் பூஸ்ட் உடன் வருகிறது. இது இந்தப் பிரிவின் மிக உயர்ந்த மற்றொரு சிறந்த அம்சமாகும். ஒரு எஸ்டி கார்டு மூலம் மோட்டோ ஜி64 5ஜி சேமிப்பகத்தை மேலும் 1டிபி அளவுக்கு புதுப்பித்து  விரிவாக்கிக்கொள்ளலாம்.  

 

 குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் இந்தப் பிரிவின் முன்னணி ஷேக் ஃப்ரீ 50எம்பி ஓஐஎஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  பின்புறமாக அமைந்துள்ள இதன் இரண்டாவது கேமரா 8எம்பி அல்ட்ராவைடு + மேக்ரோ விஷன் கேமராவாகும். அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ்  வழக்கமான ஒரு  லென்ஸை விட 4 மடங்கு அதிகளவு காட்சியமைப்பை பிடிக்கிறது. 16 எம்பி செல்ஃபி கேமராவையும் இந்த கருவி முன்புறமாக கொண்டுள்ளது. 120ஹர்ட்ஸ் 6.5 இன்ச் முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 120 ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240ஹர்ட்ஸ் லேட்டன்சி டச் மாதிரி விகிதம்,  6000எம்ஏஎச் மின் திறன் கொண்ட பேட்டரி,  நீர்த் தெறிப்புக்களால்  பாதிக்கப்படுவதிலிருந்து கருவியை  பாதுகாக்க ஐபி52  நீர்-திறன், ஹை-ரெசல்யூசன் - ஆல் சான்றளிக்கப்பட்ட டால்பி அட்மாஸ் உடன் இசைவிணைக்கப்பட்ட டியூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்ட ஒலி அமைப்பு, பயனர்கள் ஆண்ட்ராய்டு 14 மற்றும் உத்திரவாதமளிக்கப்பட்ட 3 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் ஆண்ட்ராய்ட்15 க்கு மேம்படுத்திக் கொள்ளுதல்,  திங்க்‌ஷீல்ட், முக்கிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களைச் சேமித்துவைக்கும் மோட்டோ செக்யூர், ஃபேமிலி ஸ்பேஸ்  2.0 செயலி, மையூஎக்ஸ் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

இந்த அறிமுகத்தைத் துவக்கி வைத்து கருத்து தெரிவித்த மொபைல் பிசினஸ் குரூப்-இந்தியா, நிர்வாக இயக்குநர் டி.எம். நரசிம்மன்  "மோட்டோ ஜி64 5ஜி தயாரிப்பானது இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும் , மேலும் இந்த பிரிவின் மிகச் சிறந்த செயல்திறன், மேம்பட்ட பேட்டரி, கேமரா மற்றும் பொழுதுபோக்கு அனுபவம் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம் இப்போதைய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் சாதாரணமாக வழங்கப்படுபவைகளை கடந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்மார்ட்ஃபோன் அனுபவங்கள் மற்றும் இணைப்புகளிடையே ஆழ்ந்து மகிழ்வதற்கான அதிகாரத்தை தனிநபர்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu