உடல்மொழி அறிவோம் - பகுதி 4

மாத்திரைகள் போட்ட உடனே காய்ச்சல் சரியாகிவிடும் போது நாம் ஏன் உடம்பு தானாய் சரிசெய்து கொள்ளும் வரையில் காத்திருக்க வேண்டும்? உடனடித் தீர்வே புத்திசாலித்தனம் என்று எண்ணுகிறீர்களா?

எதையுமே உடனடியாக அணுகுவது என்பதை நம் மக்கள் வேறு மாதிரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். காய்ச்சலை உடனடியாக நிறுத்துவதே ஆகச்சிறந்த அணுகுமுறையாகக் கருதுகிறார்கள்.

ஒரு குப்பைத் தொட்டி இருக்கிறது. அதிலிருந்து துர்வாடை அடித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம். ஒன்று குப்பைத்தொட்டியை எடுத்துச்சென்று குப்பையை கொட்டி விட்டும் வரலாம் அல்லது குப்பைத்தொட்டியை மூடியும் வைக்கலாம். மூடுவதென்பது எளிது.விரைவானதும் கூட. மூடி வைத்தால் தற்காலிகமாக துர்நாற்றம் இல்லாமல் இருக்கும் ஆனால் எப்படியும் உள்ளிருக்கும் கழிவுகள் அதையும் விட ஒரு நாள்  இன்னும் மோசமான துர்வாடையை உருவாக்கும்.

இதே வேலையைத்தான் நம் உடம்பிடமும் நாம் செய்கிறோம். பசியின்றி உண்ணப்படும் உணவு உங்கள் உடம்பில் கழிவாய்த் தேக்கம் கொள்கிறது. தேங்கிய கழிவினை உடல் அடுத்த வேளையிலே கழிவாக வெளியேற்றிவிட எத்தனிக்கிறது. ஆனால் அடுத்தடுத்து நீங்கள் பசியின்றி உணவு எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உங்கள் உடல் தன்னுடைய நிலையை உங்களிடம் தன்னுடைய நிலை பற்றி உங்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணிதான் காய்ச்சல்.

பொதுவாக, தமிழில் காய்ச்சல் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் உள்ள எந்த மரபான வார்த்தைக்கும் ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. நான் எவற்றையெல்லாம் காய்ச்சுகிறோம். எதற்காகக் காய்ச்சுகிறோம். பாகு காய்ச்சல் கேள்விபட்டிருப்போம். வெல்லத்தில் அல்லது கருப்பட்டியில் உள்ள கசடுகளை நீக்க வேண்டியே நாம் அவற்றைக் காய்ச்சுகிறோம். அதே போல உடலில் உள்ள கசடுகளை வெளித்தள்ள உடல் தனக்குத் தானே மேற்கொள்ளும் முயற்சி தான் காய்ச்சல்.

காய்ச்சலை ஏற்படுத்தி நீங்கள் உடம்பில் சேர்த்து வைத்த கழிவுகளை எல்லாம் முழுதாய் எரித்து உடல் வெளியேற்றுகிறது. உஷ்ணம் எரிக்கும் தன்மையுடையதல்லவா? அதனால்தான் கழிவுகள் எரிக்கப்படும்போது உங்களால் உடம்பில் சூடான தன்மையை உணர முடிகிறது.

காய்ச்சல் செய்வது உங்களை சுத்திகரிக்கும் வேலையை. ஆனால் நீங்கள் செய்வதோ குப்பைத்தொடியை மூடி வைக்கும் வேலையைப் போன்றதுதான்.

மாத்திரைகள் நீங்கள் நினைப்பது போல காய்ச்சலைக் குணப்படுத்துவதில்லை. மாறாக காய்ச்சலிலேயே வெளியேறி விடக்கூடிய கழிவுகளை வெளியேற விடாமல் உள்ளே தேக்குகிறது. அழுத்தம் கண்ட எரிமலை வெடித்துச் சிதறுவது போல தேக்கி வைக்கப்பட்ட கழிவுகள் ஒரு நாள் பூதாகரமான ஒரு நோயாய் வெடிப்பது உறுதி.

"உடனடித் தீர்வுகளை வேண்டி மாத்திரைகளையும், பல வழிகளையும் தேடிப்போகும் நம்மால் அவைகள் தாம் தீர்வுகள் அன்றி தீராத பிரச்சனைகளை உருவாக்கி விட்டுப் போகின்றன என்பதைக் கூட நாம் உணரத் தயாராய் இல்லை. காய்ச்சல் மட்டுமல்ல. தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என நமக்கு ஏற்படும் அத்தனை முதல் கட்டத் தொந்தரவுகளும் மிக எளிமையாக முழுமையாக சுத்தம் செய்கையில் நம்மால் உணர முடிந்த உணர்வுகள்.

கழிவுகளைச் சேர்த்து எந்த அளவு உடம்பிற்கு வேலையைக் கொடுக்கிறீர்களோ அந்த அளவுதான் உங்களுடைய தொந்தரவின் வீரியத்தன்மை இருக்கும். அதை உங்கள் உடம்பு உங்களுக்கு உணர்த்துவதே "இதோ பாருங்கள்... நீங்கள் சரியில்லை. நீங்கள் செய்த தேவையற்ற வேலையின் காரணமாக என்னால் சரியாக இயங்க முடியவில்லை. எனக்கு அதிகமான வேலைப்பளுவை தேவையே இல்லாமல் கொடுக்கிறீர்கள். நான் அதை செய்வதற்கு திணறுகிறேன். இன்னொரு முறை இதை செய்ய வேண்டாம்" என்பதை உணர்துவதற்காகத்தான். ஆனால் மாத்திரைகளைப் போட்டு இன்னும் உடலின் இயங்கியலைத் தடுத்து பலவீனப்படுத்துகிறீர்கள்.

அப்போ என்னதான் செய்வது? அப்படியே விட்டு விட்டால் நோய் சரியாகி விடுமா என்றால்... ஆம்! சரியாகி விடும்தான். ஆனால் குணத்தின் வேகம் காய்ச்சலின் போதான நம்முடைய செயல்களைப் பொறுத்து.

இம்மாபெரும் பிரபஞ்சம் துவங்கி இந்த மனித உடல் வரை அத்தனைக்கும் இரு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று உள்வாங்குவது மற்றொன்று வெளியிடுவது.

நம் உடம்பு உணவை உள்வாங்குகிறது பின் அதிலிருந்து கழிவுகளைப் பிரித்து வெளியேற்றுகிறது.

இவ்விரண்டில் ஒரு வேலையைத்தான் ஒரு நேரத்தில் உடம்பால் செய்ய முடியும். உட்கிரகிக்கும் நேரத்தில் வெளியேற்றாது. வெளியேற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே எதையும் கொடுக்கக்கூடாது.

உண்ணும் நேரத்திலே உடம்பு வாந்தியாகவோ அல்லது வேறு எந்த அறிகுறியின் மூலமாகவோ வெளியேற்றுவது போன்ற உணர்வைக் கொடுத்தால் அதற்கு மேல் உள்ளே கொடுக்கக்கூடாது. உடம்பு அதனை நிராகரிக்கிறது என்று பொருள்.

அந்த வகையில் காய்ச்சலென்பது உடம்பு கழிவுகளை வெளியேற்றும் நிலை. இந்த நிலையில் பசி எடுக்கும் வரை நாமாக பசியின்றி எந்த உணவினையும் உண்டுவிடுதல் கூடாது. இதையே வள்ளுவப்பேராசான்

"உற்றசுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே
வரும்மட்டும் அன்னத்தைக் காட்டாதே" என்கிறார். 

இதை உணர்ந்து செய்தாலே உடம்பில் எந்த நோயும் தோன்றாது.

பசி, பசி என்று எழுதுகிறீர்களே... மூன்று வேளையும் சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லையென்றால் அல்சர் வந்து விடாதா? என்று அப்பாவித்தனமாய்க் கேட்கிறார்கள். சாப்பிடாததால் அல்சர் ஏற்படுவதில்லை. பின் எதனால் ஏற்படுகிறது?

 அடுத்த இதழில்...










கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu