பண்டிகையை மகிழ்ச்சியுடனும், மனதை மயக்கும் கர்பா மற்றும் டாண்டியா நடனங்களுடன் கொண்டாடி மகிழும் வகையில் பல்வேறு புதுவித பண்டிகை கால பிரத்யேக டிசைன்களில் வைர நகைகளை ஓரா பைன் ஜூவல்லரி அறிமுகம் செய்துள்ளது.
நவராத்திரி மற்றும் தசரா உள்ளிட்ட பண்டிகைகளை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் மற்றும் ஒற்றுமையின் உணர்வோடும் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில் வைர நகைகளுக்கு புகழ்பெற்ற ஓரா பைன் ஜூவல்லரி கையால் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புதுமைமிக்க வைர நகைகளை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய டிசைன்கள் உங்கள் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதோடு, உங்கள் கொண்டாட்டத்திற்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஓர்ராவின் புதிய நகைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. இவை பாரம்பரியம் மற்றும் சமகால வடிவமைப்புகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளன. நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் உள்ளிட்ட பல்வேறு நகைகள் உங்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளன.
ஓர்ராவின் புதிய நகைகள் இந்தியா முழுவதும் உள்ள கலாச்சார நுணுக்கங்களை பிரதிபலிக்கின்றன. தென் மாநில மக்கள் விரும்பும் வகையில் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் தொங்கல், நெக்லஸ், ஹாரம், காதணி, உள்ளிட்டவற்றை திறமைமிக்க கைவினைக் கலைஞர்களைக் கொண்டு ஓராதயாரித்துள்ளது. வட இந்திய மக்களுக்கு ஏற்ற பவளம் உள்ளிட்ட கற்களை வைத்து அந்த கலாச்சாரம் மற்றும் பண்டிகை காலங்களுக்கு ஏற்ற வகையிலான நகைகளை ஓரா வடிவமைத்திருக்கிறது. இதேபோன்று இந்தியாவின் மேற்கு பகுதி மக்கள் விரும்பும் பாரம்பரியமிக்க மங்கல் சூத்திரங்கள் எனப்படும் செயின் மற்றும் வைரங்கள், கருப்பு மணிகளைக் கொண்ட தொங்கலை வடிவமைத்துள்ளது.
தசரா பண்டிகையையொட்டி சிறப்பு சலுகையாக குறிப்பிட்ட காதணிகளை 49,999 ரூபாய்க்கு ஓரா வழங்குகிறது. ஆனால் இந்த மேஜிக் இத்துடன் முடியவில்லை. உங்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் விதாக, கர்வா சௌத் பண்டிகையின்போது தம்பதிகளுக்கு இடையே உள்ள ஆழமான பந்தத்தை போற்றும் வகையில் இரண்டு தனித்துவமான நகைகளை சிறப்பு விலையில் வழங்க இருக்கிறது.
இது குறித்து ஓரா பைன் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் திபு மேத்தா கூறுகையில், பண்டிகைக் காலத்தில், எங்கள் நேர்த்தியான இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வைர நகை கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் ஒவ்வொரு நகையும் ஒரு தனித்துவமான கதையை கூறுவதோடு, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு உரிய ஒன்றாக இவை இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்களின் புதிய நகைகள் பாரம்பரிய கைவினைத்திறனை சமகால வடிவமைப்புடன் அழகாகக் கலந்து வெளிப்படுத்துகின்றன. எங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் பாணியையும் தனித்துவத்தையும் இவை கொண்டிருக்கும் அதேவேளையில், இந்த பண்டிகைக் காலத்தை அவர்களுக்கு மேலும் உற்சாகமாக்கும் வகையில் உள்ளன என்று தெரிவித்தார்.
ஓர்ராவின் இந்த நகைகள், இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையைத் தழுவி, நவராத்திரி மற்றும் தசரா போன்ற பண்டிகை காலங்களில் அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நகைகள் நாடு முழுவதும் உள்ள இதன் ஷோரூம்களில் கிடைக்கிறது பண்டிகை காலத்தையொட்டி சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை ஓரா வழங்குகிறது.
• குறிப்பிட்ட காலத்திற்கு வைரம் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது
• முன் பணம் இல்லை; வட்டி இல்லா இஎம்ஐ வசதி மற்றும்
• தங்க நகைகளுக்கு 100% எக்சேஞ்ச் மதிப்பு
0 கருத்துகள்