மங்களகரமான அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு, டாடா குழுமத்தின் முன்னணி நகை பிராண்டான தனிஷ்க் இயற்கை நவரத்தினங்கள் பிரிவில் தனது புதிய நகைத்தொகுப்புகளை ருக்மிணி வசந்த் முன்னிலையில் அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, நவரத்தினங்கள் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; அவை நம்முடைய கலாச்சாரம், அடையாளம் மற்றும் அன்றாட நாகரிகத்தின் ஒரு நேர்த்தியான வெளிப்பாடாகும். கோயில் நகைகளின் மீதான ஆர்வம் முதல் வண்ணமயமான கொண்டாட்டங்கள் வரை, வண்ணக் கற்கள் இப்பகுதியின் கலைநயத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மாணிக்கம் மரகதம் மற்றும் பிற வண்ணமயமான இயற்கை கற்களைத் தென்னிந்தியா எப்போதுமே விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில், தனிஷ்க்கின் புதிய தென்னிந்திய முகமாக மாறியுள்ள பிரபல திரை நட்சத்திரம் ருக்மிணி வசந்த், நவீன தென்னிந்தியப் பெண்ணின் அடையாளமாகத் திகழ்கிறார். மனதை மயக்கும் அழகியல் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தி, கைவினைத்திறன் ஆகியவை ஒன்றாக சங்கமிக்கும் 'ஹியூஸ்' நகைத்தொகுப்பின் ஆத்மார்த்தமான உணர்வை ருக்மிணி வசந்த் தனது ஆளுமைமிகுந்த தோற்றத்தினால் பிரதிபலிப்பது ஒரு தனித்துவமான ஒற்றுமையாகும்.இந்த அட்சய திருதியை நாளில் தங்கத்தை அணுகும் முறையை 'ஹியூஸ்' நகைத்தொகுப்பு முற்றிலுமாக மறுவரையறை செய்யும் வகையில் மாற்றியிருக்கிறது. வழக்கமான முதலீடு சார்ந்த நகைகளாக இல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அன்றாடம் அணியக்கூடிய வகையிலும் இந்த நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய 'ஹியூஸ்' நகைத்தொகுப்பு, தங்கத்தில் இன்றைய நவீன காலத்தின் வண்ணக் கதைகளைக் கொண்டாடும் தனித்துவமான வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ₹35,000 முதல் தொடங்கும் இந்த நகைகள், எளிதில் வாங்க முடிகிற மலிவான விலையில், அதேநேரம் உயர்தரமான நகைகளை அதிகம் நேசிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள செதுக்கப்பட்ட வடிவங்கள், ஒளிரும் ரத்தினங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் ஒவ்வொரு வண்ணத்தின் அழகியலை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு நகையும் வண்ணத்தை மையமாகக் கொண்டு, பெண்களின் மனநிலை, அவர்களது தனித்துவமிக்க பாணி மற்றும் ஆளுமைமிக்க குணாதிசயத்தின் பிரதிபலிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ண நவரத்தினங்களில் மீண்டும் கவனம் செலுத்துவதன் மூலம், இப்பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நகைப் பிரிவில் தனது முக்கியத்துவத்தை தனிஷ்க் மேலும் வலுப்படுத்துகிறது.
மென்மையாக நுணுக்கமாக வெட்டப்பட்ட 'கேபோச்சன்-கட்' கற்களின் பயன்பாடு நகைகளுக்கு அழகியலுடன் செதுக்கப்பட்ட பொலிவைத் தருகிறது. அதேசமயம் வண்ணங்களின் அடுக்குகள் மற்றும் 'பஞ்சிங்', 'ஸ்லைசிங்' போன்ற நுட்பங்கள் நகைகளுக்கு ஒரு தனித்துவமான நவீனத் தன்மையையும் அசைந்தாடும் நளினத்தையும் வழங்குகின்றன. மரகதம், அமிதிஸ்ட், சிட்ரின், டூர்மலைன் மற்றும் டான்சனைட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை நவரத்தினங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லும் அதன் ஒப்பற்ற வண்ணம், தெளிவு மற்றும் தனித்தன்மைக்காகக் கடுமையான தரச் சோதனைகளுக்குப் பிறகே தேர்வு செய்யப்படுகின்றன. இது இந்த நகைத்தொகுப்பிற்கு ஒரு அபூர்வமான மற்றும் உண்மையான தன்மையை அளிப்பதோடு, அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான அழகையும் உறுதியையும் உறுதி செய்கிறது. இதில் விசேஷத் தருணங்களுக்கான கழுத்தணிகள் மற்றும் வளையல்கள் முதல், அன்றாட நேர்த்திக்காக வடிவமைக்கப்பட்ட லேசான தோடுகள், மோதிரங்கள் மற்றும் பதக்கங்கள் வரை பல வகைகள் உள்ளன.
இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மையமாக, நவீன தென்னிந்தியப் பெண்ணின் அடையாளமாக ருக்மிணி வசந்த் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். தனிஷ்க் நிறுவனத்துடனான இந்த நீண்டகால ஒப்பந்தம், ஒரு சீசனை தாண்டியும் தொடரும் அவர்களுக்கிடையே உள்ள பொதுவான தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகிறது. வலிமை மற்றும் மென்மை ஆகிய இரண்டையுமே கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ருக்மிணியின் நவீனத்துவமிக்க ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு நகையின் வண்ணத்தையும் அழகையும் முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கலாச்சார ரீதியாகத் தமிழ் மற்றும் தென்னிந்திய மண்ணுடன் தொடர்புடைய அதேவேளையில், நவீனப் பார்வையைக் கொண்ட ருக்மிணியின் வருகை, இந்த விளம்பரத்திற்குப் பெரும் வலிமையைச் சேர்க்கிறது. அவர் மூலம் 'ஹியூஸ்' என்பது வெறும் நகைத்தொகுப்பு மட்டுமல்ல, நவீன இந்தியப் பெண்ணின் மாறிவரும் ஆளுமைமிக்க அடையாளத்தின் பிரதிபலிப்பாக மாறுகிறது.
புதிய நகைத்தொகுப்பு குறித்து டைட்டன் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பெல்கி ஷெரிங் கூறுகையில், “தென்னகத்தின் செழுமையான அழகியல் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், "நவீன இந்தியப் பெண்கள் இயற்கை நவரத்தினங்களை கொண்டாடும் விதத்தை நாங்கள் மறுவடிவமைப்பு செய்கிறோம். தென்னிந்தியாவின் செழுமையான கலைப் பாரம்பரியத்தைப் போற்றும் அதேவேளையில், இன்றைய காலத்திற்கு ஏற்ப இந்த நகைகளை வடிவமைத்துள்ளோம். நகைகள் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தின் வெளிப்பாடாக மாறிவரும் வேளையில், வண்ணங்கள் நிறைந்த நவரத்தினங்கள் அதற்குச் சிறந்த ஊடகமாக அமைகின்றன. இந்தியக் கோடை காலத்தின் துடிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த நகைகள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ருக்மிணி இதன் ஆத்மார்த்தமான உணர்வை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்," என்றார்.
டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி செல்வி கரிமா மகேஸ்வரி கூறுகையில், "ஹியூஸ் நகைத் தொகுப்பின் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய வண்ணங்கள் நிறைந்த நவரத்தின கற்களிலான வடிவமைப்புகளை உருவாக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். இந்தியக் கோடையில் காணப்படும் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான வண்ணங்களை இந்த நகைகளில் கொண்டு வந்துள்ளோம். இங்கு நவரத்தினங்கள் வெறும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை, அவைதான் வடிவமைப்பின் தொடக்கப்புள்ளி. 'கேபோச்சன்-கட்' நுட்பம் கற்களின் இயற்கை அழகையும் ஆழத்தையும் மேலும் மெருகேற்றுகிறது. இது கற்களின் இயற்கையான அழகையும் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மென்மையான, சிற்பம் போன்ற அழகை அளிக்கிறது. இதன் விளைவாக, நவீன இந்திய வடிவமைப்பு குறித்த வலுவான கண்ணோட்டத்துடன் சமகாலத்திய ஒரு தொகுப்பாக ’ஹியூஸ்’ உருவாகியுள்ளது." என்றார்.
தனிஷ்க் உடனான தனது நெருங்கிய உறவு குறித்து ருக்மிணி வசந்த் கூறுகையில், "எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே தனிஷ்க் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்பிக்கை, கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத அழகு என்பதற்கு தனிஷ்க் ஒரு சான்றாக இருந்து வருகிறது. இப்போது 'ஹியூஸ்' பிரச்சாரத்தின் முகமாக அவர்களுடன் இணைவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வண்ணங்கள் மூலம் தனித்துவத்தைக் கொண்டாடும் அதேவேளையில் நேர்த்தியைத் தவறவிடாத இந்த நகைத்தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அழகின் பல்வேறு வெளிப்பாடுகளை இவ்வளவு இயல்பாக ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு கௌரவம்.” என்றார்.
₹35,000* முதல் தொடங்கும் இந்த நகைத்தொகுப்பு, விசேஷங்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பல்வேறு வடிவமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு, தனிஷ்க் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது: நகையின் செய் கூலியில் 20%* வரை தள்ளுபடி மற்றும் தங்க நகை வாங்கும் போது ஒரு கிராமுக்கு ₹201 தள்ளுபடி* வழங்கப்படுகிறது. மேலும், பழைய தங்கத்தை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இது பழைய தங்கத்தை, அர்த்தமுள்ள மற்றும் அணியக்கூடிய நகைகளாக மேம்படுத்துவதற்கான மிகச்சிறந்த நேரமாக அமைகிறது.

0 கருத்துகள்