இப்கோவின் தலைவர், திரு. திலீப் சங்காணி மற்றும் நிர்வாக இயக்குனர், திரு. கே.ஜே.பட்டேல் அவர்கள், நாட்டில் நானோ உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
இந்தியா முழுவதும் 19 மாநிலங்களிலுள்ள, 560 மாவட்டங்கள் மற்றும் 3,477 தாலுக்காக்களில் இந்த பிரச்சாரமானது,10 நாட்கள் நடைபெற உள்ளது.இப்பிரச்சாரம் மூலம் விவசாயிகளுக்கு நானோ யூரியா, நானோ டிஏபி ,நானோ காப்பர் மற்றும் நானோ ஜிங்க் உரங்களைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கப்படும்.
நாடு முழுவதும் நானோ உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் இப்கோ அலுவலர்கள் மூலம், விவசாயிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கங்கள், கருத்தரங்கங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இத்திட்டமானது, விவசாயிகளின் செலவை குறைத்து, விளைச்சலை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இப்கோவின் புதிய தயாரிப்புகளான, நானோ NPK திரவ உரம் (8-8-10) மற்றும் நானோ NPK குருணை உரங்கள் (20-10-10) ஆகியவை இந்தியாவின் உர கட்டுப்பாட்டு ஆணையில் (FCO) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்