கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத ஆலங்குளம் ஜீவா பள்ளிக்கு கண்டனம்

கிருஷ்ண ஜெயந்தி தினத்திற்கு விடுமுறை அறிவிக்காமல் வழக்கம்போல பள்ளியை திறக்கவிருக்கும் ஆலங்குளம் ஜீவா பள்ளிக்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் தேய்பிறை அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் 6ம்தேதி (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நன்னாளை கொண்டாடி மகிழும் வகையில் நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை செப்டம்பர் 6ம்தேதி அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

தென்காசி மாவட்டத்திலும் ராமகிருஷ்ணா, ஜோசப், இந்து பள்ளி, மேற்கு திருநெல்வேலி மேநிலைப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் ஆலங்குளத்தில் அமைந்துள்ள ஜீவா மாண்டிசோரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து விட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளி செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது காலை 7.50 மணி முதல் மாலை 6 மணி வரை முழு நாளும் பள்ளி செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Tamilnadu Public Holidays List - 2023

கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாட விடாததோடு, மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தும் பள்ளிக்கு எதிராக பள்ளிக் கல்வித் துறைக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்ப பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். பள்ளிக்கு விடுமுறை விடாதது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டால், வேறு எந்த பெற்றோரும் கேள்வி கேட்கவில்லை; நீங்கள் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கும் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் சொல்கிறது. பெரும்பாலான பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் தவறுகளை தட்டிக் கேட்டால்... தங்களது பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தட்டிக் கேட்பதில்லை என்பதே நிதர்சனம்.

கிருஷ்ண ஜெயந்தியைத் தொடர்ந்து அடுத்து விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தினங்களில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டும் இப்பள்ளியில் மேற்கண்ட பண்டிகை நாட்களில் பெரும்பாலான நாட்கள் பள்ளி செயல்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

கோடை விடுமுறை

ஏற்கனவே கோடை விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்காமல் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வாட்டி வதைத்த இந்த பள்ளிக்கு எதிராக சம்பத்தப் பட்ட துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டதும், விசாரணைக்கு அதிகாரிகள் வருகிறார்கள் எனத் தெரிந்ததும் அவசரம் அவசரமாக விடுமுறை நாளுக்கே விடுமுறை அறிவித்ததை இப்பகுதி மக்களும், பெற்றோரும் நன்கு அறிவர்.

அதன் பிறகு முறைப்படி நேரில் சென்று பெற்றோர் முறையிட்டும்... மீண்டும் அரசின் உத்தரவை மதிக்காமல், அரசு விடுமுறை நாளில் பள்ளி நடத்துகிறார்கள் என்பது வருந்தத் தக்கது.

முதல்வரின் முகவரித்துறைக்கு புகார் அளிக்கலாம் பெற்றோர்களே!

பெற்றோர்களே... உங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளியும் இதுபோன்று அரசு உத்தரவை மதிக்காமல், பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறதா?
முதல்வரின் முகவரித்துறைக்கு புகார்கள் அனுப்பி முறையிடலாம்.

லிங்க் ; https://cmhelpline.tnega.org/portal/ta/home

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu