கடையத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடையத்தில் ஜுன் 9 நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று, 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற ஜுன் 9ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று, 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்களை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu