உடல்மொழி அறிவோம் - பகுதி 3

இவ்வுலகின் தலைசிறந்த மருத்துவர் நம் உடல்தான் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு மருத்துவம் தேவைப்படாது என்ற உண்மையான கருத்தை உலகுக்குப் புரிய வைக்கும் முயற்சியாக இந்த தொடரை அக்குஹீலர் செள.ஜெயவள்ளி எழுதுகிறார். 


உடல்மொழி அறிவோம் - பகுதி 3

வலியை நினைத்து பயப்படாதீர்கள்!

உணர்வுகளை நிராகரிப்பது அல்லது சரியாகப் புரிந்துகொள்ளாததுதான் நோய்களின் ஆதி காரணியென்றும் அவற்றை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்வது என்பதையும் கடந்த மாத பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். உண்மையில் இதை எழுதும்போதுதான் வாழ்வின் உண்மைகளிலிருந்து எந்த அளவு தூரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.

ஓரறிவு ஜீவனான அமீபாவிலிருந்து, ஆறறிவு ஜீவனான மனிதன் வரை, இதுவரை இருந்து வரும் உலகில் பிறந்திருக்கும் எல்லா ஜீவராசிகளும் உணர்வு என்ற ஒன்றோடு தான் பிறப்பெடுத்திருக்கின்றன.

வாழ்விற்கும், தமிழுக்கும் ஒருசேர இலக்கணம் வகுத்தமைத்த தொல்காப்பியன் கூட உணர்வு நிலையை வைத்துத்தான் உயிரினங்களின் வகைமை பிரிபடுவதாகக் கூறியிருக்கிறார். இதில் உற்றுணர்தல், முகர்ந்துணர்தல், கேட்டுணர்தல், உண்டுணர்தல், கண்டுணர்தல், மனமுணர்தல் ஆகிய அனைத்து உணர்வுகளும் நிரம்பப் படைக்கப்பட்டவன் மனிதன். ஆனால் அவனைத்தவிர மற்ற எந்த ஜீவராசியும் தத்தம் உண்ர்வின் சம நிலையினை இழந்து விடவில்லை. மனிதன் மட்டுமே அதனை இழந்து விட்டான்.

காரணம், ஒரு மனிதன் பிறக்கும்போது இரு நிலைகளைத் தம்முள் கொண்டே பிறக்கிறான். ஒன்று உணர்வு நிலை. மற்றொன்று அறிவு நிலை.

உணர்வின் உயிரோடு தோய்ந்திருக்கும் வரை அவனை எந்த ஒரு இருளும் சூழ்வதில்லை ஆனால் (அறிவென்று கூறப்படும் )அறிவென்ற புறவெளிச்சம் பூசப்படும்போது அதனோடு சேர்ந்து அவனும் அணைந்து போகிறான்.

"உணர்வின் சமநிலை விடுத்து அறிவின் மலையுச்சியை எட்டியதாய்க் கர்வம் கொள்ளும் அதே சமயத்தில்தான், நம் கால்கள் வெகு வேகமாய் அதில் புதையுண்டு போய்க்கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞையே அற்றுப்போய் விட்டது இந்த மனிதகுலம்".

நம்முடைய உணர்வு கைவிட்டுப் போனதெல்லாம் இயற்கையின் இயல்புகளை நிராகரித்து விட்டு இயந்திரத்தைப்போல இயற்கையையும் கணக்கிடத் துவங்கிய இடத்தில்தான். முற்றிலும் இயந்திரத்தனமாக மாறிவிட்ட இந்த வாழ்க்கையில் நீங்கள் அன்றி அவசரங்களும், அவசியமே அற்ற மருத்துவ அறிக்கைகளும்தான் உங்கள் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

தன்னுடைய உடம்பு ஆரோக்கியமானதாக இருக்கிறதா இல்லையா என்று ஒரு மருத்துவர் கூறுவதை வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் நாம், தன் நிலையைப் பற்றித் தானே உங்களிடம் கூறும் உங்கள் உடம்பின் பேச்சை மட்டும் ஏன் ஒருமுறை தவறாமல் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கிறோம்?

மருத்துவரின் புரியாத கையெழுத்தோடு பழகிப்பழகி அதைக்கூட புரிந்துகொள்ள முடிந்த நம்மால் நம் உடம்பினை மட்டும் ஏன் புரிந்துகொள்ளவே முடிவதில்லை?

அதைப்புரிந்துகொள்ள முடியாத ஒவ்வொரு முறையும் தவறான மறு மொழியையே உங்கள் உடம்பிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த அளவு நீர், இந்த அளவு காற்று, இந்த அளவு உணவு என்று ஏதோ ஒரு ஆய்வறிக்கையின் குறிப்புப்படி வாழ நாம் ஒன்றும் சோதனைக்குழாய் சிசுக்கள் கிடையாது. நமக்கென்று சுயமாக உணர்வு உள்ளது. நமக்கென்று சுயமாக உயிர் உள்ளது. நமக்கென்று சுயமாக தேடலும் தேவையும் உள்ளது. அதற்கேற்ப நம் உணர்வுகள் கூறுவதை மட்டும் கேட்டு நடந்தாலே போதுமானது.

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வேளாவேளைக்கு யாரோ ஒரு விஞ்ஞானியின் அளவு கோலின்படி பார்த்துப் பார்த்து கவனமாய் உரம், நீர், உணவிட்டு வளர்க்கப்படும் போன்சாய் மரத்தால் நிச்சயம் ஒரு தன்னிச்சையான காட்டுமரத்தின் உறுதியைப் பெறவே முடியாது.

அதுபோலவே தன்னுணர்வின்றி வளர்ந்து வரும் எந்த மனிதனாலும், எது வாழ்க்கையென்று இறுதிவரை அறிந்துகொள்ளவே முடியாது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, ஒரு சிறிய வலி வந்தவுடனே பதைபதைத்து விடுகிறோம். உண்மையில் வலி என்பது பயம் கொள்ளத் தேவையில்லாத ஒன்று. வலி என்பது நம் உடம்பு வலிமையடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. அவ்வளவுதான்.

ஆம்! பசிக்காதபோது நீங்கள் உண்ணும் உணவு சக்தியாகப் பிரியாமல் கழிவாக உடம்பில் தேக்கங்கொள்கிறது. அவ்வாறு தேங்கும் கழிவுகள் உடலின் இயற்கையான சுழற்சியில் தடையை ஏற்படுத்தி சீர்குலைக்கிறது. அப்போது அந்தக் கழிவுகளைக் கரைப்பதற்காக உடம்பு தனக்குத்தானே ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்துகொள்கிறது. தேங்கிய கழிவுகளை வலியென்ற ஆற்றலின் மூலம் எரிக்கிறது.

அந்த வகையில் அடிப்படையான தொந்தரவுகள் என்று கூறப்படும் சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை கழிவுகளின் வெளியேற்றம்தான்.

இவற்றில் ஏதோ ஒன்று ஏற்படும்போது எந்த விதமான குறுக்கீடும் செய்யாமல், மாத்திரைகள் எதுவும் போட்டு அழுத்தாமல் உடம்பின் போக்கில் விட்டால் உடம்பு மிக நேர்த்தியாக தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும்.

உடனே கேட்பீர்கள்... மாத்திரை போட்டவுடனே காய்ச்சல் சரியாகி விடுகிறதே. பின் நாங்கள் ஏன் உடம்பு தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் வரை காத்திருக்க வேண்டுமென்று. காத்திருக்கத்தான் வேண்டும்..

ஏனென்று அடுத்த பகுதியில் காண்போம்!

பயணம் தொடரும்..!

உடல் மொழி அறிவோம் பகுதி 1 - வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்

உடல் மொழி அறிவோம் பகுதி 2 - வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu