மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதியுதவி

 

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், கீழக்கலங்கல் பேட்டை தெருவை சேர்ந்த கஜேந்திரன் என்பவர், வயலில் வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், அவரது குடும்பத்தினக்கு ஆறுதல் கூறியதுடன், மாவட்ட திமுக சார்பில் ரூ.5 ஆயிரம்உதவித்தொகையை கஜேந்திரனிடம் மனைவி இலங்காமணியிடம் வழங்கினார்.

மேலும் அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் மாவட்ட சார்பில் பெற்று தருவதாக அவர் உறுதியளித்தார். அப்போது கீழக்கலங்கல் ஊராட்சித்தலைவர் சந்திரசேகர், கஜேந்திரனின் மாமனார் மோகன் , மாமியார் தனலட்சுமி, மகன் மதனேஸ், மகள் கீர்த்தனா ஆகியோர் உடன் இருந்தனர்.


கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu