சந்தை ஆராய்ச்சி தளமான கந்தர் உடன் இணைந்து இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி நடத்திய சமீபத்திய ஆய்வில் -ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே கொண்டுச் செல்வதில் குறிப்பட்ட பிராந்தியங்களின் அடிப்படையிலான நுண்ணறிவுகள் எந்தளவிற்கு முக்கியம் என்பதை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் நிதிசார் தயார்நிலை மற்றும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு எந்த நிலையில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள போதுமான தரவை வழங்கியுள்ளது.
காப்பீடு குறித்த விழிப்புணர்வுள்ள, மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள சமூகங்களில் ஒன்றாக தமிழகத்தை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில்ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) குறித்த 100% விழிப்புணர்வும், இதுவரை பாலிசி எதுவும் வாங்காதவர்களிடையே 70% பேர் இன்ஷூரன்ஸ் வாங்கும் நோக்கத்தை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது நாட்டின் சராசரியான 55%-ஐ விட அதிகமாகும்; மேலும் உத்தரபிரதேசம் (58%), மேற்கு வங்கம் (53%) மற்றும் ஆந்திரா & தெலுங்கானா (26%) போன்ற பிற மாநிலங்களை விட இது அதிகமாகும். தமிழ்நாட்டின் இந்த மேலான நிலையானது - இம்மாநில மக்களின் நிதிதிட்டமிடல் மற்றும் நிதிசார் விவேகத்துடன் கூடிய மனப்பான்மையைப் பிரதிபலிக்கின்றது. பதிலளித்தவர்களில் 88% பேர் எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடவும், அதற்காக தயாராக இருக்கவும் விரும்புவதாகக் கூறினர்.
“ஆயுள் காப்பீட்டை பொருத்தவரை விழிப்புணர்வுக்கு அப்பால் செயல்பாட்டிற்கு மாறுவதற்கான தயார்நிலையில் இருப்பதை தமிழ்நாடு தெளிவாக வெளிப்படுத்துகிறது,” என்று இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியின் இணை தலைவர் வெங்கடாசலம் ஐயர் அவர்கள் தெரிவித்தார். இதன் காரணமாக நாங்கள் நடத்திவரும் 'சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ்' என்கிற பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு பிரதான முன்னுரிமை வழங்கவுள்ளோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியால் சமீபத்தில் தொடங்கப்பட்ட 'சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ்' பிரச்சாரத்தின் புதிய பதிப்பினை தமிழ்நாட்டில் மேலும் தீவிரமாகமுன்வைக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதனையடுத்து பின்வரும் சில முக்கிய நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் துரிதப்படுத்தப்படும்:
இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியின் ‘சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ்’ என்கிற காப்பீட்டு விழிப்புணர்வுபிரச்சாரத்தின், புதிய 2.0 பதிப்பு சமீபத்தில் துவங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது டெர்ம் மற்றும் சேவிங்ஸ் காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் வகைகளைப் பற்றிய விழிப்புணர்வை நன்கு ஏற்படுத்துவும், நிஜ வாழ்க்கை உதாரணங்களைக் காண்பிக்கவும் உள்ளது. அதன் மூலம் ஆயுள் காப்பீடு குறித்து புரிந்து கொள்வதையும், அதனை அணுகுவதையும் எளிதாக்கவுள்ளது. இந்நடவடிக்கைகளின் நோக்கம் ஆயுள் காப்பீட்டின் மீதான தமிழக மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதே ஆகும்.
0 கருத்துகள்