வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஓர் புது அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் நம் வாழ்நாள் முழுதும் பயன்படக் கூடிய விசயமாகவும் மாறும்; பல சமயங்களில் மாறியிருக்கிறது. அப்படி கிடைத்த ஒரு உன்னதமான உணர்வையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.
எல்லா விசயத்திற்கும் அப்பாக்களை எதிர்பார்த்து கொண்டே இருக்காமல், அம்மாக்கள் நாமே திட்டமிட வேண்டும். நிதானமாக திட்டமிட்டால் பணம் விரயம் ஆகாது; கடைசி நேர டென்ஷனை தவிர்க்கலாம்.
எங்களது ஐந்து வருட தவமாக கிடைத்த தவப்புதல்வன் முகினின் முதல் பிறந்த நாளை சமீபத்தில் நாங்கள் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் கொண்டாடி மகிழ்ந்தோம். அந்தக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை பகிரும் அதே வேளையில், மழலைகளின் பிறந்த நாளைக் கொண்டாடியபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவம், திட்டமிடல் உள்ளிட்டவை நண்பர்கள் பலருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதால் இங்கு பகிர்வதில் உள்ளபடியே மகிழ்கிறேன்.
குழந்தைகள் வாழ்வின் வரமே. எனது ஐந்து வருட தவமே முகின். அவனது முதல் பிறந்த நாள் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 6 மாத கால ஆன்லைன் தேடலின் பலன் பிறந்த நாள் கொண்டாட்ட பயணம் இனிமையாக அமையக் காரணமானது. பெரியவர்கள் நாம் இப்போது சிந்திப்பதை மழலைகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அந்த கொண்டாட்டம் அவர்கள் நினைவுகளில் மகிழ்ச்சியான பதிவாக அமைய வேண்டும். ஆடம்பரத்தை விட குடும்ப உறுப்பினர்கள் அன்பையும் அரவணைப்பையும் அதிகமாக உணர ஆசைப்படும் பருவம் இது என்பதால், நாங்கள் அவனது பிறந்தநாளை குடும்பத்தோடு நினைவுகளை பதிவு செய்து அவன் ரசிக்கும்படியாக கொண்டாடிட முடிவு செய்தோம்.அந்தமானில் சென்று கொண்டாடிட ஆசைப்பட்டோம். 6 மாதத்திற்கு முன்பே குடும்ப மக்களோடு வாட்ஸ்அப் குழு உருவாக்கி இடத்தை தேர்ந்தேடுத்து, விமான டிக்கெட் முன்பதிவு செய்து, எங்கு தங்க வேண்டும் என்பதில் தொடங்கி, என்னவெல்லாம் எடுத்து வைக்க வேண்டும் என்பது வரை யோசித்து ஆலோசித்து மொத்தமாக பத்து பேர் பயணித்தோம். ஆறு நாள் ட்ரிப் அது. அவன் பிறந்த நாள் அன்று வழக்கம்போல் குளித்து, புத்தாடை அணிந்து கடல் அலைகளோடு விளையாடி மகிழ்ந்தான். இரவு சிறிய பார்ட்டி வைத்து இரவு உணவோடு பிறந்த நாளை இனிதாக நிறைவு செய்தோம்.
வீடு திரும்பியதும் நண்பர்கள் குடும்பத்தாரை அழைத்து வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினோம். அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம். இந்த கொண்டாட்டப் பயணம் இனிமையாக அமையக் காரணமாக இருந்த அனுபவக் குறிப்பை இங்கு பகிர்கிறேன்.
குழந்தைக்கு அசொளகரியத்தை ஏற்படுத்தும் ஆடைகளை தெர்வு செய்யாமல் இருப்பது நல்லது. குழந்தையால் இதை சொல்ல முடியாது. அழுது கொண்டே இருந்தால் நமக்கும் கஷ்டம் தான்.
குழந்தையின் பயணத்திற்கு தேவையானவை:
- அந்தமான் வானிலை நிலையானதல்ல எனவே குளிர் மழை மற்றும் வெயில் என அனைத்திற்கும் ஏற்றவாறு ஆடைகள் பேக் செய்துகொண்டோம். .
- குடை வெந்நீர் பிளாஸ்க்
- வீட்டில் தின்பண்டங்கள் செய்து எடுத்துக்கொன்டோம்(முறுக்கு, சத்து மாவு, அவல், பிஸ்கட் பழங்கள், அங்கு எளிதாக ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உணவகங்களில் கொடுத்தோம் (இட்லி தோசை தயிர் சாதம்)
- காய்ச்சல் சளி இருமல் அலர்ஜி வாந்தி வயிறு போக்கு மூக்கு அடைப்புக்கு நசலின் ட்ராப்ஸ் மருந்துகளை கையில் எடுத்து செல்வது நல்லது.
- குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் குளிர் தாங்கும் ஸ்வெட்டர், காலணி, காலுறை எடுத்துக்கொள்ளவும்.
முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட விரும்பும் பெற்றோருக்கான சில குறிப்புகள் :
அதிக சந்திப்பைத் தவிர்க்கவும்: முதலில் ரொம்ப கூட்டம் வராம பாத்துகிறது அவசியம். குழந்தை எரிச்சல் அடைய வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாக அழ ஆரம்பிச்சிடுவாங்க, நமக்கும் வருத்தமா இருக்கும். முடிஞ்ச வரை ரொம்ப நெருக்கமான உறவுகளை மட்டும் முதல் பிறந்தநாளுக்கு அழைப்பது நல்லது.
இடத்தை திட்டமிடுங்கள் : எந்த இடத்தில் பிறந்த நாள் கொண்டாட போறீங்கன்னு திட்டமிடனும். பார்டி ஹால், லான், வீடு, வீட்டு மொட்டை மாடி பல தேர்வுகள் இருக்குது. உங்க பட்ஜெட் மற்றும் குழந்தையின் வசதி, உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள்.
குழந்தைக்கு சவுகர்யமான உடை: பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குழந்தை உணர்கிற ஒரு முக்கியமான விஷயம் ட்ரெஸ். அதிக நேரம் போட்டுக் கொள்ளப்போவது குழந்தை தான். பார்ப்பதற்கு அழகா இருக்கிறது என்பதை விட குழந்தை அணிந்து கொள்ள சொளகரியமாக இருப்பதே முக்கியம். குழந்தைக்கு அசொளகரியத்தை ஏற்படுத்தும் ஆடைகளை தெர்வு செய்யாமல் இருப்பது நல்லது. குழந்தையால் இதை சொல்ல முடியாது. அழுது கொண்டே இருந்தால் நமக்கும் கஷ்டம் தான்.
தாய்க்கு ஏற்ற உடை : அதே போல் தாய் பால் கொடுக்கும் அம்மாக்கள் போடற உடை அதற்கு ஏத்த மாதிரி இருந்தா நல்லது. அப்போ தான் நீங்களும் பதற்றம் இல்லாம இருப்பீங்க.
இயற்கை அலங்காரம்: அலங்காரம் செய்யும் போது முடிந்தவரை இயற்கையான பொருட்கள் கொண்டு அலங்காரம் செய்யலாம். ப்ளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்க்கலாம். பூக்கள், இலைகள் மற்றும் காகிதம் போன்றவற்றை கொண்டு அலங்காரம் செய்யலாம்.
பிடித்த கேக் : மிக முக்கியமானது கேக். கிரீம் கேக் இருந்தா நல்லது. ஏன்னா குழந்தைங்க அதிகம் விரும்புவது அதைத்தான். அதே மாதிரி கேக் வாங்கும் போது தனியா இரண்டு கிலோவும் அனைவருக்கும் தரத்துக்கு தனியாவும் நம்ம வாங்கிட்டா சாப்பாடு பரிமாறும் பொழுதே கேக் தந்துடலாம். அனைவருக்கும் கேக் பரிமாறிய திருப்தி இருக்கும். அல்லது கப் கேக் கூட வாங்கிடலாம்.
சாப்பாடு ரொம்ப முக்கியம் : இதிலும் நம்ம கவனம் செலுத்தணும். நிச்சயமா குழந்தைங்க விரும்பும் உணவுகள் அதிகமா இருக்கணும். அதுவும் ஆரோக்கியமானதா இருந்தா நல்லது.
ரிட்டர்ன் கிஃப்ட் : ரிட்டர்ன் கிஃப்ட் தருவது இப்போ வழக்கம் ஆயிடுச்சு. அதற்கு தக்கவாறு திட்டம் இருந்தா அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். எந்த வயதை சேர்ந்த குழந்தைகள் எத்தனை பேர் வராங்க என்பதை பொறுத்து பரிசுகள் வாங்கலாம். புத்தகம் தரலாம். குழந்தைகள் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி வாங்கணும். அல்லது கலர் வண்ணங்கள் கொண்ட புத்தகங்கள் இப்படி அந்த வயதை சார்ந்த பரிசுகளா இருந்தா வருகிற குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அழைப்பிதழ் : வருவோர்க்கு ஒரு வாரத்திற்கு முன்பே அழைப்பு விடுதல் அவர்கள் திட்டமிட ஏற்றதாக அமையும் அதில் நேரம் மற்றும் இடத்தை தெளிவாக குறிப்பிடவும் தற்காலத்திற்கு ஏற்றவாறு வாட்ஸப்பில் பத்திரிகை அனுப்பலாம்..
போட்டோகிராபி : நினைவுகளை திரும்பிப் பார்க்க உதவும். வீட்டில் உள்ள நல்ல போட்டோகிராபர் ஒருவரை அனைத்தையும் பதிவு செய்திடச் சொல்லுங்கள். முடிந்தால் ஒரு சிறிய ஆல்பம் போடு கொள்ளலாம்.
நிதானமாக திட்டமிடல்: எல்லா விசயத்திற்கும் அப்பாக்களை எதிர்பார்த்து கொண்டே இருக்காமல், அம்மாக்கள் நாமே திட்டமிட வேண்டும். ஆடை, அலங்காரம், சாப்பாடு, இடம், எவ்வளவு பேர் வரப்போறாங்க, அழைப்பிதழ், ரிட்டன் கிஃப்ட் இப்படி உங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதை முன்னதாக திட்டமிடுவதன் மூலம் கடைசி நேர டென்ஷனை தவிர்க்கலாம். நிதானமாக திட்டமிட்டால் பணம் விரயம் ஆகாது, அந்த நாளும் நம் குடும்பத்துக்கு மறக்க முடியாத இனிமையான நாளாக அமையும்.
நன்னாளில் மேலும் சில நல்லவைகள்:
- மரம் நடுதல்: குழந்தைகளில் ஒவொரு பிறந்த நாள் அன்று ஒரு மரம் நடலாம்
- ஆதரவற்றோருக்கு உதவுதல்
- நினைவுகளை உருவாக்க பயணங்கள்
- நண்பர்களோடு ஒரு சிறிய சநதிப்பு. இதில் நம் குழந்தைகள் அவர்கள் குழந்தைகளோடு விளையாடி மகிழ ஒரு வாய்ப்பாக அமையும்.
- புதுமை செய்தல்: நீங்கள் எதில் சிறந்து விளங்குவீர்களோ அதில் ஒரு படைப்பை பரிசாக அளிக்கலாம். சிலர் ஓவியம் தீட்டுவர் சிலர் கவிதை எழுதுவர் நான் அதில் இரண்டாவது ரகம்.
இதெல்லாம் நான் என் மகனின் பிறந்தநாளில் செய்தது. உங்களுக்கு உதவும்னு நம்புறேன்.
-இசைகலா
1 கருத்துகள்
👍
பதிலளிநீக்கு