உலகின் மூன்றாவது மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இத்தாலியின் மிலன் நகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள ஈஐசிஎம்ஏ 2026 கண்காட்சியில், வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ள நான்கு புதிய மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளதுடிவிஎஸ் ஆர்பிட்டர், டிவிஎஸ் எம்1 - எஸ், டிவிஎஸ் எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஆர்டிஆர் 125 ஆகிய இந்த நான்கு அட்டகாசமான மாடல்களும், அன்றாட மின்சாரப் பயணம் , ப்ரீமியம் நகரப் போக்குவரத்து மற்றும் லேசான எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை எதிர்பார்க்கும் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஈஐசிஎம்ஏ2026 கண்காட்சியில் டிவிஎஸ் மோட்டார் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாபெரும் 19 வாகன வரிசையில், இந்த நான்கு உற்பத்திக்குத் தயாரான மாடல்களும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்த நான்கு மாடல்களும், வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் அன்றாட நகரப் பயணம், அதிநவீன நகர்ப்புறப் போக்குவரத்து மற்றும் ப்ரீமியம் இணைப்பு தொழில்நுட்பத்திலான போக்குவரத்து ஆகியவற்றுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இளம் மற்றும் முதல்முறை ரைடர்களைக் கவர ஸ்போர்ட்ஸ் பைக்கும் களமிறங்குகின்றன. இந்த நான்கு உற்பத்தித் தயாரிப்புகளின் ஐரோப்பியச் சந்தை விலை, இறுதித் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனைக்கு வரும் தேதிகள் போன்ற முக்கியத் தகவல்கள், அந்தந்த நாடுகளின் தொடக்க விழாக்கள் நெருங்கும் போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
ஐரோப்பிய நகரப் பயணிகளின் எதிர்பார்புகளுக்கு ஏற்ற வகையில், குறைந்த செலவில் இயங்கக்கூடிய மற்றும் மிகச்சிறந்த வசதிகளைக் கொண்ட ஒரு சிறந்த எலக்ட்ரிக் வாகனமாக டிவிஎஸ் ஆர்பிட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த பராமரிப்புச் செலவு, எளிமையான பயன்பாடு மற்றும் எந்தவொரு பயணச் சூழலையும் எளிதில் சமாளிக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றுடன் ஐரோப்பிய நகர்ப்புற ரைடர்களின் சிறந்த தேர்வாக இருக்கும். ஆர்பிட்டரில் அப்ரைட் ரைடிங் பொசிஷன், 34 லிட்டர் சேமிப்பக வசதி, பிரத்தியேக பார்க்கிங் அல்லது சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் இல்லாத வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு இதில் கழற்றி எடுக்கக்கூடிய பேட்டரி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியச் சந்தைக்கேற்ற மாடலில் 1.8 கிலோ வாட் மற்றும் 3.1 கிலோ வாட் என இரண்டு விதமான பேட்டரி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை முறையே 70 கிமீ மற்றும் 105 கிமீ வரை பயணிக்கும் வரம்பை வழங்குகின்றன.
டிவிஎஸ் எம்1-எஸ் பி நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண சிறிய நகர ஸ்கூட்டர்களை விட மிகச் சிறப்பான மற்றும் சக்திவாய்ந்த ரைடர் அனுபவத்தை வழங்குகிறது. அதிநவீன வடிவமைப்பு,பொறியியல் திறன்கள், செயல் திறன், மேம்பட்ட சௌகரியம் மற்றும் அன்றாடப் பயணங்களுக்கு ஏற்ற பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 4.2 கிலோ வாட் பேட்டரி மூலமாக இயக்கப்படுகிறது. இது 12.5 கிலோ உச்ச சக்தியை வெளிப்படுத்தி, மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் திறனை வெளிப்படுத்துகிறது. 75 நிமிடங்களில் 10% முதல் 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளமுடியும். 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்புப் பெட்டியில், ஒரு முழு முக ஹெல்மெட்டை வைத்துக்கொள்ளலாம். ஸ்மார்ட்போனை ஒருங்கிணைக்கப்பட்ட எல்டிஇ இணைப்பு மூலம் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தலாம்.
'டிவிஎஸ் எக்ஸ்' சாகச விரும்பிகளுக்காகவே பிரத்தியேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பவர்ட்ரெய்ன் தொழில்நுட்பம், துல்லியமான கையாளுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புதிய தலைமுறை ரைடிங் அனுபவத்தை வழங்கும். ஐரோப்பிய ஏ1 பிரிவின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள டிவிஎஸ் எக்ஸ், முன்பும் பின்பும் 14 அங்குல சக்கரங்கள், அலுமினிய ஃப்ரேம் மற்றும் இரட்டைச் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 10.2 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் முழு வரைபட நேவிகேஷன் வசதிகளை ஒன்றிணைத்துள்ளது.
ஆர்டிஆர்125ஏ1 உரிமம் வைத்துள்ள இளம் தலைமுறையினரையும், முதல்முறையாக பெர்ஃபாமன்ஸ் மோட்டார்சைக்கிள் உலகிற்குள் அடியெடுத்து வைப்போருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 125 சிசி பிரிவில் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஆர் 310, ஆர்டிஆர் 310,ரோனின் மற்றும் ஆர்டிஎக்ஸ் 300 போன்ற பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிள் வரிசைக்கு, ஆரம்பமாக ஆர்டிஆர்125 விளங்குகிறது. முதல்முறை ரைடர்கள் தொடங்கி, ஸ்போர்ட்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் அட்வென்ச்சர் பைக்குகளை விரும்புவோர் வரை அனைவரின் தேவைகளையும் இந்த வாகன வரிசை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது.

0 கருத்துகள்