ஜேகே டயர்ஸ் காரைக்குடியில் முதல் ஸ்டீல் வீல்ஸ் ஷோருமை திறந்தது


இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனது புதிய பிராண்டு ஷோரூமான ஜேகே டயர் ஸ்டீல் வீல்ஸ் ஷோரூமைத் திறந்துள்ளது. அனைத்து டயர் தேவைகளுக்கான ஒரே இடமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ஷோரூம், கேசிபி டயர்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இதனை ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தெற்கு மண்டலம் 1-ன் தலைவர் விஜய் ஜெயராமன் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இணைந்து திறந்து வைத்தனர்.

காரைக்குடியில் கோவிலூர் சாலையில் அமைந்துள்ள இந்த ஷோரூம், சிவகங்கை மாவட்டத்தின் முதல் ஸ்டீல் வீல்ஸ் ஷோரூம் ஆகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க செட்டிநாடு பகுதியின் வணிக மையமாகவும் காரைக்குடி விளங்குகிறது. சுமார் 1,200 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட வீல் அலைன்மென்ட், டயர் சுழற்சி மாற்றம், வீல் பேலன்சிங், டயர் மாற்றுதல், நைட்ரஜன் நிரப்புதல் மற்றும் டயர்களில் காற்று நிரப்புதல் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான 360 டிகிரி சேவை அனுபவத்தை வழங்குகிறது.

திறப்பு விழா குறித்து ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் கூறுகையில், “தமிழ்நாடு ஜேகே டயர் நிறுவனத்திற்கு முக்கியமான சந்தையாகும். வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகச் சேவையாற்றும் வகையில், மாநிலம் முழுவதும் எங்களது இருப்பை விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளோம். புதிய ஸ்டீல் வீல்ஸ் ஷோரூம் மூலம், கார் உரிமையாளர்கள் மற்றும் வாகனக் குழும இயக்குநர்கள் எங்களது முழுமையான டயர் வரிசை மற்றும் டயர் பொருத்தும் சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும். வலுவான, சேவையை மையமாகக் கொண்ட விற்பனை வலையமைப்பின் மூலம், இப்பகுதி முழுவதும் அதிக வசதி, நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu