‘மீத்தி தீபாவளி’ பிரச்சாரத்திற்காக கூஞ்ச் அமைப்புடன் கைகோர்க்கும் பிம் பேமெண்ட்ஸ் செயலி


இந்தியாவில் உருவாக்கப்பட்டு, எம்பிசிஐ பிம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பிம் பேமெண்ட்ஸ் செயலி, தனது ‘மீத்தி தீபாவளி’ பிரச்சாரத்தின் மூன்றாவது பதிப்பின் மூலம் தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பரவலாக்கி வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை, பயனர்கள் பிம் செயலி மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஏழாவது பரிவர்த்தனைக்கும், கல்வி கற்பதற்கான ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்குப் பள்ளிப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்குவதற்காக பிம் பேமெண்ட்ஸ் செயலி பங்களிப்பு அளிக்கும். 

இந்தப் பிரச்சாரத்திற்காக பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வரும் அமைப்பான கூஞ்ச் உடன் பிம் செயலி கூட்டாண்மை அமைத்துள்ளது.குழந்தைகளின் கல்விக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்யும் கூட்டு முயற்சியில் பங்கேற்குமாறு நுகர்வோரை ஊக்குவிப்பதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சி என்பது அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதிலும், புதிய தொடக்கங்களுக்கான நம்பிக்கையிலும், நமது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது உருவாகும் மனநிறைவிலும் அடங்கியுள்ளது. இந்த ஆண்டு, அந்தப் பண்டிகையின் மகிழ்ச்சியையும் அன்பையும் வகுப்பறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பிம் செயலி ஈடுபட்டுள்ளது.  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுவதுடன், சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் பிம் செயலி கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. மேலும், ‘பாரத் கா அப்னா பேமெண்ட்ஸ் ஆப்’  என்ற அடிப்படைச் சிந்தனையையும் இது வலுப்படுத்துகிறது.

இந்த முயற்சியைப் பற்றி, கௌரவ் கொச்சார், சீஃப் ஆஃப் பிசினஸ், என்பிசிஐ பிம் கூறுகையில்,  “‘மீத்தி தீபாவளி 2026’ பிரச்சாரத்தின் மூலம்,பிம் செயலியில் மேற்கொள்ளப்படும் அன்றாடப் பரிவர்த்தனைகளை, குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசியக் கல்விப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்பாக மாற்றுகிறது. கூஞ்ச் அமைப்புடனான எங்கள் கூட்டாண்மை இந்த நம்பிக்கையைச் செயல்பாட்டில் வெளிப்படுத்துகிறது” என்றார்.

கூன்ஜ் ஃபவுண்டர் அண்ட் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் அன்ஷு குப்தா கூறுகையில்  “வழக்கமான பணப்பரிவர்த்தனைகளை நேரடிப் பயனளிக்கும் உதவியாக மாற்றும் பிம் செயலியின் இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். இதன் மூலம், குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசியக் கல்வி வளங்கள் அவர்களின் கண்ணியத்திற்குப் பாதிப்பின்றி கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்” என்றார்.

*சோசியர்ஸ் கோ-ஃபவுண்டர் அண்ட் சிஇஓ மெஹுல் குப்தா*, “‘#மீத்தி தீபாவளி’ பிரச்சாரத்தின் மூலம், இரண்டு எளிய கேள்விகளை நாங்கள் முன்வைத்தோம். பண்டிகைக் காலத்தைக் கடந்தும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை எவ்வாறு தொடர்ந்து வளர்த்தெடுப்பது? டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற எளிய செயலின் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? இன்றைய உலகில், நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதி கைப்பேசிகள் வழியாகவே நடைபெறுகிறது. இத்தகைய சூழலில், அன்றாடப் பழக்கமாகிவிட்ட ஒரு செயல்பாட்டை, பொருட்களை வாங்குவதுடன் மட்டும் நிறுத்திவிடாமல், அதற்கும் அப்பாற்பட்ட சமூக நலனுக்குப் பங்களிக்கும் வாய்ப்பாக மாற்ற முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu