தொழில்முனைவோர்களை உருவாக்கி, அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதல்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வழங்கி வரும் செடாய் அமைப்பின் “பிரம்மாண்ட தொடக்க விழா 2.0 – செடாய் திருநெல்வேலி” நிகழ்ச்சி, “ஒன் டீம் ஒன் கோல்” என்ற மையக் கருத்துடன் வரும் செப்டம்பர் 23-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி ஹோட்டல் ஆப்பிள் ட்ரீயில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சேகர் தேஷ்முக், பாளையங்கோட்டை பெல் குரூப் தலைவர் குணசிங் செல்லதுரை, நடிகரும் மிஸ்டர் இந்தியா மற்றும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்-ஆகவும் விளங்கும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.செடாய் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஏ.எஸ் ரியாஸ் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். ஹனா பல் மருத்துவம் மற்றும் பற்சீரமைப்பு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், செடாய் – திருநெல்வேலி மண்டல இயக்குநர் டாக்டர் வி. பவேதி நாத் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
தொழில்முனைவோர் தங்களுக்குள் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சிக்கான வலுவான வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் செடாய் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட தொடக்க விழா 2.0 நிகழ்ச்சி, தொழில்முனைவோர், தொழில் முனைவதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தொழில்முனைவு, தலைமைத்துவம், தொழில் வளர்ச்சி, நெட்வொர்க்கிங் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து சிறப்பு உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன, என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்