தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப் படவிருப்பது குறித்து மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் அரசாக மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடுத்தகட்டமாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
வரும் 22-09-2026 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 15,30,141 மாணவர்கள் காலை உணவு விரிவாக்க திட்டத்தில் பயனடைவார்கள்.
“தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்வோம்; சொன்னதைச் செய்து காட்டுவோம் என்பதற்கு இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் மற்றுமொரு சான்று ஆகும். மாணவர்களின் நலன் மற்றும் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எங்கள் அரசின் நோக்கம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வெறும் அறிவிப்புகளாக விட்டு விடாமல், அவற்றை செயல் திட்டங்களாக மாற்றி நடைமுறைப் படுத்துவோம்.
இந்த தருணத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள மாணவச் செல்வங்களையும், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் என அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
#politics #TVK #chennai #Tamilnadu #tnpolitics #vijay #cheif minister #Jegadeshwari #Rajapalayam #tvkfortn #tamilagavettrikalagam
0 கருத்துகள்