விஜய் விஜயம் செயலிக்கு வந்த புகார் மீது உடனடி நடவடிக்கை! பொதுமக்கள் பாராட்டு

ராஜபாளையம் ராம்கோ மருத்துவமனை அருகே சாக்கடை பாதையில் கழிவுகள் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி முன்னெடுப்பில் செயல்பட்டு வரும் "விஜய் விஜயம்" செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

புகார் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சாக்கடை பகுதியில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைத்தது.

இந்த விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பெற்று, விரைவான தீர்வை வழங்கும் "விஜய் விஜயம்" செயலி, மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நேரடி தொடர்பு பாலமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu