கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் லீடர்ஷிப் கான்ஃப்ரென்ஸ் 2026’

கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் & அசெஸ்மென்ட் அமைப்பானது ‘கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் லீடர்ஷிப் கான்ஃப்ரென்ஸ் (CELC) 2026’ என்கிற ஆங்கில தலைமைத்துவ மாநாட்டை சென்னையில் நடத்தியது; இதில் கலந்துகொண்ட பல்வேறு தலைமை ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆங்கில கல்வியாளர்கள் உள்ளிட்டோர் உலகம் செயற்கை நுண்ணறிவால் இயங்குவது அதிகரித்துவரும் சூழலில்  பள்ளிகள் எவ்வாறு மாணவர்களை வெற்றிக்கு தயார்படுத்தலாம் என்பது குறித்து விவாதித்தனர். கற்போரை மையமாகக் கொண்ட வகுப்பறைகள், சிறந்த மதிப்பீட்டு முறைகள், தரவு அடிப்படையிலான கருத்துக்கள் மற்றும் தகவல்தொடர்பில் வலுவான அடிப்படை அறிவை வழங்குவது போன்ற முன்முயற்சிகள் எப்படி மாணவர்கள் கல்வி ரீதியாகவும், பணிசார் தொழில்முறையாகவும் வெற்றி பெற உதவும் என்பதும் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது.

ஆங்கிலத் திறன் எனது ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு திறனாக பெருமளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் அது சார்ந்த விவாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1,900 கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட கேம்பிரிட்ஜ் கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி கிட்டத்தட்ட 100% பேர் ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு ஆங்கிலம் முக்கியம் என்று கருதுவது தெரியவந்துள்ளது; அதே நேரத்தில் 30% பேர் ஆங்கிலத் திறன் மற்றும் நம்பிக்கையானது பணியைப் பெறுவதற்கு தங்களுக்கு ஒரு முக்கிய தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (57%) வேலைவாய்ப்புகளுக்கு முழுமையாகத் தாம் தயாராக இல்லை என்று தெரிவித்திருந்தனர். அதே மாணவர்கள் கூறிய மற்றொரு கருத்தின் மூலம் அவர்களுக்கு புரிதல் மற்றும் நம்பிக்கையில் முக்கியமாக திறன் குறைபாடு இருப்பது தடையாக உள்ளதாக கூறியுள்ளனர். குறிப்பாக 80%-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று கூடுதல் விஷயங்களில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தனர்:  தொழில்நுட்ப / தொழில்துறை சான்றிதழ்கள், இன்டர்ன்ஷிப் அல்லது நிஜ உலக திட்டங்கள், மற்றும் ஆங்கில மொழி சான்றிதழ். 

மாணவர்களின் உயர்கல்வி மற்றும் அவர்களின் பணிசார் வாழ்க்கை முழுவதிலும் அவசியமான ஆங்கில மொழி மற்றும் தகவல்தொடர்பு திறன்களை வளர்ப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்குள்ளதைக் கண்டறிய இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் உதவியுள்ளன; இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த தொழில்முறை நிலப்பரப்பில், ஆங்கிலம் பெரும்பாலும் பல்வேறு பிராந்தியங்களில் ஒரு பொதுவான மொழியாக செயல்படுகிறது; ஆங்கிலம் வெவ்வேறு மொழி பின்னணியைச் சேர்ந்த மக்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்துகிறது; தேசிய மற்றும் உலகளாவிய பணியிடங்களை அணுகுவதற்கு உதவுகிறது; எனவே கல்வி செயல்திறன் மட்டுமில்லாமல், ஆரம்பகட்டத்திலேயே மொழியின் மீதான நம்பிக்கை மற்றும் திறனை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. உயர்கல்வி, தொழில்முறை நெட்வொர்க்குகள் மற்றும் விரிவான பொருளாதாரத்தில் இளைஞர்கள் எவ்வளவு திறம்பட பங்கேற்கிறார்கள் என்பதையும் இதனால் வடிவமைக்க முடியும்.

தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ-கள்), பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழி தேர்ச்சியை வலுப்படுத்துவதற்காக - ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது (TNSDC) கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் & அசெஸ்மென்ட் மையத்துடன் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது; இதனால் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட ஆங்கில மொழி கற்றலை உயர்கல்வியில் ஒருங்கிணைப்பதில் தமிழ்நாடு முன்னணியில்   உள்ளது. இன்றுவரை, கிட்டத்தட்ட 800,000 கற்போர் இதில் பங்கேற்றுள்ளனர்; மேலும் 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பயிற்சி பெற்று சான்றளிக்கப்பட்டுள்ளனர். கற்பவரின் திறமையில் அளவிடக்கூடிய வகையில் முன்னேற்றத்தை வழங்கியுள்ளதை  இத்திட்டத்தின் மதிப்பீட்டு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன; இதில் கற்றவர்களில் கணிசமான விகிதத்தினர் ஆங்கிலத்தின் அடிப்படை நிலைகளிலிருந்து இடைநிலைகளுக்கு தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளனர். 

பயனுள்ள தகவல்தொடர்பின் அஸ்திவாரமானது கற்கும் நபரின் பள்ளி பயணம் முழுவதும் சீராக உருவாக்கப்படுவதாக இந்த மாநாட்டில் பங்கேற்ற கல்வியாளர்கள்  எடுத்துரைத்தனர். கேட்பது, பேசுவது, வாசிப்பது மற்றும் எழுதுவது (LSRW) ஆகியவற்றில் வலிமையான திறன்களைப் பெறுவதன் மூலம் கல்வியில் சாதனை புரிவதற்கு உதவுகின்றன; அதுமட்டுமின்றி கற்பவர்களுக்கு நம்பிக்கையை வளர்க்கவும், நுணுக்கமாக சிந்திக்கவும், திறம்பட ஒத்துழைக்கவும், வேகமாக மாறிவரும் வரும் கல்வி மற்றும் பணியிட சூழல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் இவை உதவுகின்றன. வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் கற்பவர்களை ஆங்கில மொழியை நன்கு பயன்படுத்த ஊக்குவிக்க ஒரு முழுமையான ஆங்கிலம் கற்கும் சூழல்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர். வகுப்பறை விவாதங்கள், குழுவாக செயல்படும் திட்டங்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் பாடங்களுக்கு அப்பாற்பட்ட இதர கற்றல் செயல்பாடுகள் என அனைத்திலும் ஆங்கிலத்தை ஒருங்கிணைக்க பள்ளிகள் கற்பவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; அதன் மூலம் சரளமாகவும், நம்பிக்கையுடனும், நிஜ உலக தகவல்தொடர்பு திறன்களை வளர்ப்பதற்குமான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழல்களில், ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டுமே கற்பிக்கப்படாமல் விரிவான கற்றல் அனுபவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வியாக அமைகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் தற்போது கல்வி மற்றும் பணிகளில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் கூறிய கருத்துக்களின் முடிவில் ‘மாணவர்களுக்கு தகவல்களுக்கான அணுகலை விட அதிகமாக தேவை உள்ளதாக தெரியவந்துள்ளது. கேட்பது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவது (LSRW) ஆகியவற்றில் திறன்களை வலுப்படுத்துவதன் மூலம்  - கற்பவர்கள் தகவல்களை சிறப்பாக விளக்குவதற்கும், நுணுக்கமாக சிந்திக்கவும், அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்கவும்,  சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படவும், நம்பிக்கையுடன் உரையாடவும் முடியும்.

இந்த மாநாட்டில் பேசிய கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் & அசெஸ்மென்ட் அமைப்பின் தெற்காசியாவிற்கான நிர்வாக இயக்குனர், அருண் ராஜாமணி அவர்கள் கூறுகையில், “ஆங்கிலம் கற்பதை பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக சேர்ப்பது, ஆசிரியர் மேம்பாட்டு முன்னெடுப்புகளுடன் அதனை ஆதரிப்பது, மற்றும் வலுவான மதிப்பீட்டின் மூலம் தரநிலையை உயர்த்துவது உள்ளிட்ட முன்முயற்சிகளை நாங்கள் தமிழ்நாடு அரசு மற்றும் TNSDC கழகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்; இதனால் கற்பவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்பதற்கும் நேரடியாக உதவும் வகையில் அவர்களது தகவல் தொடர்புத் திறன்களில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்,” என்றார்.

"செயற்கை நுண்ணறிவானது (AI) அன்றாட கல்வியின் ஒரு பகுதியாக மாறியுள்ள சூழலில் - தகவல்களை தொடர்புகொள்வது, பகுப்பாய்வு செய்வது மற்றும் நுணுக்கமாக சிந்திக்கும் திறன் ஆகியவை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இத்திறன்கள் ஒரு குழந்தையின் பள்ளி பயணம் முழுவதும் படிப்படியாக வளர்க்கப்படும் திறன்களாகும்; கேட்பது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவது ஆகியவற்றில் வலிமையான அஸ்திவாரத்தை நிறுவுவது மூலம் இவை நிலைநிறுத்தப்படுகின்றன. எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதை எங்கள் ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன; இருப்பினும் பலர் தொடர்ந்து தன்னம்பிக்கை மற்றும் தகவல்களை பரிமாறுவதில் சவால்களை எதிர்கொள்வதும் தெரியவந்துள்ளது; பள்ளிகள் ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டும் கற்பிப்பதைக் கடந்து மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிறது; ஆனால் கல்வியில் வெற்றி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு உதவும் வகையில் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu