"WAREMAT – TOPACK – AUTOROBOT – COSLOG – WS-AUTX 2026" தொழில்துறை கண்காட்சி! --- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது


தென்னிந்தியாவில் முதல் முறையாக, கிடங்கு மேலாண்மை, சரக்கு போக்குவரத்து, பேக்கேஜிங், தொழிற்துறை தானியக்கம், ரோபோட்டிக்ஸ், குளிர்சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை துறைகளை ஒருங்கிணைக்கும் "WAREMAT – TOPACK – AUTOROBOT – COSLOG – WS-AUTX 2026" என்ற மாபெரும் 3 நாள் தொழில்துறை வணிகக் கண்காட்சி இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் துவங்கி ஆகஸ்ட் 01ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 மிடாஸ் டச் ஈவென்ட்ஸ் அண்ட் டிரேட் ஃபேர்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியை, தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பி.மதன் ராஜா தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் சீட்டாசிஸ் அண்ட் தி ரைஸ் அமைப்புகளின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், ஃபிக்கி இணைத் தலைவர் பூபேஷ் நாகராஜன், டான்ஸ்டியா தலைவர் எஸ்.வாசுதேவன், சி.ஐ.ஏ. தலைவர் டி. தேவகுமார் மற்றும் எம்.எஸ்.எம்.இ. இயக்குநர் தயாளன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள்  பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவெனில், தென்னிந்தியாவில் முதல் முறையாக கிடங்கு மேலாண்மை, பேக்கேஜிங், தொழிற்துறை ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ், குளிர்சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய துறைகளுக்கான நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகத் தீர்வுகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்தக் கண்காட்சியில் 110-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 120-க்கும் மேற்பட்ட நவீன இயந்திரங்கள் மற்றும் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. 

மேலும், 8,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், தொழில் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், வாங்குநர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி இயந்திரச் செயல்முறை விளக்கங்கள், புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள், வணிக இணைப்பு வாய்ப்புகள், கொள்முதல் சந்திப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்துறை ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுவதால், தொழிலை விரிவுபடுத்த விரும்பும் அனைவருக்கும் இந்தக் கண்காட்சி சிறந்த தளமாக அமையும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், கிடங்கு மேலாண்மை நிறுவனங்கள், பேக்கேஜிங் துறையினர் மற்றும் தொழில்துறை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று புதிய தொழில்நுட்பங்களையும் புதிய வணிக வாய்ப்புகளையும் அறிந்துகொள்ளுமாறு மிடாஸ் டச் இவென்ட்ஸ் அண்ட் டிரேட் ஃபேர்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu